சுவையான பச்சைப் பயிரு கடையல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு காய்கள் - 10
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
புளி தண்ணீர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பச்சை பயிறு. வெங்காயம், தக்காளி,பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாம்பார் தூள்,உப்பு,புளி தண்ணீர், சிறிது தண்ணீர் என அனைத்து பொருட்களையும் பிரஷர் குக்கரில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 2-3 விசில் வரும் வரை பிரஷர் செய்யவும்.
முடிந்ததும் மத்து பயன்படுத்தி பயன்படுத்தி நன்றாக மசிக்கவும். இறுதியாக எண்ணெய் கடுகு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து தாளித்து மசித்து வைத்த பச்சைபயிர் கடையலில் ஊற்றவும். இப்போது சுவையான பச்சைப் பயிரு கடையல் ரெடி
0 Comments: