குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;
தில்லைக் கூத்தப்பிரானின் வளைந்த தூக்கிய திருவடி.
தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.
மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்;
வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.
சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார்.
சிதம்பரத்தில் சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ? என்பது அதில் ஒரு வரி.
நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால்,
அவளுக்கு பாதம் வலிக்குமென இவர் காலை தூக்கிக் கொண்டாராம். அதாவது சிவனே, நடராஜர் என்னும் பெயரில் நடனம்
ஆடுகிறார்.
அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டார்m
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன்.
தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும்.
அப்படித் தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
0 Comments: