சாக்லேட் டே (Chocolate Day)
காதலர் வாரம் (Valentine's Week)
இந்த உலகில் மிக ரொமான்டிக்கான விஷயம் என்று சொன்னாலே அது காதல் தான். இதோ இன்னும் ஐந்தே நாட்களில் காதலர் தினம் வரப்போகுது. அந்த நாளை கொண்டாட காதலர்கள் எல்லாம் தயாராகி வருகின்றனர்.
சாக்லேட் டே (Chocolate Day)
காதலர்களுக்கு காதலர் தினத்தில் மட்டும் கொண்டாட்டம் இல்லைங்க, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம்தான். அந்த வகையில் காதலர் வாரம் தொடங்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. மூன்றாவது நாள்தான் இந்த சாக்லேட் டே கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படுகிறது. இன்று வரையும் இது பின்பற்றப்பட்டு வருகிறது.
பொதுவாகவே, சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, நாம் விரும்பும் ஒருவருக்கு அதை பரிசாகக் கொடுப்பதும் பரிமாறிக்கொள்வதும் வழக்கம். ஆனால், காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 7 நாட்களில் மூன்றாவது நாளில் வரும் சாக்லேட் டே மிகவும் இனிமையான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் இந்த நாளில் காதலர்கள் தங்கள் அன்புக்குரியவருக்கு சாக்லேட்களை பரிசாக கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
சாக்லேட் கொடுப்பதில் இருக்கும் ரகசியம்
இந்த நாளில் சாக்லேட் கொடுத்து காதலை வெளிப்படுத்துவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? சாக்லேட் என்றாலே பெரியவர்கள் கூட குழந்தைகளாகிவிடுகிறார்கள். அந்த அளவிற்கு சாக்லேட்டின் சுவை அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. சாக்லேட்டில் "ட்ரைப்டோஃபன்" என்ற மூலப்பொருள் அதிகமாக இருக்கிறது.
இது நம் உடலில் உற்சாகத்தை உண்டாக்கும் செரோடின் என்ற அமிலத்தை சுரக்கச் செய்கிறது. மேலும், சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் என்ற மூலப்பொருள் ஒரு ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. இதனால் தான் காதலர் தினத்திலும், சாக்லேட் தினத்திலும் சாக்லேட்டை பரிமாறிக் கொள்கிறார்கள். நீங்களும் உங்கள் காதலியிடமோ அல்லது காதலனிடமோ ஒரு முத்தம் வேண்டுமென்றால் ஒரு பெரிய சாக்லேட்டை வாங்கிக் கொடுங்கள்.
சில நன்மைகள்
அதுமட்டுமல்லாமல், சாக்லேட்டில் பல அற்புதமான நன்மைகளும் இருக்கிறது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவையும், இருதய பிரச்சனைகள் ஏற்படுத்தும் அபாயத்தையும் குறைக்கிறது. சாக்லேட் சாப்பிடுவதால் மூலையின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன. தினமும் 100 கிராம் சாக்லேட்டை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராதாம். ஆனால், அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்தில் தான் முடியும். எனவே, அளவோடு சாப்பிட்டு; ஆரோக்கியமாக இருங்கள்.
இந்த சாக்லேட் டேயில் ஒரு அழகான கவிதை!
" நீ தந்த சாக்லேட் கவர்கள் கூட இன்று உன் நினைவுச் சின்னங்களாய் தூங்குகிறது.. பூட்டிய என் வீட்டு அலமாரியில்...!"
"இந்த சாக்லேட் உனக்கு மகிழ்ச்சியைத் தருவது போல, நீ என் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறாய்...!"
Happy Chocolate Day….!
0 Comments: