வியாழன், 17 நவம்பர், 2022

குழந்தைகளுக்கு தேவைப்படும் கால்சியம்...

குழந்தைகளுக்கு 
தேவைப்படும் கால்சியம்...

கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும்.

குழந்தைகள், மாணவர்கள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் சத்து அதிகம். காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது.

கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும். ஏனெனில் 18 வயதுக்குள் தான் எலும்புகள், பற்கள் நன்றாக வளர்ச்சி அடையும்.

நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதய தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம். பொதுவாக 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.

அதே போன்று 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், இளம் வயதினரான 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 மில்லிகிராமும், 19 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லி கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 மில்லிகிராமும், கர்ப்பிணி பெண்களுக்கு 1,300 மில்லிகிராமும் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.
Previous Post
Next Post

0 Comments: