கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகளால் சுனாமி ஏற்படுகிறது.
சுனாமி அலைகள் 100 அடி உயரம் வரை எழும் ஆற்றல் கொண்டது.
கடலில் ஏற்படும் சுனாமிகளில் சுமார் 80 சதவீத சுனாமிகள், பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படுகின்றன.
சுனாமியின்போது முதல் அலை அத்தனை வலுவாக இருக்காது. அடுத்தடுத்து வரும் அலைகள்தான் வலுவானதாக இருக்கும்.
சுனாமி அதிக அளவில் தாக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிதான், இதுவரை உலகைத் தாக்கியதிலேயே வலுவான சுனாமி ஆகும்.
14 நாடுகளைத் தாக்கிய இந்த சுனாமியில் சுமார் 2.50 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
சுனாமி அலைகள் மணிக்கு 500 முதல் 800 மைல் வேகம் வரை தாக்கும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 106 மில்லியன் டாலர் வரை சேதம் ஏற்பட்டது.
நவீன சுனாமி எச்சரிக்கை கருவி, ஜப்பான் நாட்டின் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது...
0 Comments: