செவ்வாய், 25 அக்டோபர், 2022

இந்தியாவில் சூரிய கிரகணம்

இந்தியாவில் சூரிய கிரகணம்: 
தமிழகத்தில் 8% மட்டுமே தெரிந்தது.

சென்னை: இந்தியாவில் பல பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிந்தது.

இதனை மக்கள் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. ‛பகுதி சூரிய கிரகணம்' இன்று (அக்.,25) இந்தியா, ரஷ்யா, கஜகிஸ்தான், வட அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியாவில் மும்பை, டில்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.

சென்னையில் மாலை 5:13 மணிக்கு கிரகணம் தெரிந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சில நிமிடங்களுக்கு மட்டும் மேற்கு வானில் சூரிய கிரகணம் தெரிந்தது.

இதனை மக்கள் அதற்கேற்ற பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
Previous Post
Next Post

0 Comments: