இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 31/1/23
புரட்டிப் புரட்டிப்
படிக்கும் போதெல்லாம்..
புதுப்புது அர்த்தங்கள்
தோன்றி
என்னைப்
புத்துயிர்க்கச் செய்கின்றன!
உன்னிடம்
சொல்லிவிட முடியும்
ஆனாலும்
நான் சொல்வதில்லை…
நீ என்னை
ஏற்காவிட்டால்
ஏக்கத்தில்
இறந்துவிடுவேன்!
நீ என்னை
ஏற்றுக்கொண்டால்
இன்பத்தில்
இறந்துவிடுவேன்!
சாப்பிட்டதே அதிகமென்று சொல்வோர்..
இங்கே வந்து கைய தூக்குங்க!
ஆதவன் செங்கதிர்..
இந்த விடியல் அழகு!
பிரிவு வேண்டும்,
கட்டாயம்
பிரிந்தே ஆக
வேண்டும்..
தாயை
தந்தையை
சேயை
சகோதரரை
தோழரை
காதலை
துணைவியை
உறவுகளை..
இவர்களில்
ஒருவரையோ
சிலரையோ
அனைவரையுமோ
சில காலம்
கட்டாயம்
பிரிய வேண்டும்..
அன்பு புரியவும்,
அருமை
மேன்மை
தெரியவும்..
தவிப்பு நிகழவும்,
அர்ப்பணிப்பு
ஆசுவாசம்
உணரவும்..
நிகழ்த்திய
நிகழ்த்தப்பட்ட
புறக்கணிப்பின்
துரோகத்தின்
உண்மை நிலை
தெளியவும்..
ஆம்…
பிரிவுக்குதான்
அன்பை உணரும்
ஆத்ம சக்தி
பல மடங்கு அதிகம்!
உண்மை இல்லாத அன்பும்..
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்..
என்றும் நிரந்தரம் இல்லை!
வாழ்க்கையில் உயிருக்கு அடுத்தபடியாக..
ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கும் ஒப்பற்ற பரிசு..
நம்பிக்கை தான்
ஒருமுறை கூட வராத திருமண வாழ்க்கைதான்..
காதல் நிறைந்த
வாழ்க்கை!
சோகங்களும்..
வெல்ல முடியாத
வாதங்களும்..
பேச முடியாத
வார்த்தைகளும்..
மறக்க முடியாத
நினைவுகளும்
கொண்டது தான்..
மனித வாழ்வு
இனிய காலை!
அருந்தும் தேநீரில்
ஓர்
துளி தேநீராக
இருக்க
ஆசை..
ருசியை கூட்ட அல்ல
உன்
இதழ்களை
நான்
ருசிக்க!
ஏற்படும்
ஆசைகளில் இருந்து
மனதை
கட்டுப்படுத்தினாலே
போதும்..
எத்தனையோ
பிரச்சனைகளுக்கு
விடை கொடுத்து
விடலாம்!
அன்பில் திளைக்க..
ஆயுள் கூடி
அழகாய் வாழ
கூடி சேர்ந்து
வனமாய் மாற
சுயம் தவிர்த்து
சுற்றம் தேடு..
சுகந்தம் இனிக்க
வாழ்வே வாழ்
இன்னும் ரசித்திட
இயன்றதை செய்ய..
பேரன்பு சூழ் உலகு!
மீள்வதே இல்லை..
மீண்டது போல் நடித்து கொண்டுதான் இருக்கும்!
வாழ்வியலின் ஓரெழுத்துச் சுருக்கம்..
அவள்!
இல்லாத இடத்தில்
கிடைக்கும்..
சில நாட்களுக்கு மட்டும்
தேவைப்படும்..
சிற்றின்பம் தான்..
கள்ளக்காதல்!
புன்னகையுடன்
எழுவோம்..
அந்த புன்னகை
முழு நாளையும்
அழகாக்கும்!
ஆராயாதே..
மன நிம்மதி
நீங்கிவிடும்!
அன்பான காலை!
நான் வேரற்று
முறிந்து போவேன்..
பெண்ணே!
கிளை விட்டு
கருமை பூசும்
இரவின் நிலவுக்கு..
காதலின் விதிமீறா
காத்திருப்பின் கணத்துக்கே
அஃது பொருந்தும்..
நான்கு விழி
நர்த்தனம் புரிய!
புத்திசாலிகளால்
முடியாததை..
சில நேரங்களில்
பொறுமைசாலி
சாதித்து விடுவான்!
எட்டிப்பார்க்கும்
நிலவின் அழகோ..
கிழக்கை கிழித்து
வானம் எகும்
பகலவனின் ஒளியோ..
புத்தகம் திறந்து
புறப்பட்டு வரும்
அறிவின் உருவோ..
வாசிக்கும் போதே
வசியம் செய்யும்
கவிதையின் கருவோ..
என் மனம் திறந்து
உள்நுழையும் அவள்
என் உயிரோ!
0 Comments: