மழைக்கால செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும் சுக்கு - மல்லி கஷாயம்! -Hello Doctor
சுக்கு - மல்லி கஷாயம்!
தேவையானவை:
சுக்கு - 10 கிராம்,
மல்லி - 20 கிராம்,
சீரகம் - 5 கிராம்.
செய்முறை:
சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம்.
இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.
0 Comments: