புதன், 1 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/3/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/3/23

வயல்வெளியை 
மேலும் 
பசுமையாக்குகிறது
அவள் சிரிப்பு.. 💕

உன்னை காணாது என் கண்கள் காத்திருக்க..💖
உன் நினைவாலே என் இதயம் பூத்திருக்கும்..💕🌹

நொடியில் நூறு கவிப்பாடி 
காதலை நேர்த்தியாய் சொல்லுதடி கண்மணி உனதிரு கண்கள்..💕

வெண்பஞ்சை 
தேனில் நனைத்து பிரம்மன் உருக்கொடுத்த
பூவிதழ் உன்னிதழ்.. 💕

என்னவள்
வாசிக்காத கவிதை அவள்
கண்ணுக்கு தெரியாத காற்று அவள்
கனவில் தினம் வருபவள்
என்னை எனக்கே காட்டியவள்
உலகமே நீ தான் என்று உணர்த்தியவள்
தினம் தினம் அவளை தேடிகொண்டே
அலைகிறேன் என் நினைவுகளில்..💕

பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றி கொண்டிருப்பது தெரியாத பொழுது..😋

நான் உன்னையே சுற்றி வருவது மட்டும் உனக்கு எப்படி தெரியும்..💕

முப்பொழுதும் 
இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது 
வந்து செல்..💜

என் வறண்ட உள்ளம் 
வசந்தம் ஆகும்..😋

உன் வரவை கண்டு..💕

என் இதயம் தேடும் அன்பில் என்றைக்குமே முதலிடம் நீ மட்டுந்தான்..💕

கிளையில் 
துளிரும் இலை போல 
உன் அன்பில் நானும்
துளிர்கிறேன்.. 💕

யார் நடந்தாலும் 
கூடவே வரும்..😎

யாருக்கும் பாரபட்சம்
பார்ப்பதில்லை..😇

நிலா🌒

என்ன மாயம் செய்தாயோ தெரியவில்லையே உன்னுடைய கண்சிமிட்டும் வித்தையில் மயங்கி உன் முன்னே இன்று அடங்கி தானே போனேன் என்னவளே…💕

கூச்சம் கொள்ளாதே எனக்குரியவளே
கூடி விடு என்னோடு
கடைசி வரை கூட வருவேன்
உன்னோடு உன்னவன் 😘😘😘

❤️🌹❤️நீ பார்க்கும் விழியில் நீலவானத் தாரகை🌹❤️🌹

❤️🌹❤️நீ செவ்விதழ் சிரிப்பில் முத்துப் புன்னகை🌹❤️🌹

❤️🌹❤️நீ நடந்தால் ஒரு தேவதை 
என் சொல்லால் நான் உன்னைத் தொட்டால்🌹❤️🌹

🌹நீ ஒரு கவிதை🌹

நீ என்பது 
என்னையும் சேர்த்துதான்..💕

நான் வெறும் 
உடல் மட்டும் தான்..💕

நீ தான் என் உயிர் பேரன்பே..💕

உன் மென்னிதழ் பார்த்து பூக்கள் தம் இதழ்களை மூடிக் கொள்ளாதா என்ன.. 😘❤️

உயிரை
உருமாற்றும்
உளவியல் நீ.. ❤️

உணர்வை
பரிமாற்றம்
கலை நயங்கள் நீ.. 😘❤️

வீழ்ந்து 
கிடந்தாலும்
என்னை 
தோல்வியடையவிடுவதில்லை
உன் மென்மை.. 💕

உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே..❤️

அவனோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்..💕

மனதில் 
இருக்கும் ஆயிரம் வலிகளுக்கு மருந்தாய் அமைகிறது..❤️

அவளின் 
ஒற்றை வார்த்தை..💕

மிச்சமேதுமின்றி
மொத்தமாகவே பருகிக்கொள் என்னை..😉

உன் தே(ன்)நீர் இதழ்களால்..😘💋
Previous Post
Next Post

0 Comments: