சனி, 30 செப்டம்பர், 2023

Laddu : சதுர்த்தி ஸ்பெஷல் – விநாயகருக்கு பிடித்த லட்டு செய்ய கத்துக்கலாமா? - ஈசியாக செய்ய இதோ ஒரு வழி!

Laddu சதுர்த்தி ஸ்பெஷல் விநாயகருக்கு பிடித்த லட்டு செய்ய கத்துக்கலாமா? ஈசியாக செய்ய இதோ ஒரு வழி!

சம்பா கோதுமை ரவையில் லட்டு செய்வது எப்படி? 
Laddu : விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. வீட்டில் விநாயருக்கு பிடித்தவற்றை செய்யவேண்டும். விநாயகருக்கு பிடித்த லட்டு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 1 கப்
(வெள்ளைச்சர்க்கரை சேர்க்க விருப்பமில்லையெனில் நாட்டுச்சர்க்கரை, கரும்பு சர்க்கரை அல்லது வெல்லம் என எதுவேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்)
ஃபுட் கலர் – சிறிதளவு (ஆரஞ்ச் ரெட்)
(ஃபுட் கலர் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் வேண்டாம்)
ஏலக்காய் – 2 சிட்டிகை
முந்திரி – 8
வெள்ளரி விதைகள் – 2 ஸ்பூன்
(நீங்கள் விரும்பினால் கூடுதலாக உங்களுக்கு பிடித்த நட்ஸ்கள் அல்லது விதைகள் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதை அதிகம் சேர்த்தால் லட்டின் சுவை மாறிவிடும்)

செய்முறை
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, சூடாக்கி அதில் சம்பா கோதுமையை நன்றாக வறுத்துவிட வேண்டும்.
அடுப்பு குறைவான தீயில் இருக்க வேண்டும். அதிகம் இருந்தால், கோதுமை அடிபிடித்து கருப்பாகிவிடும். மேலும் தொடர்ந்து வறுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இடையில் நிறுத்தினால், அனைத்து ரவையும் ஒன்றுபோல் வறுபடாது. வறுக்கும்போது நல்ல வாசம் வரும்.
மற்றொரு கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்தவுடன், வறுத்து எடுத்த சம்பா கோதுமை ரவையை சேர்த்து குறைவான தீயில் நன்றாக கிண்ட வேண்டும். அடுப்பு குறைவாக இருக்கும்போதுதான் ரவை நன்றாக வெந்து வரும்.
தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றியவுடன், சர்க்கரை அல்லது இனிப்புக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த எதுவேண்டுமானாலும் எடுத்து சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
குறைவான தீயில் சர்க்கரை இளகி கெட்டியாகிவரும் வரை நன்றாக கலந்துவிடவேண்டும்.
பின்னர் ஃபுட் கலர், ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு (இனிப்பில் எப்போதும் உப்பு சேர்ப்பது அந்த இனிப்பின் சுவையாக எடுத்துக்காட்டும். எனவே எந்த இனிப்பு செய்யும்போதும், மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்) அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
கடைசியாக மிச்சமுள்ள நெய், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவேண்டும். கை பொறுக்கும் சூட்டில் எடுத்து சிறுசிறு லட்டுகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு லட்டு பிரசாதம் செய்து விநாயகப்பெருமானுக்கு படையலிட்டு வணங்குவார்கள். இந்த விநாயகர் சதுர்த்திக்கு இதை செய்து வழிபட்டு கணபதியின் அருளை பெறுங்கள்.

Green Tea : அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

Green Tea : அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

அதிகம் கரீன் டீ உடலுக்கு ஏன் ஆபத்து?
உடல் எடை குறைப்புக்கும், தேநீர் பிரியர்கள் பால் டீயை குறைக்கவும் கிரீன் டீயை தேர்ந்தெடுக்கிறார்கள். கிரீன் டீயில் நிறைய நன்மைகள் உள்ளது. அதேபோல் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே, கிரீன் டீயை பருகும்போது, அதில் உள்ள நன்மை, தீமைகளை அறிந்து, எடுத்துக்கொள்ள வேண்டி அளவையும் தெரிந்துகொண்டு எடுத்துக்கொள்வது நல்லது.

கிரீன் டீயின் பக்கவிளைவுகள்
கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் அதை அதிகம் குடித்தால், அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. மனித உடலுக்கு அதிகமான கிரீன் டீ ஏற்படுத்தும் ஆபத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

வயிற்று வலி
அதிகளவில் நீங்கள் கிரீன் டீ குடித்தால் அது உங்கள் வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது. வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. கிரீன் டீயில் டேனின்கள் உள்ளது. அது வயிற்றில் அமிலச்சுரப்பை அதிகரிக்கிறது.

தலைவலி
தலைவலியால் பாதிக்கப்படும் நபர்கள், அதிகளவில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள கெஃபைன் தலைவலியை ஏற்படுத்துகிறது.

தூக்கிமின்மை
இதில் குறைவான அளவே கெஃபைன்கள் இருந்தாலும், அதிகம் குடிக்கும்போது அது தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. அது பின்னர் மற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

இரும்புச்சத்து குறைபாடு
ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுத்து, இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எனவே கிரீன் டீயில் எலுமிச்சை சேர்த்து பருகவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, இரும்புச்சத்து உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.

வாந்தி
அதிகளவில் கிரீன் டீ குடிப்பது வாந்தி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதில் டேனின்கள் அதற்கு காரணமாகின்றன.

அன்றாடம் இயங்குவதில் குறைபாடு
கிரீன் டீயில் உள்ள கெஃபைன், அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால், இயங்குவதில் கோளாறு ஏற்படுகிறது.

கல்லீரல் பிரச்னைகள்
அதிகளவில் கிரீன் டீ குடிக்கும்போது, அதிகம் கெஃபைன் உள்ளே சென்று கல்லீரலுக்கு அழுத்தம் கொடுத்து கல்லீரலை சேதப்படுத்துகிறது.

எலும்புகளில் வலுவின்மை
கிரீன் டீயில் உள்ள பொருட்கள் கால்சியம் உறிஞ்சுவதையும் தடுத்து, எலும்புகளில் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் எலும்பு நோய்களும் ஏற்படுகிறது. அவை எலும்புப்புரை நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் ஏற்றதல்ல
கெபைஃன்கள், டானின்கள் மற்றும் க்ரீன் டியில் உள்ள கேட்சின்கள் கர்ப்பிணிகளுக்கு நல்லது கிடையாது. இதனால் கர்ப்பகாலத்தில் அவர்கள் கிரீன் டீயை தவிர்க்க வேண்டும். இவற்றால் ஆபத்து ஏற்படுகிறது. எனவே கிரீன் டியையும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Then Mittai : 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்! தித்திக்கும் தேன் மிட்டாய் செய்ய கற்றுக்கொள்ளலாமா?

Then Mittai 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்! தித்திக்கும் தேன் மிட்டாய் செய்ய கற்றுக்கொள்ளலாமா?
தித்திக்கும் தேன் மிட்டாய் செய்வது எப்படி?


தேன் மிட்டாய் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்,
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப் (பச்சரிசி அல்லது இட்லி அரிசி)
உளுந்து – கால் கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
சர்க்கரை – ஒன்றரை கப்
எலுமிச்சை சாறு – கால் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – வறுக்க தேவையான அளவு
சர்க்கரை – சிறிதளவு (தேன்மிட்டாயின் மேல் தூவுவதற்கு)

செய்முறை
அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை 3 அல்லது 4 மணி நேரங்கள் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
ஊறியபின் தண்ணீரை வடித்துவிட்டு, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும் என்பதால், சிறிதளவு தண்ணீரை மட்டுமே ஊற்றவேண்டும். மாவு மிருதுவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாவை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில், ஃபுட் கலர் மற்றும் பேக்கிங் சோடா கலந்துவைக்க வேண்டும்.
அதை உருட்டுவதற்கு முன், சர்க்கரை பாகை தயாராக வைத்திருக்க வேண்டும். சர்க்கரையையும், தண்ணீரையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடம் குறைவான தீயில் வைத்தாலே போதும். அடுப்பை அணைத்து, எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை பாகு கெட்டியாகாமல் இருக்கும்.
எண்ணெயை பொறிப்பதற்காக சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
மாவை குட்டி, குட்டி உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். உருண்டைகள் மேல எழும்பி வந்தவுடன் 3 முதல் 4 நிமிடங்கள் வறுத்தெடுத்தாலே போதும்.
வறுத்த உருண்டைகளை உடனடியாக சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும். அதை சிறிது நேரம் ஊறவிடவேண்டும்.
இந்த உருண்டைகள் சர்க்கரை பாகை நன்றாக உறிஞ்சிய பின்னர் உருண்டைகளை வெளியே எடுத்து விடவேண்டும்.
சுவையான தேன் மிட்டாய்கள் சாப்பிட தயாராகிவிட்டது.
அதன் மீது சர்க்கரை அல்லது சர்க்கரை பொடியை தூவி அலங்காரம் செய்யம். இதை 4 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிலாம்.
தித்திக்கும் தேன் மிட்டாயை நினைத்தாலே மனம் இனிக்கும். இது 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு மிட்டாய். இதை நீங்கள் சாப்பிடும்போது, நீங்கள் அந்த கால குழந்தையாக இருந்தால், உங்களை அந்த கால நினைவுகளுக்கு அழைத்துச்செல்லும்.
அந்த காலத்தை நினைத்தாலே மனம் இனிக்கும். அதேபோல் இந்த தேன் மிட்டாயும் உங்கள் குழந்தை பருவத்தை மீட்டுத்தரும். 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு தேன்மிட்டாய் உணவல்ல உணர்வு

Oil Brinjal Gravy : நாவில் எச்சில் ஊறவைக்கும்! பார்த்தவுடனே சாப்பிட தூண்டும்! எண்ணெய் கத்திரிக்காய் புளிக் குழம்பு!

Oil Brinjal Gravy : நாவில் எச்சில் ஊறவைக்கும்! பார்த்தவுடனே சாப்பிட தூண்டும்! எண்ணெய் கத்திரிக்காய் புளிக் குழம்பு!

எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு செய்ய
தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் கத்தரிக்காய் – கால் கிலோ
தக்காளி – 2
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
பூண்டு – 10 பல்
கடுகு - கால் ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
புளி கரைசல் – ஒரு கப்
நல்லெண்ணெய் – 100 மிலி
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
கொத்தமல்லிப்பொடி – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுகிக்கொள்ள வேண்டும். தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய்களின் நீளக் காம்புகளை மட்டும் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொப்பி போல மேலே படர்ந்துள்ள காம்பை நீக்காமல் காயை நான்காகக் கீறிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், நறுக்கிய தக்காளி மற்றும் நறுக்கிய (பாதி) வெங்காயத்தைப் போட்டு வதக்கவேண்டும். வதக்கியவுடன் அதை நன்றாக ஆற வைத்து தேங்காய் சேர்த்து மிக்சியில் அரைக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய்விட்டு வெந்தயம் மற்றும் கடுகு தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள மீதி வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
வதங்கியதும் பூண்டை தட்டிப்போட்டு வதக்கவேண்டும். பின்னர் கத்தரிக்காய்களை போட்டு மீதி எண்ணெய் அனைத்தும் ஊற்றி நன்கு வதக்கவும். பின்பு அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி விடவேண்டும். இதனுடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் பொடிகளை சேர்த்துக் கிளறி, பச்சை வாசம்போகும் வரை வதக்கவேண்டும்.
இப்போது புளி கரைசல் சேர்த்து, அதோடு இன்னும் கொஞ்சம் நீரும் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நன்கு கொதித்து காய்கள் வெந்து எண்ணெய் மேலாக எழுந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித் தழைகளை தூவி இறக்க வேண்டும். கமகமக்கும் எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு ரெடி சாப்பிட தயாராக உள்ளது.
இப்படி செய்துகொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் ஒரு முழு தட்டு சாதத்தை காலி செய்வார்கள். சூடான சாதத்தில் நல்லெண்ணெய்விட்டு, இந்த குழம்பை பிசைந்து அப்பளம் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

Energy Boosting Foods : உடலில் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் பானங்கள்! – உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்!

Energy Boosting Foods : உடலில் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் பானங்கள்! – உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்!

Energy Boosting Foods and Drinks : இயற்கையிலேயே உடலுக்கு சக்தியை அளிக்கக்கூடும் உணவுகள் எவை என்று தெரியுமா?
நீங்கள் காலை தூங்கி எழுந்தவுடன் உற்சாகமாக அல்லாமல், சோம்பேறியான உணர்கிறீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் உங்கள் உணவுத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அர்த்தம். உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவு மற்றும் பானங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அவை என்ன என்றும், உங்கள் உடலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்றும் தெரிந்துகொள்ளுங்கள்

வாழைப்பழம்
இதில் சர்க்கரை அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. அது உங்களுக்கு ஜீரணத்துன்னு உதவி, உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

அவகோடா
இதில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. அது உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

மீன்
டுனா, சார்டைன் மற்றும் சால்மன் போன்ற புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்த மீன்கள், உங்களுக்கு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலை அளிக்கும்.

பெரிகள்
ப்ளு பெரி, ராஸ்பெரி மற்றும் ப்ளாக் பெரிகளில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது சோர்வு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

முட்டை
முட்டையில் புரதசத்து நிறைந்துள்ளது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் நீண்ட நாட்களுக்கு சக்தி நிறைந்தவர்களாக்குகிறது.

பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அது உங்களுக்கு ஆற்றலைக்கொடுத்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. அதை நீங்கள் சாறாக பிழிந்தும் குடிக்கலாம்.

கீரைகள்
கீரைகளில் புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உங்களை ஆற்றல் நிறைந்தவர்களாக வைக்கிறது.

டார்க் சாக்லேட்
இதில் சர்க்கரை குறைவாகவும், கோகோ அதிகமாகவும் இருக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.

ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மற்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு ஆற்றல் கொடுப்பவை.

சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸில் புரதம் நிறைந்துள்ளது. பல்வேறு அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

தண்ணீர்
தண்ணீரிலும் உங்கள் உடலுக்கு ஆற்றலைத்தரும் மூலப்பொருள் உள்ளது. தண்ணீர், உங்கள் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் இருக்க உதவி உங்களை நாள் முழுவதும் சோர்வின்றி இருக்க வைக்கிறது.

காபி
காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிஃபீனால்கள் உள்ளன. அவை உங்கள் மன அழுத்தத்தை போக்கி, உங்களை சுறுசுறுப்பாக்குகிறது.

வியாழன், 28 செப்டம்பர், 2023

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சின்னவேடம்பட்டி அருள்மிகு தண்டபாணி சுவாமி ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் 

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சின்னவேடம்பட்டி அருள்மிகு தண்டபாணி சுவாமி ஆலயம்


மூலவர்:
தண்டபாணிசுவாமி

உற்சவர்:

வள்ளி, தெய்வானை உடனமர் குமரகுருபரக் கடவுள்

அம்மன்/தாயார்:

வள்ளி, தெய்வானை

தல விருட்சம்:
கடம்பமரம்

தீர்த்தம்:
திருக்குளம்

ஆகமம்/பூஜை:
குமாரதந்திரம்

பழமை:
500 வருடங்களுக்குள்

ஊர்:
சின்னவேடம்பட்டி

மாவட்டம்:
கோயம்புத்தூர்

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:

தைப்பூச மறுநாள், ஆடிக்கிருத்திகை, அன்று தெப்பத்திருவிழா நடைபெறும். தைப்பூசம், கந்தசஷ்டி விழா, ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, கிருத்திகை, மகாசிவராத்திரி, வைகுண்டஏகாதசி கொண்டாடப்படுகின்றன.

தல சிறப்பு:

சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தண்டபாணிசுவாமி திருக்கோயில்,கௌமாரமடாலயம்,சின்னவேடம்பட்டி,கோயம்புத்தூர்-641049.

போன்:
+91 422-2666370

பொது தகவல்:

கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. மூலவர் முருகன் கிழக்கு பார்த்த திருக்கோயில். விமானம் தஞ்சை பெருவுடையார் கோயில் விமான அமைப்பு, பாண்டுரங்கன் கோயில், விமானம் வடநாட்டு கோயில் விமான அமைப்பில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை:

கந்தசஷ்டி விரதம் இருந்து திருமணம் ஆகாதவர்கள், திருக்கல்யாண விழாவில் பங்குபெற்றால் திருமணதடை நீங்கும்.

நேர்த்திக்கடன்:

திருமணத்தடை நீங்க கந்தசஷ்டிப் பெருவிழாவில் மறுநாள் திருமண உற்சவ விழாவில் பங்குபெற்று தங்களால் இயன்றதை செலுத்துகின்றனர்.

தலபெருமை:

முப்பெரும் சமாதி வளாகம், ஆதின குருமுதல்வர், திருப்பெருந்திரு, இராமானந்த சுவாமிகள் கவுமார மடாலய நிறுவனர், தவத்திரு. கவிக்கடல் கந்தசாமி சுவாமிகள் இரண்டாவது குருமகா சந்நிதானங்கள், தவத்திரு கஜபூசை சுந்தர சுவாமிகள், மூன்றாவது குருமகா சந்நிதானங்கள் அமைந்துள்ளன. தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில், சித்தி விநாயகர், கருணாம்பிகை, உடனுறை அவிநாசியப்பர், பாண்டுரங்கன், சூரியனார், சனீஸ்வரர், பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. 

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.

அமைவிடம்:

கோவை-காந்திபுரத்திலிருந்து சத்திய மங்கலம் செல்லும் வழியில் 8 கி.மீ. துõரத்தில் சரவணம்பட்டி. அங்கிருந்து துடியலூர் செல்லும் வழியில் 1.5 கி.மீ. துõரத்தில் சின்னவேடம்பட்டியில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்:
கோயம்புத்தூர்
தங்கும் வசதி:
கோயம்புத்தூர்
கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...

புதன், 27 செப்டம்பர், 2023

இன்றைய கோபுரதரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சதுர்வேதமங்கலம் அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் ஆலயம்

இன்றைய கோபுர
தரிசனம் 


சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சதுர்வேதமங்கலம் அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் ஆலயம்.

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

ருத்ரகோடீஸ்வரர்

*அம்மன்/தாயார்:*

ஆத்மநாயகி

*தல விருட்சம்:*

எலுமிச்சை

*தீர்த்தம்:*

சூரிய, சந்திர தீர்த்தம்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*புராண பெயர்:*

மட்டியூர்

*ஊர்:*

சதுர்வேதமங்கலம்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*பாடியவர்கள்:*

முத்துவடுகு சித்தர்.

*திருவிழா:*

*மாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் பக்தர்கள் இங்கு நேரில் வந்து சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்.*

*தல சிறப்பு:*

*வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார்.இத்தலத்தில் பிரம்மா மலை வடிவில் அருள்பாலிக்கிறார்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வேதி மங்கலம்,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 4577- 246170, 94431 91300 +91-4577-242 981, 98420-82048.*

*பொது தகவல்:*

*இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அரவன் எனும் பாம்பு வடிவிலான மலை உள்ளது. சிவனை வணங்கிய பிரம்மன் எப்போதும் அவரை வணங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதால், அவரே இம்மலையாக மாறியதாக வரலாறு கூறுகிறது.*

*இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் எனப்படுகிறார். ராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கூடியது. இத்தல இறைவனுக்கு தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.*

*நேர்த்திக்கடன்:*

*அம்பாளுக்கு பவுர்ணமியில் விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகம் செய்து வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். சரபேஸ்வரருக்கு வடை, பாசிப்பருப்பு பாயசம் வைக்கின்றனர்.*

*தலபெருமை:*

*லவகுசன் அஸ்வமேத யாகம் செய்த இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம், தலமரம், தலப் பறவை என ஐவகை சிறப்புகளைப் பெற்றுள்ளது. கோடி ருத்ரர்கள் வணங்கிய இங்கு வேண்டிக்கொள்ள நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*பிரகாரத்தில் சுவாமிக்கு முன்இடப்புறம் சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் அருளுகிறார். இவரை ஞாயிற்றுக் கிழமையில் ராகுகால நேரத்தில் வணங்கினால் குலம் சிறக்கும், கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நந்தி மிகவும் பெரியவடிவில் இருப்பதும், நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இருப்பதும் சிறப்பு.*

*சூரிய பூஜை:*

*வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார். நான்கு வேதங்களை ஓதும் வேதவிற்பன்னர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால், இவ்வூர் "சதுர்வேதமங்கலம்' என்றழைக்கப்படுகிறது.*

*தல வரலாறு:*

*ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெற பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார்.*

*கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி ருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த ருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது.*

*பிரம்மாவுக்கு படைப்புத் தாழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி ருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி ருத்ரர்களும் வணங்கிய இந்த லிங்கத்திற்கு, "ருத்ர கோடீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*
*வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார்.*

*அமைவிடம்:*

*சிங்கம்புணரியிலிருந்து 5 கி.மீ., தூரம் உள்ள இவ்வூருக்கு, திண்டுக்கல்லில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பஸ்கள் செல்கிறது.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி, சிவகங்கை
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
மதுரை
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...*
*வாழ்க வையகம்...*

இன்றைய கோபுர தரிசனம் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு ராம்நகர் அருள்மிகு கோதண்டராமஸ்வாமி ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

இன்றைய கோபுர தரிசனம் 

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு ராம்நகர் அருள்மிகு கோதண்டராமஸ்வாமி ஆலயம்.

மூலவர்:கோதண்டராமஸ்வாமி

அம்மன்/தாயார்:
சீதாதேவி

தல விருட்சம்:
வில்வ, அரச மரம்

பழமை:
500 வருடங்களுக்குள்

புராண பெயர்:
அக்ரஹாரம், ரங்கநாதபுரம், கரிவரதபுரம்

ஊர்:
ராம்நகர்

மாவட்டம்:
கோயம்புத்தூர்

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:

இத்தலத்தில் நித்ய கணபதி ஹோமம், திருவோண நட்சத்திரத்தன்று மகாசுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம் ஆகியவை சிறப்பாக நடந்து வருகிறது. பிரதோஷ காலத்தில் ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓத வேதவிற்பன்னர்கள் ருத்ரம், சமகம் பாராயணம் செய்ய பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே ஈசனுக்கு அபிஷேகம் செய்வது குறிப்பிடத்தக்கது. சித்திரை முதல் நாள், கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆருத்ரா தரிசனம், சங்கராந்தி, பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தினசரி விஸ்வரூபம், அபிகமனம், இஜ்யை, சாயிரக்ஷ்யை, திருவாராதனம் சயனம் என ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் சத்யநாராயண பூஜையின் போது மட்டைத் தேங்காயை வைத்து பூஜை செய்து தருவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து தினசரி பிரார்த்தனை செய்து வர திருமணம், குழந்தைப்பேறு, நல்ல உத்யோகம் கிட்டுகிறது. இத்தலத்தில் முக்கியப் பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படும் ராமநவமி உற்சவமாகும். இதில் மூல ராமாயண பாராயணம், சொற்பொழிவுகள், லட்சார்ச்சனை, சீதா கல்யாணத்தைத் தொடர்ந்து ராம நவமியன்று ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரத்துடன் வடை பருப்பு, பானகம், நீர்மோர் நிவேதனம் செய்யப்படும். மாலையில் நடைபெறும் உற்சவர் திருவீதியுலா நடக்கும். இந்த உற்சவத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சகல பாக்யமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

தல சிறப்பு:

ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்,ராம்நகர்,கோயம்புத்தூர் .641 009

போன்:

+91 422 2233926

பொது தகவல்:

இக்கோயில் இந்து மதத்தின் முக்கிய பிரிவுகளான த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத் வைதம் ஆகிய மூன்று சம்பிரதாயங்கள் கடைபிக்க வேண்டுமென தீர்மானித்து மஹா கணபதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உருவாக்கப்பட்டன. அதை அடுத்து நவகிரஹ சன்னிதி இல்லை என்ற குறையைப் போக்க நவகிரஹ சன்னிதி ஒன்றையும் கட்டி முடித்தனர், ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடந்த பிரசவன மண்டபம் ஒன்றை கட்டி முடித்து, 18.02.1968 அன்று ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள் திறந்து வைத்தார். இத்தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. கோயிலில் பூஜைகள், விழாக்கள் போன்றவை சீராக நடந்து வந்த நிலையில், இச்சிறப்பு மிக்க கோயிலுக்கு ராஜகோபுரமும் துவஜஸ்தம்பமும் இல்லையே என்ற குறை நீண்ட நாட்களாக பக்தர்கள் அனைவரது மனத்திலும் இருந்தது. கோயிலுக்கு வருகை புரிந்த ஆன்மீக சான்றோர்களும் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். திருப்பணி மேற்கொள்ள ஒருகுழு அமைக்கப்பட்டது. ராஜகோபுர திருப்பணியுடன் பழமையான கட்டுமானத்தை புதுப்பித்தல், ஆஞ்சநேயர், ராமர் சன்னிதிகளுக்கு புதிய விமானங்கள் அமைத்தல் போன்ற திவ்யபணிகளுக்காக 3.2.2006 அன்று கால்கோள் விழா ஆன்மீக பெரியோர்கள் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது.

ராஜகோபுரம், துவஜஸ்தம்பம் கடந்து வந்தால் கருவறையில் தெற்குமுகமாக கல்யாண கோலத்தில் சீதாதேவி, லட்சுமணர் சமேதராக ராமசந்திரமூர்த்தி எழுந்தருளியுள்ளார். எதிரே இரு கரம் கூப்பி வணங்கியபடி ஆஞ்சநேயரும், இவருக்கு மேற்கே விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள். ராமர் சன்னிதி கருவறையின் முகப்பில் கலைநயமிக்க கற்சிற்பங்களும், வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்ட கதவுகளில் அஷ்ட லக்ஷ்மிகளின் திருவுருவமும் அழகுற அமைந்துள்ளன. ராமர் சன்னிதிக்கு கிழக்கு பக்கமாக விசாலமான மண்டபத்தில் நவகிரஹங்களுக்கு என தனிச் சன்னிதி உருவாக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் 13 கோடி ராமநாமம் அடங்கிய பெட்டகம் உள்ளது. 24.7.2006 அன்று 42வது பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையின் பின்புறத்தில் ஸ்வாமி உலா வருவதற்கு ஏதுவாக சொர்க்க வாசல் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் நிருத்த கணபதி, சித்தி, புத்தி கணபதி, பாலகணபதி, புன்னைமர கிருஷ்ணன், பட்டாபிஷேக ராமர், பத்ராச்சல ராமர், பூஜித ராமர், தசாவதார ராமர், யோகராமர், என கல் சிற்பங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

பிரகாரத்தின் மேல் நிலையில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சிவன், விநாயகர், ஐயப்பன், ராமபிரான் பட்டாபிஷேகம், தசாவதாரம் என சுதைச் சிற்பங்கள் கலைநயத்துடன் விளங்குகின்றன. கோயில் வளாகமே கலை நுணுக்கங்களுடன் பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றது.

பிரார்த்தனை:

ராமர் சன்னிதியில் நடக்கும் திருமணத்திற்காக, பெண் பார்க்கும் படலத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த சகல தோஷங்களும் தடைகளும் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் ராமருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.

தலபெருமை:

ராமர் சன்னிதியின் பின் பகுதியில் வில்வமரத்தின் அடியில் வில்வ லிங்கேஸ்வரரும், அரசமர மேடையில் நாகர்களுடன் விநாயகப் பெருமானும் வீற்றிருக்கிறார்கள். ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக பிரசவன மண்டபமும் உள்ளது. சிற்ப கலை நயத்துடனும் இறைப் பொலிவுடனும் ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. முன்பு கோயில் நுழைவாயிலில் இருந்த தீபஸ்தம்பம் அகற்றப்பட்டு மறு சிற்ப வேலைப்பாடுகளுடன் ராஜகோபுரத்தின் கிழக்குபக்கமாக அமைத்துள்ளனர். முன்பு தீபஸ்தம்பம் இருந்த இடத்தில் துவஜஸ்தம்பம் நிறுவப்பட்டது. இத்துடன் மூலவர் இரு நிலை விமானம், விநாயகர், ஆஞ்சநேயர் விமானங்கள் என அனைத்து திருப்பணிகளும் நிறைவு பெற்று 18.2.2008 அன்று ஆன்மிக சான்றோர் முன்னிலையில் வேத பாராயணங்கள் ஒலிக்க மஹா கும்பாபிஷேகம் இனிதே நிறைவேறியது. பொதுவாக கோயில்களில் கும்பாபிஷேகம் முடிந்த பின் 48 நாட்கள் மண்டல பூஜை மட்டுமே நடக்கும். மாறாக இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம் என நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு கோயிலில் தொடர்ந்து ஜபிக்கப்படும் வேத மந்திரங்கள், இதிகாச புராணங்களின் பாராயணம், ப்ரவசம் மற்றும் பஜனோத்ஸவங்கள் போன்ற சத்காரியங்களை நிகழ்த்துவதன் மூலம் அத்தலத்தின் சாந்நித்தியமும் தெய்வீக அதிர்வுகளும் அமைகின்றன. என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.
 
தல வரலாறு:

ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இலக்கணம் உண்டு. அதுபோல் கோயில்களுக்கு ஓர் இலக்கணம் உண்டு என்றால் இத்தலம் அதற்கு சான்றாக அமையும் எனலாம். கோயிலில் எங்கு நோக்கினும் தூய்மை தூய்மை ஒரு சிறு குப்பையைக் கூட காண முடியாத வகையில் மிகவும் நேர்த்தியாக பராமரித்து வருகின்றனர். இச்சிறப்பு மிக்க கோயில் கோவை மாநகரின் மையப் பகுதியான ராம் நகரில் அமைந்துள்ள கோதண்டராம ஸ்வாமி கோயில். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் எந்தவித பேதமும் இன்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் நகரம் கோவை. தற்போது கோயில் அமைந்துள்ள ராம்நகர் 95 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலப்பகுதியாக இருந்தது. அச்சமயத்தில் வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்து அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து வசிப்பதற்காக முடிவு செய்து, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்லாடர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர். அதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தற்போதுள்ள ராம்நகர் பகுதியைத் தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கினார். அங்கு வக்கீல்களும் குமாஸ்தாக்களும் வீடுகளைக் கட்டிக் கொண்டு குடியேறினர். அப்பகுதி அக்ரஹாரம், ரங்கநாதபுரம், கரிவரதபுரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வழிபாட்டுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வாக்குக்கு ஏற்ப கோயில் ஒன்றைக் கட்ட முடிவு எடுத்து அதற்காக 85 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் வாங்கப்பட்டது. கோயில் நிர்மாணிப்பதற்காக ஒரு குழுவை அமைத்தனர். கோதண்டராம ஸ்வாமி கோயில் கட்ட முடிவு செய்து, அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து 5.2.1933-ம் ஆண்டு அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தேறியது. மூலவராக சீதாதேவி லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்தி கல்யாண கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ராமருக்கு ஓர் கோயில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இப்பகுதி, ராம் நகர் என அழைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று சீரும் சிறப்புமாக விளங்கி வருகிறது. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோயில்.
படம், தகவல்:
வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:
ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.

அமைவிடம் :
கோவை-காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு அருகேயே ராம்நகரில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
கோயம்புத்தூர்
தங்கும் வசதி :
கோயம்புத்தூர்
கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க.

இன்றைய கோபுர தரிசனம் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு கோயம்புத்தூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் 

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு கோயம்புத்தூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம்

மூலவர்:
மாரியம்மன்

தல விருட்சம்:
ஆலமரம்

தீர்த்தம்:
வற்றாத தீர்த்த கிணறு

பழமை:
500 வருடங்களுக்குள்

ஊர்:
கோயம்புத்தூர்

மாவட்டம்:
கோயம்புத்தூர்

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
5 வருடத்திற்கு ஒரு முறை பூச்சாட்டு, அமாவாசை, பௌர்ணமி பூஜைகள்

தல சிறப்பு:
வடக்கு பார்த்த மாரியம்மன். பல வருடத்திற்கு முன்பே தோன்றிய வற்றாத கிணறும், என்றும் நிலையாக இருக்கு குளவி கல்லும் கோவில் சிறப்பு.

திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,மதுக்கரை மார்க்கெட், கோவை-641 105

போன்:
+91 91- 9976987945

பொது தகவல்:
கோவிலின் அமைப்பு:

வடக்கு பார்த்த மாரியம்மன் கோவிலின் முன்புறம் தலவிருட்சகமான ஆலமரம் உள்ளது. அதை கடந்து கொடிமரமும், அதனையடுத்து கோவிலின் கோபுரம் வருகிறது.

கோபுரத்தின் உள்ளே சென்றதும் கோவிலின் பரந்து விரிந்த நான்கு முனைகளும் மனதிற்கு இதம் தரும் அழகுடன் அமைந்துள்ளது.கிழக்கு பகுதியில் திரும்பியதும் வற்றாத கிணறும், குழவி கள்ளும் இருக்கும்.

அதை கடந்து கோவிலை சுற்றி வரும் போது கிழக்கு பார்த்த விநாயகரும், மேற்கு பார்த்த இரண்டு நந்தி சிலைகளும் வீற்றிருக்கும்.

பின்னர் அம்மனை தரிசிக்க முன்புறம் வழியாக உள்ளே செல்லும் போது பார்த்த ஊஞ்சல், மற்றும் சிம்ம வாகனம் அமைந்துள்ளது. அங்கிருந்து வழிபடும் போது வடக்கு பார்த்த மாரியம்மன் வீற்றிருக்கும் அழகு தெரியும்.

பிரார்த்தனை:
அம்மை, பூ போட்டு காரியம் கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

நேர்த்திக்கடன்:
கெடாவெட்டு, உருவார பொம்மை, பூச்சட்டி

தல வரலாறு:
350 வருடங்களுக்கு முன்பு தோன்றிய கோவில். திப்பு சுல்தான் காலத்தில் உருவானது.

ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளை காரனிடமிருந்து கன்னிபெண்ணை காப்பாற்றிய குளவி கல் அந்த பெண்ணால் மதுக்கரை அங்காடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதில் சுவர் அதிகம் காணப்பட்டதாலே இந்த பகுதிக்கு மதுக்கரை என்றும் பெயர் வைக்கப்பட்டது.

கன்னி பெண்ணால் கொண்டு வரப்பட்ட குளவிக்கல் மீண்டும் பலமுறை பலரால் பல இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும், மீண்டும் இதே இடத்திற்கு தானாகவே வந்துள்ளது. அந்த குளவி கல் இங்கேயே நிலையாகி போனதையடுத்து, அது அம்மன் சக்தி என மாரியம்மன் கோவில் நிறுவப்பட்டது.

குளவிக்கல் இங்கே நிறுவியதன் பின்னர் அந்த ஊர் மக்களுக்கு நல்ல காரியங்கள் அதிகமாக நடக்க துவங்கியது. மேலும் 7 ஊர் மக்களுக்கு இந்த அம்மன் குல தெய்வம். மதுக்கரை மக்களுக்கு காவல் தெய்வம். 

5 வருடத்திற்கு ஒரு முறை பூச்சாட்டுதல் விழா நடைபெற துவங்கியது. முதல் பூச்சாட்டு 1938 ல் துவங்கியது. ஆரம்ப காலத்திலிருந்தே வற்றாத இந்த கிணறும் இங்கேயே இருக்கிறது. 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாபி?ஷகம் நடைபெறும்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:

வடக்கு பார்த்த மாரியம்மன். பல வருடத்திற்கு முன்பே தோன்றிய வற்றாத கிணறும், என்றும் நிலையாக இருக்கு குளவி கல்லும் கோவில் சிறப்பு.

அமைவிடம்:
காந்திபுரம் பகுதியிலிருந்து(22) மதுக்கரை மார்க்கெட் செல்லும் பஸ்ஸில் செல்ல வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் அதன் அருகேயே கோவில் உள்ளது.பஸ் நம்பர்– 3அ, 18, 66, 66அ, 47அ, 50.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
கோவை
அருகிலுள்ள விமான நிலையம்:
கோவை
தங்கும் வசதி:
கோயம்புத்தூர்
கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

இன்றைய கோபுரதரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஓ.சிறுவயல் அருள்மிகு பொன்னழகியம்மன் ஆலயம்.

இன்றைய கோபுர
தரிசனம் 

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஓ.சிறுவயல் அருள்மிகு பொன்னழகியம்மன் ஆலயம்.

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*
*மூலவர்:*
பொன்னழகியம்மன்
*அம்மன்/தாயார்:*
அழகியநாயகி
*தல விருட்சம்:*
மகிழம்
*தீர்த்தம்:*
அம்பாள் தெப்பம்
*பழமை:*
500-1000 வருடங்களுக்கு முன்
*ஊர்:*
ஓ.சிறுவயல்
*மாவட்டம்:*
சிவகங்கை
*மாநிலம்:*
தமிழ்நாடு
*திருவிழா:*
*சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.*

*தல சிறப்பு:*

*இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது.இங்கு அனுமான் ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களைப் பிடித்த நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில், ஓ.சிறுவயல் - 630 208,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 4577 - 264 778.*

*பொது தகவல்:*

*கோயிலுக்கு முன்புறம், சிறிய கல்வடிவில், "கல்லுச்சியம்மன்' காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம்.*

*அனுமான் அஞ்சலி ஹஸ்தம் எனப்படும் ராமனை வணங்கிய நிலையிலும், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற அபய ஹஸ்த நிலையிலும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களை பிடித்த நிலையிலுள்ள அனுமானை சிவகங்கை மாவட்டம் ஓ.சிறுவயலில் உள்ள பொன்னழகியம்மன் கோயிலில் தரிசிக்கலாம்.*

*பிரார்த்தனை:*

*திருமணத்தடை நீங்க அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி சந்தனக்காப்பும், சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபடலாம்.*

*ராமர் சன்னதியில் வேண்டிக்கொள்ள எதிரி பயம் நீங்கும், பணிவு குணம் வரும் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும்,நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*அம்பாள் அமைப்பு:*

*அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது.*

*ராமர் பாதம் பிடித்த ஆஞ்சநேயர்:*

*பிரகாரத்தில் ராமர், சீதை ஆகியோர் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். ராமரின் இருக்கைக்கு கீழ் இருக்கும் ஆஞ்சநேயர், அவரது காலைப்பிடித்தபடி இருக்கிறார். இதனை, ராமருக்கு ஆஞ்சநேயர் கீழ்பணிந்து பணிவிடை செய்த கோலம் என்கிறார்கள். அருகில் இருக்கும் சீதாதேவி தனது வலதுகாலை மடக்கி உயர்த்திக் கொண்டு, இடக்காலை மட்டும் தொங்க விட்டபடி அனுமன் வணங்குவதை பார்ப்பவள் போல காட்சி தருகிறாள். தன் கணவரின் சேவகனான ஆஞ்சநேயர் எங்கே தன் காலையும் பிடித்து விடுவாரோ என்ற எண்ணத்தில் அவள் தன் ஒரு காலை மட்டும் இப்படி தூக்கி வைத்துக்கொண்டதாக சொல் கிறார்கள்.*

*சகோதர தலம்:*

*பிரச்னைகளால் பிரிந்துள்ள சகோதரர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் மீண்டும் சேர்ந்து கொள்வர் என்கிறார்கள். இதற்காக இங்கு "தத்துக் கொடுத்தல்' எனும் சடங்கைச் செய்கிறார்கள்.*

*தல வரலாறு:*

*முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிழங்கின் மீது கத்தி பட்டு ரத்தம் வெளிப்பட்டது.*

*பயந்த தொழிலாளர்கள் ஊர் மக்களிடம் இதனை தெரிவித்தனர். மக்கள் சென்று பார்த்தபோது அம்பாள் சுயம்புவாக இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் கோயில் கட்டினர்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலத்து அம்மன் சுயம்பு அம்மனாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*காரைக்குடியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் ஓ.சிறுவயல் இருக்கிறது. இவ்வூருக்கு மினிபஸ்கள் செல்கின்றன.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை.
*தங்கும் வசதி:*
காரைக்குடி
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...*
*வாழ்க வையகம்...*

இன்றைய கோபுரதரிசனம்சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம்.

இன்றைய கோபுர
தரிசனம்

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம்.

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*
ராஜேந்திர சோழீஸ்வரர்
*உற்சவர்:*
சோமாஸ்கந்தர்
*அம்மன்/தாயார்:*
ஞானாம்பிகை
*தல விருட்சம்:*
வில்வம்
*தீர்த்தம்:*
தெய்வபுஷ்கரணி
*பழமை:*
1000-2000 வருடங்களுக்கு முன்
*புராண பெயர்:*
இந்திரஅவதாரநல்லூர்
*ஊர்:*
இளையான்குடி
*மாவட்டம்:*
சிவகங்கை
*மாநிலம்:*
தமிழ்நாடு
*திருவிழா:*

*மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை.*

*தல சிறப்பு:*

*63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி- 630 702,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 4564 - 268 544, +91- 98651 58374.*

*பொது தகவல்:*

*சிவன் சன்னதிக்கு பின்புறம் வெங்கடேசப்பெருமாள் தனிச்சன்னதியில் இருக்கிறார்.*

*கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு சீடர்களுடன் மட்டும் காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.*

*பிரகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், சூரியன், சந்திரனுக்கு சன்னதி இருக்கிறது.*

*பிரார்த்தனை:*

*பிறருக்கு உதவி செய்யும் குணம் வளரவும், உணவிற்கு பஞ்சமில்லாத நிலை உண்டாகவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அன்னம் படைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.*

*தலபெருமை:*

*தண்டுக்கீரை நைவேத்யம்:*

*இக்கோயிலில் மாறநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. அன்னதானம் செய்து சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு, "பசிப்பிணி மருத்துவர்' என்ற சிறப்புப்பெயர் உண்டு. குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்.*

*இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்' (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். நாயனார் அன்னதானம் செய்து, சிவனருளால் முக்தி பெற்ற தலமென்பதால் இங்கு பக்தர்கள் அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட, இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழக்கம் உள்ளது.*

*தெய்வானையுடன் முருகன்:*

*சுவாமி, அம்பாள் ஞானாம்பிகை இருவருக்கும் தனித்தனி வாசல் உள்ளது. அம்பாள், சிவனுக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஞானம் தருபவளாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள்.*

*குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் முருகன், தெய்வானையுடன் இருக்கிறார். உடன் வள்ளி இல்லை. இந்திரன் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலமென்பதால், தெய்வானை மட்டும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.*

*தல வரலாறு:*

*மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி பூலோகம் வந்த இந்திரன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்டான். அப்போது இங்கும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.*

*இவ்வூரில் வசித்த இளையான்குடி மாறனார் என்ற செல்வந்தர், சிவன் மீது தீராத அன்பு கொண்டவராக இருந்தார். அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரை சோதிக்க எண்ணிய சிவன், மாறனாரின் செல்வத்தை குறைத்து வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் மாறனார், அடியார்களுக்கு அன்னமிடுவதை நிறுத்தவில்லை.*

*ஒருநாள் இரவில் சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு படைக்க வீட்டில் உணவு ஏதுமில்லை. ஆனாலும் கலங்காத மாறனார், வயலுக்குச் சென்று அன்று காலையில் விதைத்த நெல்லை, எடுத்து வந்தார். அவரது மனைவி அதை உலர்த்தி, அரிசி எடுத்து, அன்னம் மற்றும் கீரை சமைத்தார். அப்போது சிவன் சுயரூபம் காட்டி அவருக்கு முக்தி கொடுத்தார். நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தருளினார். இவருக்கு காட்சி தந்த சிவன், "ராஜேந்திர சோழீஸ்வரர்' என்ற பெயரில் அருளுகிறார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.*

*இருப்பிடம்:*

*பரமக்குடியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பிற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
பரமக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குடி
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...*
*வாழ்க வையகம்...

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்

ஸ்ரீராமஜெயம்
*ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய

*அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்*

*திருவிழா* வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோற்ஸவம்.  

*தல சிறப்பு* 

இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். 

அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.  

*பொது தகவல்* 

இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.  

*பிரார்த்தனை* 

சுவாமியிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறுவதாக நம்பிக்கை.  

*நேர்த்திக்கடன்* சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.  

*தலபெருமை*  

சவுரிராஜப் பெருமாள்: ஒரு‌ சமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. 

எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். 

மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். 

கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். 

இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு. 

*சுவாமி சிறப்பு* : 

இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். 

விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.

அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர். 

*கர்வம் அழிந்த கருடன்* : 

தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது.

கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். 

மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர். 

*முனையதரையன் பொங்கல்* :

முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். 

இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார்.

இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர். 

*இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது*. 

உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கி றார்கள். 

தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. 

இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை.

*திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது*. 

கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது. 

*திருநெற்றியில் தழும்பு* :

உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்) 
  
"ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. 

மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம். 

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. 

உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர். 

சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. 
   
திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். 

குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. 

நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார். 

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம். 

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம். 

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.  

*தல வரலாறு*

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். 

மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். 

முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். 

அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.

விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.🌹

இன்றைய கோபுர தரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வேம்பத்தூர் அருள்மிகு சுந்தர ராஜ பெருமாள் ஆலயம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தருமே
இன்றைய கோபுர தரிசனம் 

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வேம்பத்தூர் அருள்மிகு சுந்தர ராஜ பெருமாள் ஆலயம்*

மூலவர்:
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்

அம்மன்/தாயார்:
பூமிநீளா தேவி

உற்சவர்:
ஸ்ரீதேவி,பூதேவி

பழமை:
500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:
வேம்பத்தூர்

மாவட்டம்:
சிவகங்கை

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
ஆவணி திருவோணம், புரட்டாசி கடைசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி.

தல சிறப்பு:
சுதையாலான பிரம்மாண்ட திருமேனி.

திறக்கும் நேரம்:
காலை6- 11-மணி, மாலை5 - இரவு 8 மணி.

முகவரி:
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில்,வேம்பத்தூர் - 630 565.சிவகங்கை மாவட்டம்.

போன்:
+91- 4575- 236 284, 236 337 97903 25083

பொது தகவல்:
ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.

பிரார்த்தனை:

மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

இங்குள்ள பெருமாள், இடது கையால் நம்மை வர வழைத்து வலது கையால் அருள்பாலிக்கிறார். இந்த பெருமாளை சிற்ப சாஸ்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பு உள்ள முறைப்படி, உளி கொண்டு செதுக்காமல் கல்லையே கொண்டு செதுக்கி வடிவமைத்து உள்ளார்கள். 

பெருமாளை செல்வத்துக்கு அதிபதியாக காட்டுவதுண்டு. ஆனால், இத்தல பெருமாள் கல்வி, செல்வம் இரண்டிற்குமே அதிபதியாக உள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும், காளமேகப்புலவரும் இவரை வணங்கி தங்களது புலமை மேலும் சிறக்குமாறு வழிபட்டு சென்றுள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

இவர்கள் தவிர தமிழ்சங்க புலவர்களில் ஒருவரான வேம்பத்தூர் குமரனார் அகநானூறில் 157வது பாடலையும்,புறநானூறில் 317வது பாடலையும், தமிழ்சங்க புலவர்களில் மற்றொருவரான வேம்பத்தூர் கண்ணன் கூத்தனார் குறுந்தொகையில் 362வது பாடலையும், சுந்தராஜ பெருமாளை வழிபட்டு பாடியுள்ளார்கள். 

பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கவிராஜ பண்டிதர் இந்த பெருமாளை வழிபட்டு ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலஹரி மற்றும் ஆனந்த லஹரியை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அத்துடன் இவர் மானாமதுரை ஆனந்தநாயகி மாலையும், வேம்பத்தூர் வாராஹியின் மேல் புவனாம்பிகை கலை ஞான தீபமும், மேல கொடுமனூர் முருகன் மீது ஞான உலாவும் பாடியுள்ளார். வேம்பத்தூர் பெருமாளின் கருணையால் கவிராஜபண்டிதர் பெற்ற கவித்திறமையை அறிந்த மதுரை மீனாட்சி, பண்டிதர் காசி சென்ற போது அவருக்கு மகளாக இருந்து சேவை புரிந்திருக்கிறாள்.

மதுரை மீனாட்சியே சேவை செய்யும் அளவுக்கு புலமைதரக்கூடிய வள்ளல் தான் வேம்பத்தூர் பெருமாள். அத்துடன் 16ம் நூற்றாண்டு கவிகாலருத்ரர், 17ம் நூற்றாண்டு வீரை ஆளவந்தார் மாதவபட்டர், வீரை அம்பிகாபதி, 18ம் நூற்றாண்டு கவிக்குஞ்சரபாரதி, 19ம் நூற்றாண்டு கவிசங்கர சுப்பு சாஸ்திரிகள், கவி சங்கரநாராயணய்யர், உ.வே. சாமிநாதய்யர், சிலேடைப்புலி பிச்சுவய்யர் ஆகியோர் இத்தல பெருமாளின் அருளால் பெரும் புலவர்களாக திகழ்ந்தனர்.

கூப்பிட்டு அருள்பவர்:

ஆகூய் வரதராக பெருமாள் கருவறையில் வீற்றிருக்கிறார். ஆகூய் வரதர் என்றால் இடக்கையால் வா என்று அழைத்து வலக்கையால் அருள்பாலிப்பவர் என்று பொருள். இடதுகை விரல்களை வளைத்து, அருகில் நம்மை அழைத்து, வலக்கையால் அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேல் இருகைகளும் சங்கு, சக்கரத்தைத் தாங்கி நிற்கின்றன. திருமகள் பெருமாளின் மார்பில் குடி கொண்டிருக்கிறாள். பூமிதேவியும், நீளாதேவியும் இருபுறத்திலும் உடன் காட்சி தருகின்றனர்.

விண்ணகரக் கோயில்:

திருமாலுக்குரிய 108 திவ்யதேசங்களில் வைகுண்டத்தை இப்பூவுலகில் காணமுடியாது. ஆனால், வேம்பத்தூர் சுந்தரராஜப்பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலத்திற்கு விண்ணகரம் என்றும் பெயருண்டு.

கல்வெட்டுகளில் இத்தலம் புறவரி விண்ணகரம், ராஜேந்திர விண்ணகரம், ஸ்ரீவிஜய மாணிக்க விண்ணகரம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

மாலையில் மந்திரவிபூதி:

இங்கு தினமும் சுதர்சன சக்கரத்தை விபூதியில் இட்டு விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜெபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் இந்த விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய்நொடிகளைப் போக்கும் மருந்தாக இதனைப் பூசிக் கொள்கின்றனர். அரியும் சிவனும் ஒன்றே என்ற அடிப்படையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

பூமியில் கிடைத்த பூவராகர்:

இங்குள்ள பூவராகப்பெருமாள் திருப்பணிவேலையின் போது, பூமிக்கடியில் கிடைக்கப்பெற்றார். பூமாதேவியை மடியில் ஏந்திய இவரது திருமுகம் தேவியை நோக்கி உள்ளது. சர்க்கரைப் பொங்கலும், கோரைக்கிழங்கு நைவேத்யமும் ரேவதி நட்சத்திரத்தில் நைவேத்யம் செய்யப்படுகிறது. பக்தர்கள், இவரிடம் தங்கள் குறையை ஒரு தாளில் எழுதி விண்ணப்பிக்கின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை அதைக் கோயிலில் பாதுகாக்கின்றனர். குறை நிவர்த்தியானதும், பூவராகருக்கு பூச்சொரிந்தோ (உதிரிப்பூக்களை கொட்டுவது), பூப்பந்தல் இட்டோ நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கல்வியருளும் ஹயக்ரீவர்:

கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். சரஸ்வதிதேவியின் குருவான இவரை வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இவருக்கு வியாழக்கிழமை தேன் அபிஷேகமும், ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவதும் சிறப்பாகும். கல்வியில் முன்னேற்றம் பெற நெய்தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்குகின்றனர். பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிஆகியோரும் வீற்றிருக்கின்றனர். கருடாழ்வார் கைகூப்பிய படி மூலவர் எதிரே காட்சிதருகிறார்.

தல வரலாறு:

கவிகால ருத்ரர் என்ற புலவர் திருமால் பக்தராக விளங்கினார். பெருமாள் அவரது கனவில் தோன்றி, அடியெடுத்துக் கொடுத்து பாடும்படி அருள்புரிந்தார். புலவர் பெருமாளிடம், அவ்விடத்தில் தங்கும்படி வேண்டிக்கொண்டார். பெருமாளும் அங்கே தங்கினார். பாண்டிய மன்னன் ஜடாவர்ம குலசேகரன் கோயில் நிர்மாணித்தான். சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. காலவெள்ளத்தில் கோயில் சிதிலமடைந்தது. பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது.

முன்னொரு காலத்தில் குலசேகரபாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்ட போது, கடும் வறட்சி ஏற்பட்டது. இவன் சோழ இளவரசியைத் திருமணம் செய்திருந்தான்.சோழநாட்டில் நீர் நிறைந்து பயிர் விளைந்து செழிப்பாக இருக்கும் பூமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் பாண்டியன். இவன் தன் மாமனாரிடம், "" எங்கள் நாட்டில் ஏற்பட்ட வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும்? என்றான்.""காசியிலிருந்து 2008 அந்தணர்களை அழைத்து வந்து உன் நாட்டில் யாகம் செய்தால் மழை பொழியும். பயிர் செழிக்கும்,'' என்றார். சோழன்.யாகம் நடத்த 2008 அந்தணர்கள் குடும்பத்துடன் வந்தனர். யாகம் சிறப்பாக நடந்து மழை பொழிந்தது. விளைச்சல் பெருகியது. மன்னனுக்கு அளவில்லாத ஆனந்தம். யாகம் செய்த அந்தணர்களுக்கு அவர்களது பெயரிலேயே நிலம் கொடுத்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்தான். 

நிலப்பட்டா கொடுக்கும் போது, 2007 அந்தணர்கள் வந்து விட்டனர்.2008வது அந்தணரான கணபதி என்பவரை மட்டும் காணவில்லை. மன்னனுக்கு வருத்தம். என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்த முழு முதற்கடவுளான விநாயகரே, அந்தணர் வடிவில் நேரில் வந்து ""நான் தான் கணபதி'' என்று கூறி நிலத்தை பெற்றுக்கொண்டார்.அப்படி பெற்றுக்கொண்ட நிலம் தான் வேம்பத்தூர். இந்த கணபதி ஊரின் குளக்கரையில் இன்றும் 2008 கணபதி'' என்ற பெயரில் வீற்றிருந்து வேதம் சொல்லி தருவதாக ஐதீகம்.இங்குள்ள மக்களில் பலர் பண்டிதர்களாகவும், ஆகம சாஸ்திரங்களிலும், மருத்து வத்திலும் வல்லுனர்களாகவும் விளங்குகிறார்கள்.

அமைவிடம்:
மதுரை- ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8கி.மீ.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை
தங்கும் வசதி:
மதுரை

கோபுர தரிசனம் தொடரும்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்புகளை பார்க்கலாம்

*புரட்டாசி ஸ்பெஷல்*

*புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்புகளை பார்க்கலாம்*

1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

3. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.

4. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

5. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

6 . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

7.விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

8. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

9. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

10. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

11. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

12.புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

13. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

14. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

15. சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

16. புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

17.பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

18. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

19. புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

20. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவார்கள்.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

21. ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்று உண்ணா நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் பெற முடியும். புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.

22. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.

23. புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும்.

24. புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

25. புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ‘‘திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா நமக்கு நமஸ்காரம்….’’ என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

26. புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.

27. சென்னையில் இருந்து திருப்பதி-திருமலைக்கு புனித பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. இந்த ஆண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

28. புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

29. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.

30. புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

31. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

32. ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடைபெறும்.

33. தென்மேற்கு திசை கன்னி மூலை என்று கூறப்படுவதால் கோயிலில் இந்தக் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார். புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழிபாடு கூடுதல் பலன்களைத் தரும்.

34. புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்திசியில் சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் தரிசிக்கலாம். மேலும் புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி அன்று வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

35. புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.

36. புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கையில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.

37. புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்று வாஸ்து குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

38. புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

39. புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

40. கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.

*கோவிந்தா ஹரி கோவிந்தா*

இன்றைய கோபுர‌ தரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வைரவன்பட்டி அருள்மிகு வைரவன்சுவாமி ஆலயம்.

இன்றைய கோபுர*
*தரிசனம்
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வைரவன்பட்டி அருள்மிகு வைரவன்சுவாமி ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

வளரொளிநாதர்(வைரவன்)

*அம்மன்/தாயார்:*

வடிவுடையம்பாள்

*தல விருட்சம்:*

ஏர், அளிஞ்சி

*தீர்த்தம்:*

வைரவர் தீர்த்தம்

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*புராண பெயர்:*

வடுகநாதபுரம்

*ஊர்:*

வைரவன்பட்டி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு.*

*தல சிறப்பு:*

*இது ஒரு பைரவர் தலமாகும், நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி - 630 215சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91-4577- 264 237*

*பொது தகவல்:*

*தலவிநாயகர்: வளரொளி விநாயகர்.*

*ராஜகோபுரம்: ஐந்து நிலை*

*பிரார்த்தனை:*

*எதிரி பயம், கிரக தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.*

*தலபெருமை:*

*இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.*

*பைரவர் சிறப்பு:*

*அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரிபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.*

*தோஷம் நீக்கும் பல்லி:*

*அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது.*

*தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.*

*தல வரலாறு:*

*சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார்.*

*ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிஎறிந்தார்.*

*இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது.*

*அமைவிடம்:*
*திருப்புத்தூரில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. காரைக்குடி செல்லும் பஸ்கள் இவ்வழியே செல்கின்றன.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குட
*கோபுர தரிசனம் தொடரும்...
*வாழ்க வளமுடன்...
*வாழ்க வையகம்..

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதிவுகள்

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதிவுகள் 

_*1. இந்திரலிங்கம் :*_

_இந்தலிங்கம் கிழக்கே பார்த்து_
_அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு_ _நீண்ட_
_ஆயுளும் பெருத்த செல்வமும்_ _வழங்கும்._

_*2. அக்னிலிங்கம் :*_

_இந்த லிங்கம் தென்கிழக்கு_ _திசையை நோக்கியுள்ளது._ _வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது._

_*3. எமலிங்கம் :*_

_இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது._ _எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்._ _இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்._

_*4. நிருதி லிங்கம் :*_

_இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள்_
_நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்._

_*5. வருண லிங்கம் :*_

_இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது._ _சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்._

_*6. வாயு லிங்கம் :*_

_இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது._ _இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல்,_ _மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்._

_*7. குபேர லிங்கம் :*_

_வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது._ _பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்._

_*8. எசானிய லிங்கம் :*_

_வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது._ _புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும்,_ _அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்_

இன்றைய கோபுர‌ தரிசனம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயம்.

இன்றைய கோபுர*
*தரிசனம் 🙏

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

திருத்தளி நாதர்

*உற்சவர்:*

சோமாஸ்கந்தர்

*அம்மன்/தாயார்:*

சிவகாமி அம்மன்

*தல விருட்சம்:*

கொன்றை

*தீர்த்தம்:*

ஸ்ரீதளி தீர்த்தம், சிவகங்கை

*ஆகமம்/பூஜை:*

சிவாகமம்

*பழமை:*

1000-2000 வருடங்களுக்கு முன்

*புராண பெயர்:*

புத்தூர், திருப்புத்தூர்

*ஊர்:*

திருப்புத்தூர்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*பாடியவர்கள்:*

*சம்பந்தர், அப்பர், அருணகிரியார்*

*தேவாரப்பதிகம்*

*நாற விண்ட நறுமா மலர்க்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும் ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.*

*திருஞானசம்பந்தர்*

*தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.*

*திருவிழா:*

*சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பகசஷ்டி.*

*தல சிறப்பு:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம்.*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 196 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*நிர்வாக அதிகாரி, அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்-630211.சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 94420 47593.*

*பொது தகவல்:*

*இத்தலத்தில் உள்ள நடராஜர் கவுரி தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தலவிநாயகரின் திருநாமம் பொள்ளாப்பிள்ளையார்.*

*வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான்.*

*தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.*

*இவனுக்கு சித்திரை மாதத்தில் இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், "யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர்.*

*ராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார்.*

*இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார்.*

*நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இப்படி, பலதரப்பட்ட விசேஷங்களை அடக்கியது இந்தக்கோயில்.*

*பிரார்த்தனை:*

*குடும்பம் செழிக்க, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார்.*

*அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் "யோகபைரவராக' காட்சி தருகிறார்.*

*இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.*

*யோக நிலையில் இருப்பதால் இவருக்கு "நாய்' வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். "ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்.*

*தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.*

*கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், "அஷ்டபைரவ யாகம்' நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.*

*தல வரலாறு:*

*முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.*

*புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது.*

*புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்' என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*மதுரையிலிருந்து 70 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி, மதுரை
*அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குடி
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...
*வாழ்க வையகம்...*

திங்கள், 25 செப்டம்பர், 2023

கோடி கோடியாக செலவு செய்தாலும் சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட மருந்து இருக்காது!!!

கோடி கோடியாக செலவு செய்தாலும் சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட மருந்து இருக்காது!!!


இன்றைய காலகட்டத்தில் குடித்து குடித்து குடித்து அடிமையானவர்கள் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகமே. குடியான் மட்டும் இன்றி இன்றைய வேகமான நாகரிகமான நவீன காலகட்டத்தில் தண்ணீர் குடிப்பது மறந்துவிடும் இளைஞர்கள் மத்தியில் சிறுநீரகப் பிரச்சினை இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது.

அந்த இலை தான் மூக்கிரட்டை, சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் கூட இந்த மூக்கிரட்டை சாற்றை சாப்பிட்டு வரும் பொழுது சிறுநீரகம் மறுபடியும் உயிர் பெறும்.

மூக்கிரட்டை இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்துச் சாற்றை எடுத்து , பழைய கஞ்சியில் சோற்றை மட்டும் தனியே பிழிந்த எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் மூக்கிரட்டை சாற்றை ஊற்றி கரைத்து குடித்து வரும் பொழுது சிறுநீரகம் உயிர் பெற்று மீண்டும் செயல் பட தொடங்கிவிடும்.

சிறுநீரக கற்கள் இருந்தால் கூட கரைந்து வெளியேறிவிடும். சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியை நிமிடத்தில் போக்கும் திறன் இந்த மூக்கிரட்டை சாற்றுக்கு உண்டு.

லெமன் பெப்பர் மீன் வறுவல்

லெமன் பெப்பர் மீன் வறுவல்

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். இன்று லெமன், பெப்பர் சேர்த்து மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

வஞ்சிரம் மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
லெமன் சாறு - 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்



செய்முறை :

வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு பொடி, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். 

இந்த கலவையில் மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு புரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

*சுவையான லெமன் பெப்பர் மீன் வறுவல் ரெடி*

தூதுவளை சூப்

தூதுவளை சூப்

தேவையான பொருட்கள்:
 
தூதுவளை இலைகள் - ஒரு கைப்பிடி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல் பொடியாக

வெங்காயம் - 2 
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
தனியாத்தூள் -1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை -1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கான்ப்ளார் - அரை தேக்கரண்டி
 
செய்முறை:
 
ஒரு கடாயில் மிளகு, சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
 
வெண்ணெய் அல்லது எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம் பொடியாக சேர்த்து வதக்கி பிறகு தூதுவளையை சேர்த்து வதக்கி துண்டு துண்டாக அல்லது (பேஸ்ட் போல செய்தும் சேர்க்கலாம்) மிளகு, சீரகம் பொடிகளை சேர்த்து தனியாத்தூள், உப்பு போடவும்.
 
பிறகு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவேண்டும் 
 
நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் கான்ப்ளார் கரைத்து ஊற்றி இறக்கி மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.