செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

மழைக்கால வெந்நீர் குளியல்... பயனுள்ள டிப்ஸ்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

மழைக்கால வெந்நீர் குளியல்... பயனுள்ள டிப்ஸ்! - Hello Doctor 

● மழை, குளிர்காலங்களில் வெந்நீரில் குளிப்பது நல்லது. அதிக சூடான தண்ணீரைவிட வெதுவெதுப்பான நீரே குளியலுக்குச் சிறந்தது.

● மழை, குளிர் காலங்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்கலாம்.

● சைனஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் சுக்கு தைலத்தைப் பயன்படுத்திக் குளிக்கலாம்.

● வெந்நீரை அப்படியே தலையில் ஊற்றுவது முற்றிலும் தவறு. தலையில் நேரடியாக வெந்நீர் ஊற்றினால் வெப்பம் உடலைவிட்டு வெளியே போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

● வெந்நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பிறகு முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி இறுதியாக தலை என கீழிருந்து மேல் நோக்கி தண்ணீரை ஊற்ற வேண்டும். வெப்பம் வெளியேற ஏதுவான முறை இதுதான்.

● மழை, குளிர்காலங்களில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் தலைக்குக் குளிப்பதை தவிர்க்கவேண்டும்.

● சாப்பிட்ட பிறகு குளிக்கக் கூடாது. மழைக் காலத்தில் பொதுவாகவே செரிமானம் தாமதமாக நடக்கும். உணவுக்குப் பின் குளித்தால் அது செரிமானத்தை மேலும் மட்டுப்படுத்தும்.
Previous Post
Next Post

0 Comments: