ஞாயிறு, 8 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 8/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 8/1/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 8/1/23

சிம்மாசனம்
அமைத்துக்காெடுத்தாய்
ஞானபீடத்தில்...

காலவெளியில்
வழிபாேக்கனாய் திரிந்த
என்
நாடாேடி கவிதைகளுக்கு...!

எட்டுமணி நேர
பயண இறுதியில்
சட்டென  
விட்டுச்செல்கிறாய்
உதடு பிரியாத
உயிர்ப்புன்னகையை...!

கவிதையின்
கடைசி வார்த்தையில்
உயிரை
ஒட்டியனுப்பும்
தந்திரக் கவிஞனை பாேல...!

உதட்டிலிருந்து, 
உள்ளத்திலிருந்து, 
உயிரிலிருந்து, 
அரிதாய்
ஆத்மாவிலிருந்தும்
அவதரிக்கிறது
காதலும்,கவிதைகளும்...!

கருணை
மனதில் பிறந்தாலும்
செயலில்தான்
உயிர்ப் பெறுகிறது...!

தயாளனாவதற்கு
தாராளனாக இருக்க
வேண்டுமென்பதில்லை!
பிற உயிரை
தன்னுயிராய் பாவிக்கும்
உயிர்தர்மம்
உணர்ந்தால் போதும்...!

நீ
வாங்கவே முடியாத
நிம்மதியை
ஈதல்
உன்மீது எளிதாய்
வீசிச் செல்கிறது...!

சிறுமியிடம்
அறிந்து கொள்வோம்
ஆத்மாவின் ஆசைதனை...!

நான்
இதம் கேட்கிறபோது
ரணம்
தருகிறாயே
கொடுப்பதற்கு
வேறொன்றுமில்லையா...?

உன்னை
பொறுத்தவரை
ரணம்
கொடுப்பதுதான்
வள்ளல் தன்மையா...?

எவ்வாறு
இயலுகிறது உன்னால்
அமுதக் கிடங்கிற்கு
அதிபதியாய் இருந்துகொண்டு
விஷத்தை மட்டுமே
வெகுமதியாய்
கொடுப்பதற்கு...?

உகந்தவளே
உனக்குத்தெரியுமா...?

காதலுக்கான பொழுதுகளை
நான்
லட்சியத்திடமிருந்து
கடன் வாங்க
வேண்டுமென்பதை...!

காலமென்னை
கனவுகளுக்கு
நேர்ந்துவிட்டு விட்டது

என்
சுய பச்சாதாபங்கள்
பயனற்றவைகள்

நீ
குளிர்ந்த நீர்தான்
நெருப்பிற்கா
அதை
நேசிக்கத் தெரியும்...?

லட்சியம்
என்னை
உலகிற்கே கொடுத்தாலும்
நீ
மட்டும்தான்
என்னை எனக்கே
சமர்பிக்கிறாய்...!

இருந்தாலும்
நான்
கனவுகளுக்கு
நேர்ந்து விட்டவன்...!

நான் எரியும் வெளிச்சத்தில்
நான்குபேர்
பயனுற வேண்டும்
பிறவி
அதன்பயனை
அவ்வாறே
என்னிடம் சொல்கிறது...!

இத்தனை
அழகாய் சிரிக்கிறாய்
ஏன்
சிதைந்துபோகிறேன்
நான்...?

சுகமும்
சுக்குநூறாக்குகிறது
இடைவெளி
நமக்கு இடைபடுகையில்...!

வாடி
தூரம் தொலைப்போம்
எதையும் நமதாக்கி
நம்மில்
நாம் தொலைவோம்...!

மதியில்லா உலகம்
தேடியலைகிறது
நாம்
தொலைந்து சுகிப்போம்
பிரபஞ்சமென்பது
கூடு அல்ல...!

வீரத்தின்
விசித்திரக் கோணம்
நான்

அநீதிக்கப்படும்
நயவஞ்சிக்கப்படும்
சோதனைக்குள்ளாக்கப்படும்
தருணங்கள் கண்டும்...

அவ்வாறு
செய்யப்படுகிறேன்
என்பதை
அறியாமலிருக்கிறேன்
என்றெண்ணும்
உங்கள் நினைப்பின் 
மீது நின்று
சிரிக்கிறோம் நானும் தைரியமும்...! 

நாட்களின் இடுகாட்டில்
நீங்கள்
அஸ்தியாகப்போகும்
அவலநிலை கண்டு...

நானும்
எத்தனைதான் பறப்பது
மிக
அருகில் தெரியும்
தொடுவானம் நீ...!

பாவம்
இதயம் என்ன செய்யும்
பூமிக்கு கீழும்
வானமிருப்பது
கூறுகெட்ட 
புத்திக்கு புரிவதேயில்லை...!

விரோதத்திலும்
நேர்மை கடைபிடியுங்கள்
எதிர்ப்பிற்குரிய
எதிரிகளே...!

வருகின்ற சந்ததிக்கும் 
மரபியல் பண்புகள்
கடத்தப்படுகின்றன
உங்கள் வாரிசுகளை
பதரு சத்ருக்களாய்
பார்க்கவா விரும்புகிறீர்கள்...?

நேர் பயணத்தின்
கர்வத்தைவிட
நேர்த்தியென்பதேது
முத்தான ஆயுளுக்கு...?

உன்
மரணத்தில் கூட
எதிரி வீழ்ந்துபோகவேண்டும்
அல்லாத வீரியம்
கோழையின் மீசைக்குள்
குடியிருப்பது போன்றது...!

தோல்வியென்பதொன்றும்
வீழ்ச்சியல்ல
வெற்றிக்கு முந்தைய படி
அவ்வளவுதான்...!

வெகுமதியைத் தவிர
வெற்றியிடம்
வேறறொன்றுமில்லை
தோல்வி
பன்முக பாடக் குவியல்...!

வெற்றி
அரூப சூழ்ச்சிகளின்
பிதா
தோல்வி
சொரூப வாஞ்சைகளின்
பிதாமகன்...!

எந்நிலையிலும்
மமதையை கொடுக்காத
தோல்வி
வெற்றியை விட
நூறு மடங்கு பண்பட்டது...!

உலகம்
தலைகீழாக செயல்படுகிறது
வாழ்நாள் முழுவதும்
விட்டுக்கொடுக்கும்
தோல்விக்கு
இனியாவது
கோலாகலம் செய்யுங்கள்...!

வசிய
மந்திர தந்திரம் தள்ளிவைத்து
இந்திரியத்தால்
குளிப்பாட்டடா கம்பீரனே
பிசுபிசுக்காத 
மெயிற்கேது பிறவிப்பயன்...?

முறுக்கேறிய கிறுக்கனே
கரடுமுரடாய் கையாளடா
நானொன்றும்
பழுதுபட்டுவிட மாட்டேன்
எப்படி உழுதாலும்
மகிழ்ந்தே திளைக்கும்
ஈர நிலம்...!

அவய துன்புறலில்
ஆடிக் களிக்கிறது
பேரின்பம்
அரங்கேற்றடா அடாவடியை
அவ்வப்போது
பூக்களுக்கும் வேட்டை பிடிக்கும்...!

மரணமே

உன் 
தந்திர சூட்சுமங்களை
தவிர்த்து, என்னுடன்
பாேராடி
வென்றுபார்...!

என் உயிரிடம் பாேய்
யாசகம் கேட்காமல்...!

பலசாலிகள்தான்
வார்த்தைகள்
ஆனாலும்
உன் பாசத்தில் வழுக்குகின்றன...!

இதயத்தில்
சறுக்கிவிழும்
ஏக்கங்களைப் பாேல
உன்
இனியக் குரல் கேட்டதும்...!

இதுகூட
தெரியாதவளா நீ...?

எத்தனை
பெரிய சப்தமும்
மௌனத்தில் சங்கமித்து
நிசப்தமாவதுதானே
நியதி...? 

அகிம்சை ஆடுகளத்தில்
போர்க்குணம்
பொருந்தாதோயென்ற
எனது
சிறு ஐயம்
பெருங்சந்தேகத்திற்கு
ஆளாக்கப்படுகிறதோ...?

வீழ்த்துவதல்ல என் நோக்கம்
வெல்ல வேண்டும்
சில்லும்
ஏற்றத்தாழ்வின்றி
இருவரும்...!

எனக்குத் தெரியும்
உன் கனவு
நினைவெளியெல்லாம்
ஆகோஷித்து நிற்கும்
என்
பிம்பப் பிரதிகள்...!

மகரந்தத்தை
தூதனுப்பாத
பூவை
தேனீ தீண்டுவதேயில்லை...!

இருண்மையிலிருந்து
சூரியன்
ஜனிப்பதும்
பூகோள நியதிதானே...!

நாணம் 
போர்த்தித் நடக்கும்
நீயும்
கவனம்
உடுத்தி பிரவேசிக்கும்
நானும்
பயணிப்பது
பெரும் நேசப் பிரயாணத்தில்...

ஒருநிலை
தேடி
இரு ஜீவக் கீற்றுகள்...

நீயென்ன
மனோவியல்
ஆராய்ச்சியாளனா...?

என்
கண்ணில்
மின்னலடிப்பதையும்

மூளையில்
இடி இடிப்பதையும்

மனதிற்குள்
மழை பெய்வதையும்

உயிரில்
பனி வீழ்வதையும்

உடலின்
கத்திரி வெய்யிலையும்

கணக்கிட்டு
கச்சிதமாய் கூறுகிறாயே
நானே
மெச்சும் வண்ணம்...!

என்னுள்
நீ
புயலடிப்பதை மட்டும்
புரியாதது போலே
போகின்றாய்...!

அதை மட்டும்
நான் கூற வேண்டுமோ...?

கணங்கள் யாவையும்
நிதானமாக கையாள்...!

விரயமாகும்
சமயத்தின் மகத்துவத்தை
கடந்துணர்ந்து
கடுகளவும் பயனில்லை...!

மாயாஜாலத்தை
மனதிற்குள் புகுத்தி
காலத்தை
களவாடும் கலையில்
வல்லமை வாய்ந்த
நேரந்தின்னிகள் நிறைய வந்துவிட்டன...!

பூமியில் நிகழும்
மிகப்பெரிய
போட்டியே
மானுட நேரத்தை
அபகரிப்பதில்
யார் முதலிடமென்பதே...!

கேளிக்கைகள்
லட்சியங்களை
தன்னுள் மாய்த்துவிடும்
போலிருக்கிறது...!

ஆகர்ஷணம் அன்பளிப்பாகவே
பெற்றுக்கொள்கிறது
பெரும்பாலனோரின்
பிழைப்பு 
காலத்தைக் கூட....!

காலத்தை
கையாளத்தெரியாதோரின்
ஆயுள்
அர்த்தமற்றுப் போகிறது

பொருளின்றி போனால்
வாழ்வும்
வரலாறும்
எவரெவரையோ
காண்பித்து
உன்னை நகைக்கும்...!

உன்னை
என்னில் பாதியென்பதா
இல்லை
பிரதியென்பதா தோழி...?

என்னில்
நான் காணா
தேசங்களிலும்
நீ
பயணித்து
தட்ப வெப்பத்தை தரப்படுத்துகிறாய்...!

உன்
ரகசியமும்
என்
ரகசியமும்
நாம்
ரகசியமாகுமே...

இடைக்காலம்
மட்டுமே
வாழ்வின்
கொடைக்காலமாக நிற்கின்றது...!

நல்ல
அடைமொழி சுமந்து
ஆயிரம்
உறவுகள் வரலாம்...!

நீதானடி
என் சுதந்திரச் சொந்தம்

கால 
கிரியைகள்
இல்லையென்றானால்
இவ்வாறே
ஜீவமுக்தி எய்திவிடலாம்...!

ஏதேதோக் கட்டுப்பாடுகள்
விதிக்கிறாய்
உன்
தேகம் நோக்கும்
என்
பார்வைகளுக்கு...!

மறுமொழியின்றி
ஏற்கிறேன் 
நானும்

என்
கண்முன் நிறுத்துகின்றன
உன்னை
கனவுகள்
நானும்
எண்ணாதவாறு ஏவாளாய்...!

மயக்கத்தில்
விழிக்கிறேன்
மறுபடி
காண முடியவில்லை

கனவுகளுக்கு
எத்தனை சுதந்திரம்...?

நீயென்ன
நினைத்து விடக்கூடும்
எனக்கான
ரகசியமென்பதை
தவிர...?

வலுக்கட்டாயமாக
களவாடப்படும்
என் பொழுதுகளில்
நீயிருப்பதைத்
தவிர
நிம்மதி ததும்பும்
துளிகளெல்லாம்
மூர்ச்சைக்குள்
மூழ்கித் தொலைகின்றன...!

சூரியன் எரிவதற்கும்
ஈரம்
எங்கிருந்தோ
வடிந்துகொண்டேயிருக்கக்கூடும்
தாகம் தணிந்து
தனல் 
தரித்துக்கொள்வதற்கு

அசூரன்
கடைவிழி நீர்த்திவலைக்குள்
அதோ
தாய்மை நீச்சலடிக்கிறது
மூழ்கவே மூழ்காமல்...!
Previous Post
Next Post

0 Comments: