சனி, 30 செப்டம்பர், 2023

Oil Brinjal Gravy : நாவில் எச்சில் ஊறவைக்கும்! பார்த்தவுடனே சாப்பிட தூண்டும்! எண்ணெய் கத்திரிக்காய் புளிக் குழம்பு!

Oil Brinjal Gravy : நாவில் எச்சில் ஊறவைக்கும்! பார்த்தவுடனே சாப்பிட தூண்டும்! எண்ணெய் கத்திரிக்காய் புளிக் குழம்பு!

எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு செய்ய
தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் கத்தரிக்காய் – கால் கிலோ
தக்காளி – 2
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
பூண்டு – 10 பல்
கடுகு - கால் ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
புளி கரைசல் – ஒரு கப்
நல்லெண்ணெய் – 100 மிலி
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
கொத்தமல்லிப்பொடி – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுகிக்கொள்ள வேண்டும். தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய்களின் நீளக் காம்புகளை மட்டும் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொப்பி போல மேலே படர்ந்துள்ள காம்பை நீக்காமல் காயை நான்காகக் கீறிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், நறுக்கிய தக்காளி மற்றும் நறுக்கிய (பாதி) வெங்காயத்தைப் போட்டு வதக்கவேண்டும். வதக்கியவுடன் அதை நன்றாக ஆற வைத்து தேங்காய் சேர்த்து மிக்சியில் அரைக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய்விட்டு வெந்தயம் மற்றும் கடுகு தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள மீதி வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
வதங்கியதும் பூண்டை தட்டிப்போட்டு வதக்கவேண்டும். பின்னர் கத்தரிக்காய்களை போட்டு மீதி எண்ணெய் அனைத்தும் ஊற்றி நன்கு வதக்கவும். பின்பு அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி விடவேண்டும். இதனுடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் பொடிகளை சேர்த்துக் கிளறி, பச்சை வாசம்போகும் வரை வதக்கவேண்டும்.
இப்போது புளி கரைசல் சேர்த்து, அதோடு இன்னும் கொஞ்சம் நீரும் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நன்கு கொதித்து காய்கள் வெந்து எண்ணெய் மேலாக எழுந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித் தழைகளை தூவி இறக்க வேண்டும். கமகமக்கும் எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு ரெடி சாப்பிட தயாராக உள்ளது.
இப்படி செய்துகொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் ஒரு முழு தட்டு சாதத்தை காலி செய்வார்கள். சூடான சாதத்தில் நல்லெண்ணெய்விட்டு, இந்த குழம்பை பிசைந்து அப்பளம் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
Previous Post
Next Post

0 Comments: