செவ்வாய், 3 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 3/1/23


இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 3/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 3/1/23

நம் வாழ்க்கையில் நினைத்ததை விட நினைக்காதது தான் அதிகம் நடக்கிறது, 

நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத வ (எ)ண்ணங்களில்..!!

நம்மைத் தேடாத இடத்தில் அன்பை நிரூபித்தல் என்பது அவமானம்,

அது ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது.

பிடித்தவர்களின் புகைப்படத்தை 
புத்தகத்திற்குள் ஒளித்து வைத்தக் 
காலங்களில்,,

கடவுச்சொல்
தேவைப்படவில்லை......

சிறந்தப் பழி வாங்கல் என்பது,

பழியே வாங்காமல் இருப்பது தான்.

இழந்த ஒன்றின் தாக்கம்

இருப்பதையும் கொண்டாட விடாது!

கொஞ்சியக் காலம் யாவும் 
மறந்துப் போகிறது.. 

எல்லாமே கொஞ்ச காலம் தான் என்ற விரக்தியின் உதவியோடு.....

எதிர்பார்ப்போ எதிர்ப்போ
இல்லாது இயல்பாய் சிறு 
பயணம் உன்னோடு, 

குறு குறு விழி மொழியிலும் 
குறுக்கிடும் புன்னகையிலும்
இறகாகுது இதயம்.

இன்னும் இன்னும் இனிதாய்
நெடுங்காலம் தொடர்ந்திட
இச்சையாகுது மனம்.

நேர்த்தி இல்லா எவ்வேலையும் கீர்த்தி பெறாது ...

இறைவன் படைப்பில் எவ்வளவு நேர்த்தி .

காற்றுக்கும் கூட மொழியுண்டு என்றால்,

உன் மூச்சுக் காற்றே என் காதல் மொழி.

அழ‌கை வ‌ர்ணிக்க‌ வார்த்தைக‌ள் கோர்த்த‌க் க‌விதைக‌ள் தேவையில்லை...!

ஆயிர‌ம் அர்த்த‌ம் சொல்லும் விழி கோதும் வீணை மீட்டும் உன் பார்வை ம‌ட்டும் போதும்...!

நீ வெட்கத்தை வெறுமனேக் கொட்டி விட்டுப் போகிறாய்..

நான் வெள்ளைத்தாளில் சேர்த்து வைக்கிறேன் "கவிதைகளாக"

மனசை அப்பப்போ ட்ரிம் செய்து  சந்தோசமா வெச்சிக்கணும்..........

இல்லைன்னா புதர் மாதிரி வளர்ந்து கஷ்டமாகிடும்.........!!

எண்ணம் போல் வாழ்க்கை
எல்லாம் அந்தக் காலப் பழமொழி

பணத்தை எண்ணினால் மட்டுமே வாழ்க்கை என்பது தான் புதுமொழி.

ஒரு மரத்தில் எந்த இலை பழுத்து
எப்போது உதிரப் போகிறது என,
மரம் யோசிப்பதுமில்லை வருந்துவதுமில்லை.

அதன் வேலை...
புதிய இலைகளைத் துளிர்க்க விடுவது மட்டுமே.

-எஸ்.ராமகிருஷ்ணன்.

தூக்கம் எப்போது குறைகின்றதோ... 

அப்போது தான் உனது வாழ்க்கை 
ஆரம்பமாகிறது.

எந்தக் கஷ்டமான சூழலையும் திடமாக தைரியமாக புன்னைகையோடு எதிர்கொள்.

பிறர் உனது மகிழ்ச்சிகரமான முகத்தைப் பார்த்து வியக்கட்டும்.

இக்கட்டான நிலையிலும் நீ இப்படி எப்படி இருக்கிறாய் என்று அதிசயக்கட்டும்.

புகழ்ச்சியில் வளர்பவனுக்குத் தான் பிறர் துணை தேவை..!

முயற்சியில் வளர்பவனுக்குத்
தன்னம்பிக்கையே துணை..!

எல்லா மதங்களுக்கும்
அறம் தான் முதலீடு
அன்பு தான் பாதை
அதில் மனிதமே
விளைபயிர் என்றிருந்தும்
அறுவடை என்னவோ
கழிசடைகளால் 
களம் காணப்படுகிறது.

உள்ளத்தின் உமிகளை
உதாசீனப்படுத்தி விட்டு
நெஞ்சுருக நின்றும்
நெல்லும் இல்லை
அவர்கள் சொல்லும் வேகவில்லை

ஆறுதலுக்கு மட்டும்
ஆன்மீக அரைவேக்காடுகள்
வாயில் வடை சுட்டு
கொள்கைக் கடாயில்
குப்புறப்படுத்து ஓதும்
குரோத நிகழ்வுக்கு கும்மியடித்து
குலவைப் போட்டு
ஜெபிக்கின்றனர் பலரும்
அந்தக் கடவுளும் கடுப்பாகும்படி

மதம் எங்கே....???
இறைவன் தேடுகிறார்

கதவைத் திறங்கள்
காற்று வரட்டும்

மனதை வாசியுங்கள்
அன்பு நுழையட்டும்

மௌனம் மெல்லுங்கள்
அறிவு ஜீரணிக்கும்

நட்பை உணருங்கள்
பிரபஞ்சம் பேசட்டும்

"நமக்கு தாய் தந்தை வாய்ப்பது விதி, 

நண்பர்கள் வாய்ப்பதோ மதி."

பிறகு செலவழிக்கலாம் என்று சேமித்துக் கொள்ளலாம்...!!!

ஆனால்,பின்னாளில் வாழ்ந்துக் கொள்ளலாம் என்று ஒருநாளும் சேமிக்க முடியாது...!!!

சிந்தித்து செயலாற்றுங்கள்.

தாய்.

தாயை மகிழ்விக்க எதையுமே வாங்கித் தர வேண்டாம், 

என்ன வேண்டுமென்று கேட்டாலே போதும்.

கடவுளை வாசிக்கிறேன்....

உன்னோடு பயணிக்கிறேன்???!!

இன்றைய சிந்தனை.

அதிகமாகத் தெரியத் தெரிய

தெரியாதது அதிகம் இருக்கிறது 

எனத் தெரிய வருகிறது..!!!!????

தேவைப்படும் இடங்களில்...

பேசப்படாத உண்மையும்...

ஒருவகையில் பொய் தான்..!

தாய் மடியில் குழந்தை 

குடிக்கிறது "புட்டிப் பால்"

எதிர்காலத்தைக் கணிக்கும் 

சிறந்த வழி

அதை உருவாக்குவது தான்.

ஒருநாள் முழுமை...

மறுநாள் குறைமை...

சிலநாள் சூன்யம்...

ஆனால் உனக்கும் சோர்வில்லை...

எனக்கும் உன் மேல்
சலிப்பில்லை...

தொடரும்
இந்த விளையாட்டு
நம் இறுதி வரை...!

காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது.

ஒன்று...
பணமாகும் போது,
மற்றொன்று...
புத்தகமாகும் போது.

கவலைகளைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள் 

காலமெல்லாம் இன்பம் கிடைக்கும் .
Previous Post
Next Post

0 Comments: