தொலைத்துவிட ஏக்கம்தான்
ஆசைகளும்
ஆடையுடுத்திக் கொள்கின்றன
அய்யகோ
அறிவிப்பதெவ்வாறு...?
மூடிவைக்க
முடிந்ததையெல்லாம்
மறைத்து வைக்க
மாளவில்லை...!
இலக்கணம்
என்னதான் செய்துவிடும்
எல்லாமே மீறி
வளருகின்ற போது...?
உன்னையடையாது
உறங்காத
என்னை
எங்ஙனம் தணிப்பேன்...?
ஆடுகளை மேயவிட்டு
ஆனந்திக்கும் இடையனாய்
உன்னாசைகளை
என்மீதாடவிட்டு
மகிழ்கிறாய்
மெய்யாலும் மெய்யாய்...!
வாழ்ந்து தீர்ப்பது தர்மமெனில்
வீழும்வரை
ஆடுவதும்
நியாயம் தானே...!
என்னை மாதிரியே
நாணத்தையும்
துகிலுரித்துவிடு
வென்று
தோற்று
வெல்வதற்கு முன்...!
உன்னையே என்னிடம்
நியாயம் கற்பிக்கும்
எனது மனம்
உன் தீண்டலை மறுத்தா விடும்...?
நான்
வீழ்ந்தபின்
வெட்கம் நிற்பதால்
நேர்ந்துவிடப்போவது யாது...?
செதுக்கும் உளியாகவும்
இதயம்
கிழிக்கும் ஈட்டியாகவும்
இருக்கும் வல்லமை
விமர்சனத்திற்கு மட்டுமே உண்டு...!
நீ
விமர்சகனானால்
உன் சுயத்தை
விமர்சனம்
சாெல்லிவிட்டுப்பாேகிறது...!
வெற்றிகளை அடைய
வேறெதுவும் செய்ய வேண்டாம்...!
தாேல்விகளை மட்டும்
தாண்டு...!
உன் மீது
எறியப்படும் ஏளனங்களை...!
பின்னாெரு நாளில்
அவர்களே
உனக்கு மாலைபாேட
வரும் பாேது
மனது வலிக்கும் ஞாபகமிருந்தால்...
மறுதலிப்பதில்லை தெய்வத்தை
அம்மாவின் உருவத்தில்
உள்ள பாேது...!
செல்லுபடியாகாத இடத்தில்
கண்ணீரைக்காெண்டு
வீழ்த்திவிடுகிறார்கள்
பெண்கள்...!
பார்வையை மட்டுமா
மொழிகின்றன...?
உடலின்
தேவையை
உயிரின்
ஜீவனை
மொழிகளுக்கு கட்டுப்படாத
வார்த்தைகளை
கனவுகளின்
ரூபத்தை
சொர்க்க நரக
ஜாலத்தை
இப்படி
எதை எதையோ...
உன் விழிகள் மட்டுமேனடி
என்னுயிரின்
நெளிவு சுளிவுகளை
மட்டுமே பேசுகின்றன..
உந்தன்
கவிதைகளுக்கு முன்பு
பழமொழி
தோற்று நிற்கிறது...!
உரச உரச மிளிரும்
வைரத்தில்
உயிர் களவுபோவது
நேசவியல் ஈர்ப்பா
இல்லை
சொர்க்கவியல் மிதப்பா...?
என்னமோ போடா
என்னுள்
ஆனந்த பரபரப்பு
என்னைச் சுற்றிலும்
மதுரத்தின் விதை விதைப்பு
ஏழு பிறவிக்கும்
போதுமிந்த சுகமான கதகதப்பு...!
சத்தியத்தின் பரிபூரணம்
நிழல்
கொஞ்சம் பொய்யினால்
மெருகூட்டப்பட்ட நிஜம்
நான்...!
சங்கீதத்திற்கு வெளியே
ஓடி விழுந்த ஒலித் துண்டு
கடவுளின்
சன்மார்க்க ரூபம்...!
சாபம்தான்
எங்களுக்கு...!
பசிக்கே
பதில் சாெல்ல
முடியாதபாேது...!
களவாடப்படும் காதல்
கண்களுக்குள்
கள்ளத்தனமாய் மறைக்கப்படுகிறது..
காதல்
மறைப்பட்டிருக்கும்
காதலர் கண்கள்..
கள் போன்றது!
காதலர்களுக்கு
கணக்கின்றி போதை
ஏற்றுவது..
ரகசிய காதல்
ரம்மியமானது!
ரம்மை போன்று
ராஜப்போதை
கொடுப்பது!!
சிலரின் நியாபகம் வரும்போது..
கண்களுக்கு நடிக்க
தெரியவில்லை!
எந்த இடத்தில்
வச்சிருக்காங்கன்னு
தெரியாமலே..
சில பேர் கிட்ட
பேசிட்டு இருப்போம்
முட்டாள் மாதிரி!
எனதன்பிற்கு
பெயர்..
காதல்!
உன்னை
நெருங்கவிடாமல்
செய்துவிட்டது..
எனது தனிமை!
சாய்ந்திட தோளாய்
உன்னெதிரில் இருப்பேன்
எப்போதும்..
நான்!
காவலிருக்கும்..
என் காதல்!
விழித்தபின்
உனக்காகக் காத்திருக்கும்..
என் கவிதைகள்
கவிதை..
அவன்!
என்பதே ஒரு
போதைதானே..
ஆனாலும்
வார்த்தையில்
கேட்கும் போது
அதன் சுகமே
தனிதான்!
வேண்டுமானாலும்
இறங்கி போங்கள்..
ஆனால்..
உங்களை
வேண்டாம் என்று
ஒதுக்குபவர்களிடம்
ஒரு துளியேனும்
இறங்கி போகாதீர்கள்!
0 Comments: