இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 22/1/23
நான் சந்தித்த கதாபாத்திரங்களில்
ஒன்று என்னை ரசிக்க
வைத்தது..
இன்னொன்று விழ
வைத்தது..
மற்றொன்று ஏங்க
வைத்தது..
அடுத்தொன்று அழ
வைத்தது..
இறுதியில்
ஒன்றே ஒன்று
உயிரை கொடுத்து
கொன்று விட்டது!
ஒளிந்திருக்கின்றன..
நம் நிறைவேறா
ஆசைகள்!
சற்று எழுந்து நில்லுங்கள்..
எதிரியும் மிரண்டு
போவான்!
💪😊💪😊
மகிழ் காலை!
பேசும் வார்த்தைகள் யாவும் மீதமின்றி முடிந்து போக..
வார்த்தை தீர்ந்தும் வாய் மூடி பேசும் நம் காதலைக் கண்டு..
நம்மிடை பூக்கும் மௌனம் கூட புல்லரித்து பார்க்கும்..
இப்படிக்கு
உனக்குள் நான்!
🥰🥰🥰
புகைந்து
கொண்டிருப்பதைவிட..
ஒரு கணமேனும்
பற்றி எரிவதே மேல்!
ஹேப்பி மார்னிங்!
குடிக்கும்
பாயாசத்தை விட..
உண்மையை பேசி
அருந்தும்
பச்சைத் தண்ணீர் மேல்!
இனிய காலை!
அன்பின் மொழி மொத்தமும்
முத்தமாய் பேச!
உன்னை நீ
மாற்றிக்கொள்ளாதே..
ஆனால்,
உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்பவர்
கிடைத்தால்..
அவர்களை
எக்காலத்திலும் விட்டு விடாதே!
அணைக்கப்படாத
வரை..
தென்றலும்
சுடும்!
கட்டியிருக்கிறேன்
என் மனதை..
நேசித்து அழைத்துச்
சென்று விடு..
பேரன்பு உலகிற்கு!
பாடல் அனைத்தும்..
உன் நினைவுகளை
அதிகம் தந்து விடுகின்றன!
அழகை
விட..
தேடாத
அன்பு
சிறந்தது!
தேடி அலைந்த போது
வந்து சிக்கிய
கவிதை..
நீ..!
அதை தாண்டுவதற்கான
வேகமும், தீவிரமும் உனக்குள்
உண்டாகும்..
உன் பலம் என்ன என்றும்
உனக்கு தெரியும்..
தடைகளை தட்டிக் கழிக்காதே!
வெறும் வார்த்தை தான்..
யாரும் வந்து
அர்த்தம் தரும் வரை!
உரிமையோடு சண்டையிட்டு
கூடவே இருங்கள்..
உறவுகள் மெய்ப்படும்!
என்றால்
கரை சேரலாம்..
மழை
என்றால்
குடை பிடிக்கலாம்..
தீ
என்றால்
அணைக்கலாம்..
கடல்
என்றால்
நீந்திப் பார்க்கலாம்..
காதல்
சுனாமியென்றால்..
விலகவும்
ஓடவும்
பிடிக்கவும்
மறையவும்
முடிவதில்லை..
வீசி
பொங்கி
ஆர்பரித்து
மேலேறி
உட் புகுந்து..
மூச்சு விடுவதற்குள்
முழுமையாய்
ஆக்ரமித்து விடும்!
விட்டுவிட முயல்கிறேன்
சுதந்திரமாய்...
அவளை..!
இடையே மௌனமாக
நீள்கிறது உரையாடல்..
உன் வருகை நோக்கி
தவம் இருக்கும்
என் வார்த்தைகள்..
உன் அணைப்பில்
நிம்மதியாகிறது
என் உறக்கம்!
பிறரை கெடுத்து
வாழ்வதை விட..
பலருக்கு
கொடுத்து வாழ்வதே
நல்ல வாழ்க்கையாகும்..
கொடுப்பதற்குரியது
பணம் மட்டுமல்ல..
உன்
வார்த்தையும் ஒருவருக்கு
தாகம் தணிக்கலாம்..
உன்
புன்னகையும் ஒருவர்
உள்ளத்தில் விளக்கேற்றலாம்..
உன்
அன்பும் ஒருவரை
மனிதனாய் வாழவைக்கலாம்!
0 Comments: