தேவையானவை:
துருவிய இஞ்சி,
எலுமிச்சை சாறு – தலா 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு டீஸ்பூன் அல்லது சர்க்கரை – 2 டீஸ்பூன்,
உப்பு – அரை சிட்டிகை,
நீர் – 250 மி.லி.
செய்முறை:
துருவிய இஞ்சியை நீரில் நன்றாகக் கொதிக்கவிடவும். இறக்குவதற்கு முன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து வடிகட்டவும்.
இதில் எலுமிச்சை சாறு, உப்பு, தேவையான அளவு சுத்தமான தண்ணீர் சேர்த்துப் பருகவும். இதை காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்துவது நல்லது.
நன்மைகள்:
மசக்கை நேரத்துக்கு உகந்த பானம். பசியைத் தூண்டும், நாக்குக்கு ருசியைக் கொடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும்
0 Comments: