புதன், 19 அக்டோபர், 2022

நட்ஸ் பர்ஃபி

நட்ஸ் பர்ஃபி

 *தேவையான பொருள்கள்*        

 கன்டென்ஸ்டு மில்க் - 100 கிராம், கருப்பு பேரீட்சை பழம் - 6, முந்திரி - 10, திராட்சை - 10, பாதாம் - 10, அக்ரூட் - சிறிது, அத்திப்பழம் - 3, பிஸ்தா - சிறிது, வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி         

 *செய்முறை*           

 மேலே குறிப்பிட்டுள்ள உலர்ந்த பருப்பு வகைகளை தயாராக எடுத்து வைக்கவும்.கருப்பு பேரீட்சைப்பழத்தை பொடியாக நறுக்கவும். திராட்சையை தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக பொடிக்கவும்.வெண்ணெயை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கிய பேரீட்சம் பழத்தை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். வதங்கியதும் திராட்சையை சேர்த்து வதக்கவும்.இதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும்.இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பிறகு அதில் பொடித்த நட்ஸ் வகைகளை சேர்த்து கிளறவும்.ஒரு தட்டில் நெய் தடவி இதை கொட்டி அழுத்தி வைக்கவும். சற்று ஆறியதும் ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வைத்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டவும். மிக சுலபமாக, விரைவில் செய்ய கூடிய, சத்தான இனிப்பு இது.விரும்பினால் இதில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி கூட சேர்க்கலாம். இப்படி தட்டில் கொட்டி வெட்டாமல், பட்டர் பேப்பரில் வைத்து உருட்டி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்ததும் வட்ட வடிவிலும் வெட்டி எடுக்கலாம். அல்லது லட்டு போலவும் பிடிக்கலாம்.
Previous Post
Next Post

0 Comments: