திங்கள், 25 செப்டம்பர், 2023

Then Mittai : 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்! தித்திக்கும் தேன் மிட்டாய் செய்ய கற்றுக்கொள்ளலாமா?

Then Mittai : 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்! தித்திக்கும் தேன் மிட்டாய் செய்ய கற்றுக்கொள்ளலாமா?

Then Mittai 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்! தித்திக்கும் தேன் மிட்டாய் செய்ய கற்றுக்கொள்ளலாமா?
தித்திக்கும் தேன் மிட்டாய் செய்வது எப்படி?

தேன் மிட்டாய் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்,
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப் (பச்சரிசி அல்லது இட்லி அரிசி)
உளுந்து – கால் கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
சர்க்கரை – ஒன்றரை கப்
எலுமிச்சை சாறு – கால் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – வறுக்க தேவையான அளவு
சர்க்கரை – சிறிதளவு (தேன்மிட்டாயின் மேல் தூவுவதற்கு)

செய்முறை
அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை 3 அல்லது 4 மணி நேரங்கள் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
ஊறியபின் தண்ணீரை வடித்துவிட்டு, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும் என்பதால், சிறிதளவு தண்ணீரை மட்டுமே ஊற்றவேண்டும். மாவு மிருதுவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாவை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில், ஃபுட் கலர் மற்றும் பேக்கிங் சோடா கலந்துவைக்க வேண்டும்.
அதை உருட்டுவதற்கு முன், சர்க்கரை பாகை தயாராக வைத்திருக்க வேண்டும். சர்க்கரையையும், தண்ணீரையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடம் குறைவான தீயில் வைத்தாலே போதும். அடுப்பை அணைத்து, எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை பாகு கெட்டியாகாமல் இருக்கும்.
எண்ணெயை பொறிப்பதற்காக சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
மாவை குட்டி, குட்டி உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். உருண்டைகள் மேல எழும்பி வந்தவுடன் 3 முதல் 4 நிமிடங்கள் வறுத்தெடுத்தாலே போதும்.
வறுத்த உருண்டைகளை உடனடியாக சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும். அதை சிறிது நேரம் ஊறவிடவேண்டும்.
இந்த உருண்டைகள் சர்க்கரை பாகை நன்றாக உறிஞ்சிய பின்னர் உருண்டைகளை வெளியே எடுத்து விடவேண்டும்.
சுவையான தேன் மிட்டாய்கள் சாப்பிட தயாராகிவிட்டது.
அதன் மீது சர்க்கரை அல்லது சர்க்கரை பொடியை தூவி அலங்காரம் செய்யம். இதை 4 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிலாம்.
தித்திக்கும் தேன் மிட்டாயை நினைத்தாலே மனம் இனிக்கும். இது 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு மிட்டாய். இதை நீங்கள் சாப்பிடும்போது, நீங்கள் அந்த கால குழந்தையாக இருந்தால், உங்களை அந்த கால நினைவுகளுக்கு அழைத்துச்செல்லும்.
அந்த காலத்தை நினைத்தாலே மனம் இனிக்கும். அதேபோல் இந்த தேன் மிட்டாயும் உங்கள் குழந்தை பருவத்தை மீட்டுத்தரும். 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு தேன்மிட்டாய் உணவல்ல உணர்வு
Previous Post
Next Post

0 Comments: