வியாழன், 6 அக்டோபர், 2022

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

*காரசாரமான பச்சை மிளகாய் சட்னி*

பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. மேலும் இது முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

*தேவையா பொருட்கள்:-*

பச்சை மிளகாய் - 20 

சின்ன வெங்காயம் - 50 கிராம்

உளுந்து - 2 டீஸ்பு+ன் 

பூண்டு - 10 

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப 

தாளிக்க:-

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

*செய்முறை:-*

👉 முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.

👉 பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

👉 பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதங்கிய பின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

👉 அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தௌpத்து அரைத்து கொள்ளவும்.

👉 மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பிறகு சட்னியில் சேர்க்கவும். 

👉 காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார். 
Previous Post
Next Post

0 Comments: