பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்
திருவிடைமருதூர்
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது இதற்கு உரிய பரிகாரங்கள் என்ன
''பிரம்மஹத்தி தோஷம் என்பது, கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது.
இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது. இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.
பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்.
லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
* ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.
பரிகாரங்கள்:
* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.
* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
முன்னோர்கள் சாபம் நீங்க – கோவில் பரிகாரம் -பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர். அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.
* பிரம்மஹத்தி தோஷம் :
• சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது.
• பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
• 1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும்.
• முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.
• அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.
• இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
• பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.
• அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.
* திரும்பி வரும் போது…
• எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.
• அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
• அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.
• வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது.
• வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.
• அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
• அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.
* சிறப்பு :
• உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.
• திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
* அஸ்வமேதப் பிரகாரம் :
முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* கொடுமுடிப் பிரகாரம் :
இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது. சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
* பிரணவப்பிரகாரம் :
மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.
7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்..
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ
ஓம் நம சிவாய…
0 Comments: