ஞாயிறு, 1 அக்டோபர், 2023

Bun Parotta Tips : புஸ்புஸ் பன் பரோட்டா செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்கள்!

புஸ் புஸ் பன் பரோட்டா செய்வது எப்படி? இதோ டிப்ஸ்கள்

Bun Parotta Tips : புஸ்புஸ்ன்னு பன் பரோட்ட செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்கள்.
தேவையான பொருட்கள்
மைதா - 500 கிராம்
காய்ச்சாத பால் - 20 மிலி
சர்க்கரை - 3 டீஸ்பூன்
முட்டை - 1
டால்டா - 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை 
ஒரு அகல பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை, தண்ணீர், உப்பு, பால் அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
மற்றொரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதன் நடுவே கலந்து வைத்திருக்கும் பால், சர்க்கரை, உப்பு முட்டைக் கலவையை ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.
ஓட்டல்களில் பரோட்டா மாவு பிசைவதை பார்த்திருபோம். அது போலவே மாவை நிறுத்தாமல் நன்கு இழுத்துப் பிசைந்து 3 ஸ்பூன் மைதா மாவை மேலே தூவி மாவை நன்கு அடித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் டால்டா சேர்த்து, மாவை துணியால் மூடி 2 மணி நேரம் அப்படியே ஊற விடவேண்டும்.
பிறகு இந்த மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். பின் பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் உருண்டைகளைப் போட்டு அதன் மீது சிறிதளவு டால்டா ஊற்றி மீண்டும் 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும். இப்போது மைதா மாவு எண்ணெயில் நன்கு ஊறி சரியான பதத்திற்கு வந்திருக்கும்.
அடுத்து, கையில் எண்ணெய் தடவிக்கொண்டு உருண்டைகளை மெல்லியதாகத் தட்டி, அதை நன்கு வீசி விசிறியாக மடித்து பன் பரோட்டா வடிவத்தில் அடுக்காக சுற்றி வட்டமாக தட்டி எடுக்கவேண்டும்.
பின்னர் அடுப்பில் தோசைக் கல்லை சூடாக்கி அதில் தட்டி வைத்துள்ள பரோட்டாக்களில் இருந்து ஒவ்வொன்றாக கல்லில் இட்டு அதைச் சுற்றி தாராளமாக எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் பொன்னிறமாக வேகும்படி சுடவேண்டும்.
அட்டகாசமான மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா ரெடி. இதற்கு சால்னா, நாட்டுக்கோழி மசாலா, மட்டன் சாப்ஸ், சுக்கா, குடல், ஈரல் குழம்பு இப்படி எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம். வித்யாசமான அனுபவத்தை தரும்.
புஸ்புஸ் பன் பரோட்டா செய்ய டிப்ஸ்!
பன் பரோட்டா செய்யும்போது, அது நல்ல மிருதுவாக வரவேண்டும். அதற்கு மாவு ஊறும் நேரம் மிக முக்கியம். முதலில் மாவு பிசைந்ததும் 3 மணி நேரம் கூட ஊற வைக்கலாம்.
எண்ணெய் தடவி அரைமணி நேரம் ஊறினால் போதும். மாவு ஊறும்போது ஈரத்துணி அல்லது மூடி கொண்டு மாவின் மேல் மூடியிருப்பது அவசியம்.
டால்டா முக்கியமல்ல. ஆனால் அது புரோட்டாவிற்கு நல்ல நிறமும் க்ரிஸ்பியும் தரும். வாய்ப்புள்ளவர்கள் டால்டாவிற்கு பதில் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
புரோட்டா மாவை எவ்வளவு நேரம் பிசைகிறோம் என்பது மிக மிக முக்கியம். மாவை 360 டிகிரியிலும் அமுக்கி, இழுத்து, தேய்த்து பிசையவேண்டும்.
முதலில் பிசையும்போது 15 நிமிடங்களும் 2 மணி நேரம் ஊறிய பின் 5 நிமிடங்களும் பிசைந்தால் பன் பரோட்டா அற்புத மென்மையாக வரும்.
மாவை கைகளால் தட்டும்போது மாவின் ஓரங்களை நன்கு அழுத்திக் கொடுக்கவும் மாவின் மத்தியில் அதிகமாக அழுத்தக்கூடாது.
புரோட்டாவை நன்கு வீசி அதை விசிறி மடிப்பாக சுருட்டிய பின்னர் அந்த மாவு பூரிக்கட்டையில் தேய்க்கக்கூடாது. கைகளால் மெலிதாக அழுத்தி ஒரு பன் திக்னஸில் அப்படியே கல்லில் போட்டு சுட்டு எடுக்கவேண்டும்.
விசிறத் தெரியாதவர்கள் மொத்த மாவையும் விசிறினால் எவ்வளவு பெரிதாகுமோ அந்த அளவிற்கு பூரிக்கட்டையால் மாவை நன்கு இழுத்துத் தேய்த்து பிறகு அதை மடித்து விசிறி போல் சுருட்டிக்கொள்ள வேண்டும்.
மாவை விசிறி போல சுருட்டும் போது மாவுக்குள் சிறிது காற்று இருக்கும்படி (பலூன் போல) அழுத்தி மடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் மடிக்கும்போதே புஸ்ஸுனு பஃபியாக இருக்கணும். அப்போது தான் பர்ஃபெக்ட்டான பன் பரோட்டா கிடைக்கும்.
Previous Post
Next Post

0 Comments: