காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 History
காதலர் தினம் வந்துவிட்டாலே ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள உற்சாகத்தை வெளிக்கொணர்வர். காதலர் தினம் என்பது ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவது அல்ல. வாரம் முழுவதும் 7 நாள்கள், ஏழு சிறப்பு தினங்களை எடுத்துக் கூறுகிறது. இந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. காதலர்களுக்காக கொண்டாடப்படும் காதலர் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுவது டெடி தினம் ஆகும். இந்த தினத்தில் காதலர்கள் டெடி பியரை பரிசாக வழங்குவர். இந்த டெடி தினம் ஏன் காதலர் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுகிறது எனவும், டெடி தினத்தின் சிறப்பம்சங்களையும் பற்றி இதில் காண்போம்.
காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 History
டெடி தினம் 2023
ஒவ்வொரு ஆண்டும் காதலர் வாரத்தின் நான்காவது நாளாக டெடி தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி, பிப்ரவரி 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே எனத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த தினத்திற்கென தனிச்சிறப்பு உண்டு. மென்மையான தினத்தில் மென்மையான டெடி பியர்களை காதலர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்வர்.
0 Comments: