திங்கள், 25 செப்டம்பர், 2023

Laddu : சதுர்த்தி ஸ்பெஷல் – விநாயகருக்கு பிடித்த லட்டு செய்ய கத்துக்கலாமா? - ஈசியாக செய்ய இதோ ஒரு வழி!

Laddu : சதுர்த்தி ஸ்பெஷல் – விநாயகருக்கு பிடித்த லட்டு செய்ய கத்துக்கலாமா? - ஈசியாக செய்ய இதோ ஒரு வழி!

Laddu சதுர்த்தி ஸ்பெஷல் விநாயகருக்கு பிடித்த லட்டு செய்ய கத்துக்கலாமா? ஈசியாக செய்ய இதோ ஒரு வழி!

சம்பா கோதுமை ரவையில் லட்டு செய்வது எப்படி? 
Laddu : விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. வீட்டில் விநாயருக்கு பிடித்தவற்றை செய்யவேண்டும். விநாயகருக்கு பிடித்த லட்டு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 1 கப்
(வெள்ளைச்சர்க்கரை சேர்க்க விருப்பமில்லையெனில் நாட்டுச்சர்க்கரை, கரும்பு சர்க்கரை அல்லது வெல்லம் என எதுவேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்)
ஃபுட் கலர் – சிறிதளவு (ஆரஞ்ச் ரெட்)
(ஃபுட் கலர் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் வேண்டாம்)
ஏலக்காய் – 2 சிட்டிகை
முந்திரி – 8
வெள்ளரி விதைகள் – 2 ஸ்பூன்
(நீங்கள் விரும்பினால் கூடுதலாக உங்களுக்கு பிடித்த நட்ஸ்கள் அல்லது விதைகள் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதை அதிகம் சேர்த்தால் லட்டின் சுவை மாறிவிடும்)

செய்முறை
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, சூடாக்கி அதில் சம்பா கோதுமையை நன்றாக வறுத்துவிட வேண்டும்.
அடுப்பு குறைவான தீயில் இருக்க வேண்டும். அதிகம் இருந்தால், கோதுமை அடிபிடித்து கருப்பாகிவிடும். மேலும் தொடர்ந்து வறுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இடையில் நிறுத்தினால், அனைத்து ரவையும் ஒன்றுபோல் வறுபடாது. வறுக்கும்போது நல்ல வாசம் வரும்.
மற்றொரு கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்தவுடன், வறுத்து எடுத்த சம்பா கோதுமை ரவையை சேர்த்து குறைவான தீயில் நன்றாக கிண்ட வேண்டும். அடுப்பு குறைவாக இருக்கும்போதுதான் ரவை நன்றாக வெந்து வரும்.
தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றியவுடன், சர்க்கரை அல்லது இனிப்புக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த எதுவேண்டுமானாலும் எடுத்து சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
குறைவான தீயில் சர்க்கரை இளகி கெட்டியாகிவரும் வரை நன்றாக கலந்துவிடவேண்டும்.
பின்னர் ஃபுட் கலர், ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு (இனிப்பில் எப்போதும் உப்பு சேர்ப்பது அந்த இனிப்பின் சுவையாக எடுத்துக்காட்டும். எனவே எந்த இனிப்பு செய்யும்போதும், மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்) அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
கடைசியாக மிச்சமுள்ள நெய், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவேண்டும். கை பொறுக்கும் சூட்டில் எடுத்து சிறுசிறு லட்டுகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு லட்டு பிரசாதம் செய்து விநாயகப்பெருமானுக்கு படையலிட்டு வணங்குவார்கள். இந்த விநாயகர் சதுர்த்திக்கு இதை செய்து வழிபட்டு கணபதியின் அருளை பெறுங்கள்.
Previous Post
Next Post

0 Comments: