திங்கள், 27 பிப்ரவரி, 2023

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்
சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை! - Hello Doctor 

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவோடு செவ்வாழைப்பழத்தைக் கொடுத்தால், நாள் முழுவதும் அவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

காலை உணவு சாப்பிட நேரமில்லாதவர்கள் செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் சோம்பல், மந்தம் நீங்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

சிவப்பு வாழைப்பழத்தில், 'பீட்டா கரோட்டின்' என்னும் ஆரஞ்சு நிறமியும் இருக்கிறது. இது, வைட்டமின்-ஏ உற்பத்திக்கு உதவுகிறது.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்-ஏ நிறைந்திருப்பதால், கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

நார்ச்சத்து நிறைந்த செவ்வாழைப்பழத்தை மலச்சிக்கல், அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டால் அவற்றின் தீவிரம் குறையும்.

செவ்வாழைப்பழம் வைட்டமின் பி-6 நிறைந்தது. இது, ரத்தச் சிவப்பு அணுக்களும் ஹீமோகுளோபினும் உருவாக மிக அவசியமானது.

ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த செவ்வாழைப்பழத்தைச் சாப்பிடலாம்.

செவ்வாழையிலுள்ள பொட்டாசியம், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Previous Post
Next Post

0 Comments: