இருளை
வெளிச்சம் போட்டு
எல்லோரும் விரட்டும்
விகல்பம்
விளங்கவில்லை...!
சாத்தானின் இல்லம்
வெளிச்சத்தை
அவசியப்படுத்துகிறது
இறைவன்
வருவதற்கு முன்பே
இருள் இருந்தது...!
ரொம்ப மோசம்
எங்களுக்கு
விடுதலையே தரவில்லை...!
சுதந்திரம்
விடுதலையென்பதெல்லாம்
சுடுகின்ற
எரிச்சல்
காதலோடு
காமச்சிறையில்
வேண்டவே வேண்டாம்
இதற்கு வெளியே
எந்த மோட்ச நிலையும்...!
முனைப்பாக உள்ளாய்...!
தழுவவரும் காற்றை
தன்னிச்சையாக எதிர்த்து நிற்கும்
பூவைப்பாேல...!
சர்வாதிகாரிகளைவிடவும்
காெடூரமானவள்...!
என்
கனவுகளையுமல்லவா
சிறைபிடித்து
வைத்திருக்கிறாய்...!
காெடுத்தச் சலுகையை
அடைய பாேராடும்
பாமர விவசாயி மாதிரி
உன்
காதல் விதிமுறைகள்
புரியாமல்
விழி பிதுங்கி நிற்கிறது
என் காதல்...!
போராட்டத்திலும் சரி
காம
விளையாட்டிலும் சரி
நேசம்
நிறைந்தவனிடம்
தங்களை எளிதில்
தோல்வியடையச் செய்து
மகிழ் நிறைகிறார்கள்
பெண்கள்...!
உடலின்
வேட்கையை விடவும்
மனதின்
ஈரத்திற்கு
உயிர் சாய்க்கிறார்கள்
புதிர்
மூட்டைகள்தான்
அன்பு
கைநீட்டினால்
அவிழ்ந்து கொள்கிறார்கள்
பல
கேள்விகளெழும்
ஆணிடம்
விடையின்றிருப்பதே
சில
வினாக்களுக்கழகு...!
பெண்களை
வெல்வதற்கு வாய்ப்பேயில்லை...!
இருந்தும்
வெல்லப்படுவதிலேயே
விருப்பம்
கொள்கிறார்கள்
விழுந்து விடாமல்...!
பிரபஞ்ச
ரகசியங்களையெல்லாம்
புன்முறுவலுக்குள்
புதைத்து வைத்தபடி...
வரும் நீ
முப்பொழுதும் நிறையும்
மாயம் தானென்ன...?
திக்குமுக்காட வைக்கும்
சொக்குப்பொடிக்கு
காமினியென்று பெயர் வைத்த
சுதிக் கள்வன் யார்...?
என் கற்பனைகளை
கடைவாயிலிட்டு
மென்று ரசிக்கும்
படுவா சிறுக்கியே
வா
ராக் கோலங்களே
மஞ்சத்திற்கு அழகு...!
அழகு
பாடாய் படுத்துமென்பதை
நீ
வரும் வரை
நம்பவேயில்லை
வந்த பின்
நெஞ்சத் தீ
அணையவேயில்லை...!
நீ
தீ சுமந்த பனிச்சிலை
உச்சுக்கொட்டி
உச்சுக்கொட்டி
சிவக்கிறது எச்சின் நிலை
வாடி
கலந்துபேசி
உச்சம் நிறைய வேண்டும்
நம் உயிர்நிலை...!
வென்று குவிக்கிறாள்
வெற்றிகளை
ஒற்றைக் குறிக்காேள்
உள்ளவள்...!
பயன்படுவதேயில்லை
செல்லப்பிராணிக்காக
சாெல்லப்படும்
உபதேசங்கள்...!
வீழ்வதும் மாய்வதும்
கூட
வெற்றுதானே
வெற்றி வேட்கையில்...!
எழுதிக்காெண்டேயிரு
தரமாகவாயில்லை
அவரவர்
எதிர்பார்க்கும் ரகமாகயில்லை
அவ்வளவுதான்...!
தன்னை
இல்லையென்று கூறுவதால்
இறைவன்
படைப்பதையா
நிறுத்திக்காெண்டான்...?
நீ
பத்திரமாய் பாதுகாக்கும்
யாவும்
எனக்கே எனக்கென்பதும்...!
பனி
நனைவை
வெறுக்கவும் கூடுமோ
வெள்ளை ரோஜா...?
மனதோடும்
மரபோடும்
எத்தனை தினம்தான்
மல்யுத்தம் சாத்தியம்...?
மனம்
நிராகரிக்குமெனில்
சொர்க்கமென்ற நிலையேது...?
மெய்யில் வழியும்
ஆசைக்கசிவுகளை
பொய்கொண்டா
மறைக்க இயலும்...?
உன்
செல்ல பிடிவாதமும்
சொல்லச் சொல்ல இனிக்கிறது
புதையல்களையே
பூமி
புறம் தள்ளிவிடுகிறது
பூமகள் நீ
அவியல்களின்
ஆவியையா
அடைத்து வைத்துவிட முடியும்...?
பிரியத்திற்கு
காலம்
எப்போதும் துணைநிற்கும்
வரும் தினங்கள்
விதிவிலக்காயென்ன...?
உறங்கிய
காதல் எழுப்பபட்டு
விட்டது
துயில் பாவிக்கும்
நீ
பார்த்து பார்த்து
கண்மூடிக்கொண்டேயிரு...!
ஒவ்வாெருவரின்
உள்மனத்தேவையும்
ஒன்றே ஒன்றுதான்...!
"தான்
மதிக்கப்பட வேண்டும்"
முடிந்தால்
காெடுங்கள்
இயலவில்லையெனில்
எவரிடமும்
விலகியேயிருங்கள்...!
யாவும்
அன்பின் பிரதிபலிப்பா...?
கட்டிப்பிடித்தபடி
உயிரறுக்கும்
உசிதம்
உத்தியாகிப்போனதே...!
பந்தமெல்லாம்
நயவஞ்சகம் பூணுவதை
வாழ்க்கை தந்திரமென்கிறது
மனசாட்சி
வசிப்பிடம் தேடி
வீதி வீதியாய் அலைகின்றது
பூட்டியே கிடக்கும்
மனங்களை
வசைபாடிக்கொண்டே...!
சகுனியிடம்
ஆலோசனைக்கேட்டு
கிருஷ்ணன்கள்
மண்டியிட்டபடி...!
வெல்லும் சூதை
கூடி
தள்ளி நின்று
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு
சொல்லத்தான் செய்கிறோம்...
தர்மமே வெல்லுமென்று
தலைகோதி விடும்
இதம்
இறைந்துகிடந்ததை
நீ
அமர்ந்து விட்டு
சென்ற இடத்தை
ஸ்பரிசித்து
ஸ்பரிசித்து கோர்க்கிறேன்...!
உயிரை விடவும் சுமையானது...!
இலகு மாதிரியான
கனவுகள்
எத்தனை கனக்கச்செய்கின்றன
எதார்த்தத்தை...!
நோக்கம் தாங்கியவரின்
வாழ்வு
அவரின் அனுமதியின்றியே
நோம்பிற்கு
நேர்ந்துவிடப்படுகிறது
சவால்களால்...!
எல்லோருக்கும்
கோபம் தான்
அவரவருக்கான நேரத்தை
அவரவருக்கு ஒதுக்காமல்
ஏதோவொன்றிற்காக
யாவையும்
பலிகொடுக்கும்
சாதனையாட்டிகள் மீது...!
சுய ஆறுதலும்
நாகரீக பச்சாதாபமும்
கால வேட்டையர்களுக்கு
காலாவதியான
ஊமை மாத்திரைகள்...!
இன்னா
எதுவுமில்லை
சும்மாயென்று எதையும்
என்னாதவரை
இத்து இத்து
செத்துப்போவதற்கு
பாரதியின் மீசையென்ன
அமர்ந்து கொண்டே
அமரனாகும்
சன்னியாசியின் ஜடைமுடியா...?
போவதுமாக உள்ளனர்
நான்
பாதையென்றான பிறகு...!
பாதைசாரிகள்
தாங்களாக இடித்துக்கொண்டு
என்னை
பழிக்கிறார்கள்...!
எத்தனை
குறை பேசினாலும்
பயணிக்க
நெஞ்சம் நல்குவது
பாதைக்கு இயல்பு
பாதையாகிப் போன
எனக்கும் தான்...!
எல்லோரையும்
தலையில் சுமக்கிறேன்
ராவணனுக்கு
எத்தனை
சிரமமாய் இருந்திருக்கும்...!
தடாகத்தில்
நடக்கும் நுட்பம்
தவளை அறிந்திருக்கிறது
பெண்மையின்
பெருமொழி பேசும்
உனக்கு
என்
பொய்மொழி புரியலியே...!
மனதை தட்டித் தட்டி
விருப்பம் கேட்கிறாயே
நீயென்ன
விருந்தாளியா...?
விருந்தே
விழியழைக்கும்போது
வினாக்களில்
ஏன்
பொழுதை விரயமாக்குகிறாய்...?
மிளகளவு
சம்மதத்தில்
என் அங்கமொழி
அறிந்திருக்க வேண்டாமா...?
பெண்
இல்லையென்று
கூறினாலே
உள்ளதென்று பொருள்
நான்
உள்ளேனென்று கூறிய பின்னும்
ஏனடா தாமதம்...?
என்னை விடவும்
நம் நேசம்
நச்சரிக்கரிக்கிறது
கெடுக்காமல்
கொடுத்துத்தான் செல்லேன்டா
உன்னையும்...!
வினாேதமானது...!
அது உன்னாேடே
வாழ்ந்து காெண்டிருக்கும்
அதாேடு
நீீ
தாேற்றுப் பாேனால்...!
தெருக்களிலெல்லாம்
பொய்கள்
குடியுரிமை பெற்று
கோலோச்சி நிற்கின்றன...!
எவருக்காகவும்
திறக்கப்படும் கதவுகள்
புனித நிலையையும்
புறந்தள்ளி
முன்னிலை பெறுகின்றன
முகமூடிகளுக்கு
முகமூடி மாட்டியலையும்
பிசாசுகளுக்கு
சொந்தமாகிப்போகிறது
சாத்தானின்
புவி சாம்ராஜ்ஜியம்...!
எதை
நம்பிதொலைப்பது
மாயைகளின்
கானல்நீர்
கலாச்சாரத்திற்குள்...?
பாவம்தான்
பச்சோந்தி வேடம் தரிக்க
லாய்க்கற்ற
பச்சையர்கள்...!
சூது
கற்க மறுப்பவர்களே
சூதிலிருந்து
தப்பிக்க வேண்டுமானால்
சூது
அறிந்திருங்கள்
மாறின்
உங்கள் சுயத்தையே
உலகம்
சூது என்று நகைக்கும்...!
இனிக்கிறது காதலில்...!
விழப்போவது
உன்மீது தானேயென்ற
ஏக எக்களிப்பில்
விழுவதும் தித்திக்கிறது...!
விழுவதைத்தவிர
வேறென்ன
சுகம் இருந்துவிட
முடியும்
மழையின் வாழ்வில்...?
ஆணருவி
இத்தனை வேகம் குதிப்பது
நதியோடு
சங்கமித்து
பயணிக்கத்தானே...!
வரம்பு
என்ன செய்து விடும்
வெள்ளம்
வீரியத்துடன் வரும்போது...?
குளிரிலும் வியர்க்கும்
உன் மனதும் உடலும்
கேட்காததையா
என்னால்
கேட்டுவிட முடியும்...?
நம்மிலிருந்து
எவ்வாறு மீதப்படலாம்
சுகங்கள்
நாம் காத்துக்கிடக்கையில்...?
0 Comments: