வியாழன், 3 நவம்பர், 2022

சிம்ம ராசி அன்பர்களே!

சனிப் பெயர்ச்சி பலன்கள்*_
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

திருக் கணிதப் படி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுப கிருது ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி
16-01-2023 திங்கள் கிழமை மதியம் சுமார் 12- 51 மணியளவில் சனி பகவான் அவிட்டம் 2 மகரம் ராசியில் இருந்து அவிட்டம் 3 கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் 
கும்பத்தில் குரோதி ஆண்டு பங்குனி 14 ஆம் திகதி 28-03-2025 வரை பயனிக்கிறார் ஏறத்தாழ
2வருடங்கள் 3 மாதங்கள் 12 நாட்கள் சனிப் பெயர்ச்சி பலன்கள் கும்பம் ராசியில் இருந்து கிடைக்கும் 

சிம்ம ராசி அன்பர்களே!
சிம்மம் 70% கண்டச் சனி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

70 % நல்ல பலன்கள் கிடைக்கும்

இது வரை வெற்றிச் சனியை அனுபவித்து வந்த நீங்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு பெற்று இருப்பீர்கள் 
நல்ல ஆரோக்கியம் கிடைத்து இருக்கும் 
என்றாலும் முழுமையாக சனி பகவான் உங்களுக்கு நன்மைகளை வழங்கவில்லை
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
என்றாலும் ஒரளவு நிமிர்ந்து நிற்கும் வெற்றி கிடைத்தது 

இப்போது கண்டம் சனி
சனி பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் அமர்ந்து நன்மைகள் செய்வார்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் யோகம் உங்களுக்கு அதிகரித்து உள்ளது 
அப்படிச் சென்றால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்
சித்திரை மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற சுபகாரியங்கள் உண்டு 
வெளி நாட்டு வாழ்க்கை வெளி ஊர் வாழ்க்கையில் 
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
வெளி ஊர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றால் அப்போது நன்மைகள் நாலா பக்கமும் கிடைக்கும் 

ஒரு வேளை நீங்கள் உள்ளூரில் இருந்தால் 
கணவன் மனைவி உறவில் சிறு சிறு விரிசல் ஏற்பட்டு கசப்புகள் காணப்படும் வாய்ப்பு உள்ளது அதற்காக விட்டு கொடுத்து கெட்டிக்காரர் ஆனால் உங்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் தான் 
இந்த கால கட்டத்தில் பார்ட்னர் சீப் கூட்டுத் தொழில் கூடாது

புதிய தொழில் தொடங்க வேண்டாம்

தந்தை வழி அனுசரிப்பு மிகவும் சிறப்பான பலன்கள் தரும் 

வணங்க வேண்டிய தெய்வம்
பழநி தண்டாயுதபாணி சுவாமி
ஞாயிற்றுக் கிழமை
அல்லது தாயார்களோடு இல்லாத முருகன் வழிபாடு செய்வது சிறப்பு 

வெளி இடங்களில் வெளி நாடுகளில் வெற்றி பிரமாண்டமாக இருக்கும் 
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அனைவருக்கும் சனிப் பெயர்ச்சி
நல்ல பலன்களையே தர எல்லாம் வல்ல இறை ஆற்றலிடம் வேண்டுகிறேன்

நம்பிக்கையோடு இருங்கள்
வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்

ஆசிகள்

வெற்றி வெற்றி வெற்றி
Previous Post
Next Post

0 Comments: