வியாழன், 3 நவம்பர், 2022

துலா ராசி அன்பர்களே!

சனிப் பெயர்ச்சி பலன்கள்*_
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

திருக் கணிதப் படி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுப கிருது ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி
16-01-2023 திங்கள் கிழமை மதியம் சுமார் 12- 51 மணியளவில் சனி பகவான் அவிட்டம் 2 மகரம் ராசியில் இருந்து அவிட்டம் 3 கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் 
கும்பத்தில் குரோதி ஆண்டு பங்குனி 14 ஆம் திகதி 28-03-2025 வரை பயனிக்கிறார் ஏறத்தாழ
2வருடங்கள் 3 மாதங்கள் 12 நாட்கள் சனிப் பெயர்ச்சி பலன்கள் கும்பம் ராசியில் இருந்து கிடைக்கும் 

துலா ராசி அன்பர்களே!
துலாம் 75 % பஞ்சமச் சனி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

75 % நற்பலன்கள் கிடைக்கும் சனிப் பெயர்ச்சி

இது வரை
நான்காம் இடச் சனியால் வாழ்க்கையில் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கிறது
வீடு பிரச்சினை
வாகனம் பிரச்சினை
செய்யும் தொழில் பிரச்சினை
உடல் நலம் பிரச்சினை
தாயார்க்கு பிரச்சினை
போதும் சாமி போதும் என்னை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம்
என்று உங்களை தவிக்க விட்ட காலங்களில் இருந்து ஓரளவு நிம்மதி பெருமூச்சு ஏற்படுத்தி நிம்மதி தரும் 
சனிப் பெயர்ச்சி வந்துள்ளது

கவலை வேண்டாம் இனி
வீடு வாகனம் யோகம் உண்டாகும்
உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும்
தாயார்க்கு உள்ள மருந்து மாத்திரைகள் குறையும் புதிய நோய் வராது
அதே சமயம் நீங்கள் வெற்றி பெற்று வாழப் போவதை மட்டுமே நினைக்க வேண்டும்
தேவையற்ற மன குழப்பம் வரக் கூடாது 
இது உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவனம்
அதாவது எப்போது மனம் சோர்வடைகிறதோ அப்போது நீங்கள் உங்கள் குல தெய்வத்தை நினைத்து பார்க்க உடனடியாக மீண்டும் உற்சாகம் பிறக்கும்
வெற்றிகள் கிடைக்கும்
ஆக அடிக்கடி குல தெய்வ கோயிலுக்கு சென்று வர வேண்டும்
சித்திரை மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற சுபகாரியங்கள் உண்டு 

வணங்க வேண்டிய தெய்வம்
வெள்ளிக் கிழமை 
பழமுதிர் சோலை சுப்பிரமணிய சுவாமி அல்லது எந்த ஊரிலும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் வெள்ளிக் கிழமை 

பிள்ளைகள் வழி சற்று தேவை அற்ற கவலை வரும்
நீங்கள் பிள்ளைகள் வழி பொறுப்பை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு விட்டு
வேறு வேலைகளைக் கவனிக்க மள மள வென்று மலைகளை வென்று வெற்றி மாலை கண்டு வாழும் நல்ல காலம் 


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அனைவருக்கும் சனிப் பெயர்ச்சி
நல்ல பலன்களையே தர எல்லாம் வல்ல இறை ஆற்றலிடம் வேண்டுகிறேன்

நம்பிக்கையோடு இருங்கள்
வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்

ஆசிகள்

வெற்றி வெற்றி வெற்றி
Previous Post
Next Post

0 Comments: