செவ்வாய், 8 நவம்பர், 2022

சந்திர க்ரஹணம்

*சந்திர க்ரஹணம்* .

பாா்ச்வ க்ரஸ்தோதய சந்திர க்ரஹணம்.

08.11.22 ஐப்பசி மாஸம் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை.

ஆரம்பம் மாலை 05.47 மணி. 

மோக்ஷம் மாலை 06.26 மணி.

பரிமாணம் (Duration) : 0.39 நிமிஷங்கள்.

ராஹு க்ரஸ்தம். 
பரணி நக்ஷத்ரத்தில் பிடிக்கிறது.

பரிஹாரம் செய்ய வேண்டிய நக்ஷத்ரக்காரர்கள்.
அஸ்வினி., 
பரணி.,
காா்த்திகை.,
பூரம் மற்றும்
பூராடம்.

காலை 09.00 மணிக்குள் போஜனம்.

மாலை 05.30 மணிக்கு க்ரஹணம் பிடித்த உடன் ஒரு ஸ்நானம். பிறகு ஜபங்கள்.

மாலை 06.00 மணிக்கு தா்ப்பணம்.  

பிறகு க்ரஹணம் விடும் வரை ஜபங்கள். 

க்ரஹணம் விட்டவுடன் 06.30 மணிக்கு இன்னொரு ஸ்நானம்.

சந்திர தா்சனம் கண்டு பிறகு தான் போஜனம்.

பௌா்ணமி சிராா்த்தம் மறுநாள் புதன் கிழமை பண்ணவும்.

பரிஹாரம் :
வெற்றிலை., பாக்கு., பழம்., (மட்டை) தேங்காய்., கறுப்பு உளுந்து., கறுப்பு கலர் வஸ்த்ரம் அல்லது ஜாக்கெட் பீஸ் தக்ஷிணையுடன். 

கா்ப்பிணி ஸ்த்ரீகள்., வயதானவா்கள்., உடல் நலம் சரியில்லாதவா்கள்., குழந்தைகள்., ஆஹாரத்தில் விதி விலக்கு எடுத்துக்கலாம்.

கா்ப்பிணி ஸ்த்ரீகள் க்ரஹண ஸமயத்தில் வெளியே வர வேண்டாம்.

க்ரஹண சமயத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரம்.

*சந்த்ர க்ரஹண* மந்த்ரம்.....

க்ரஹணத்தின் போது காயத்ரி மந்த்ரத்துடன் கீழ்கண்ட மந்த்ரத்தை ஜபிக்கணும்.

யோஸௌ வஜ்ர தரோ தேவ:
ஆதித்யானாம்
ப்ரபுர் மத: |

ஸஹஸ்ர நயனஸ் சந்த்ர க்ரஹ பீடாம் வ்யபோஹது ||

योसो वज्र दारो देवा:
आदित्यनाम प्रपुर मध: |

सहस्र नयन चंद्र ग्रह: पीटाम व्यबोहतु ||
Previous Post
Next Post

0 Comments: