புதன், 22 நவம்பர், 2023

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : விருத்தாசலம்
முகவரி : விருத்தாசலம், கடலூர்.
தாலுகா : விருத்தாசலம்

வரலாறு : அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவ சமய சிவன் கோவிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். 

சிவபெருமான் முதன்முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு : 

இத்தலம் முன்னொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோவிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப் பேசப்பட்டு வருவதாகும். 

இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் 'மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்' என்று சொல்ல, சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தல வரலாற்றுச் செய்தி. 

தல சிறப்பு : 

இந்த கோயிலின் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. 

63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது. 

இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இந்த மரம் பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் உயிருடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில் வெளிப்பிரகாரத்தில் 22 ஆகம லிங்கத்திற்கு தனிசன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 

கோவிலில் குரு சன்னதிக்கு அருகில் விநாயகர் சிலைக்கு முன்பு பாத வடிவில் பலிபீடம் இருக்கின்றது. இது பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி என்றும் கூறப்படுகிறது. 

பிரார்த்தனை : 

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. 

இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இருப்பிடம் :

உளுந்தூர்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தூரத்திலும், கடலூரிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் திருத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிவபுரி
முகவரி : சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 4 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : சிவபுரி

வரலாறு : அருள்மிகு உச்சிநாதர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். இக்கோவிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோவில் எனவும் வழங்குகின்றனர்.

தல வரலாறு : 

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் - பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார். தனது தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். திருஞானசம்பந்தரை குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, அவர் தந்தை மட்டும் நீராடச் சென்றார். 

சம்பந்தருக்கு பசி ஏற்பட, 'அம்மா! அப்பா!' என அழுவதை கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்துவிட்டார். 

சம்பந்தரின் தந்தை குளித்துவிட்டு வந்து பார்க்கும் போது, 'பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,' எனச்சொல்லி குச்சியால் அடிக்க கையை ஓங்கினார். 

சிவ பார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், 'தோடுடைய செவியன்' என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. 

சம்பந்தரின் திருமணத்திற்காக மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு சென்றனர். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர். 

அப்போது சம்பந்தரும், அவருடன் வந்த அனைவரும் பசியுடன் இருப்பதை உணர்ந்த இந்த தலத்தில் இருக்கும் இறைவன், கோவில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் 'உச்சிநாதர்' என்றும் 'மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். 

தல பெருமை : 

2000 வருடங்களுக்கு முன் பழமையானது. 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமண கோலத்துடன் அருள்பாலிக்கிறார். 

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். 

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி 'திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது. 

சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருவதிகை
முகவரி : திருவதிகை,பண்ருட்டி. பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : பண்ருட்டி

வரலாறு : திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு :

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார். அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

கோவில் அமைப்பு :

கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோவிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இறைவன் தேரில் வந்ததால் இந்த திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். திவதிகை கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இது தான்.

பிரார்த்தனை :

இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம் அழியும். இங்குள்ள ஈசனை வழிப்பட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சார்ந்த எந்தவிதமான நோயாக இருந்தாலும் தீரும். அம்பாள் சன்னிதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால் உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். குழந்தை இல்லாதவர்கள் இந்த ஈசனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் மற்றும் நல்ல வேலை மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் பெருகவும் மக்கள் இந்த சிவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

அருள்மிகு தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

அருள்மிகு தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : தீர்த்தனகிரி
முகவரி : தீர்த்தனகிரி.கடலூர். கடலூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : குறிஞ்சிப்பாடி

வரலாறு : சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்தத்திற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கோவில் கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரில் உள்ளது.

தல வரலாறு :

முன்பு ஒரு காலத்தில் இப்பகுதியில் வசித்து வந்த ஒரு விவசாய தம்பதியினர் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம், நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன், என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி? என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

தல பெருமை :

இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது. சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது. தலவிநாயகர் வலம்புரிவிநாயகர். கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோவில்

அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருவேட்களம்
முகவரி : திருவேட்களம், சிதம்பரம், கடலூர்.
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : அருள்மிகு பாசுபதேசுவரர் கோயில், திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 2வது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

தல வரலாறு : 

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன், நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்றார். 

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். 

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. 

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப் பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம், உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது, என சமாதானப்படுத்தி 'சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். 

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

தல பெருமை : 

அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். 

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். 

இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். 

ஒருமுறை சம்பந்தர், சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார். 

தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலை வைத்துள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

பிரார்த்தனை : 

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. 

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருச்சோபுரம்
முகவரி : திருச்சோபுரம், கடலூர்.
தாலுகா : குறிஞ்சிப்பாடி

வரலாறு : சம்பந்தர் பாடல் பெற்ற மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் திருச்சோபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.

தல வரலாறு : 

கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. 

சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

தல பெருமை : 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. 

அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்குமம் வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். 

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். 

தட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் வலது கையில் அக்னி, இடது கையில் நாகம் என மாற்றி வைத்துள்ளார். 

இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பம்சம்.

பிரார்த்தனை : 

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

போக்குவரத்து :

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தூரத்தில் ஆலப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் மங்களபுரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில், பரங்கிப்பேட்டை
மாவட்டம் : கடலூர்
இடம் : பரங்கிபேட்டை
முகவரி : பரங்கிப்பேட்டை.சிதம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : புவனகிரி

வரலாறு : இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே. இவருக்கு இங்கு கோவில் உள்ளது. பாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி கோவில் அர்ச்சகராகப் பணியாற்றினார். பரங்கிப்பேட்டை, தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தல வரலாறு : 

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோவிலாகும். காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு 'ஆதிமூலேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

தல பெருமை : 

சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது. 

வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை சிலையின் கீழ் ஶ்ரீசக்கரம் உள்ளது. 

சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும். 

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது. 

திருநள்ளாறு போல, கோவில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி வழிபடலாம்.

பிரார்த்தனை : 

ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும், நோய் தீரவும், சஷ்டி அப்தபூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர், அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். 

இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சித்ராபௌர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.

போக்குவரத்து :

சிதம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் திருத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோவில்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : ஸ்ரீமுஷ்ணம்
முகவரி : ஸ்ரீமுஷ்ணம், கடலூர்.
தாலுகா : ஶ்ரீமுஷ்ணம்

வரலாறு : பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம். அந்த சிறப்பு வாய்ந்த அவதாரத்துடன் கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் பூவராக திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார் பெருமாள்.

தல வரலாறு : 

முன்னொரு காலத்தில் நாராயணன் மிகப் புனிதமான வராக அவதாரம் எடுத்து, பூமியைக் கவர்ந்து சென்ற ஹிரன்யாஹூசன் என்னும் அசுரனை கொன்று, அப்பூமியை தனது கோரைப் பற்களினால் சுமந்து வந்து, ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அச்வத்த விருஷத்தையும், துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீமுஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்று பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீபூவாராகவன் என்ற திருநாமத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பவராக இத்திருக்கோவிலில் எழுந்தளியுள்ளார். 

பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஒரு ஊரை ஆண்டு வந்தார். அவருக்கு தீராத வியாதி ஏற்பட்டது. வைத்தியர்கள் அவரை கைவிட்ட நிலையில், இக்கோவில் வழியாக ஆதி நவாப் செல்லும் போது, ஒரு பக்தன் தான் வைத்திருந்த பெருமாளின் தீர்த்ததையும், பிரசாதத்தையும் கொடுத்தான். அதை சாப்பிட்ட ஆதி நவாப் பூரண குணமடைந்தார். அது முதல் அவர் பெருமாளின் பக்தனாக மாறினார். அதுமட்டுமில்லாமல் கோவிலுக்காக நிறைய நிலங்களை எழுதி வைத்தார். 

தல பெருமை : 

இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும். 

பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் இங்கு வழிபட்டு நற்பலன் அடைந்தனர். பன்றி வடிவில் சுவாமி இருப்பதால் அவருக்கு விருப்பமான கோரைக்கிழங்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. 

பிரார்த்தனை : 

பூவராக பெருமாளை வணங்கினால் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, மக்கட்பேறு, நிலைத்த செல்வம், நீண்ட ஆயுளைப் பெற்று இந்த வையகத்தில் வாழலாம். 

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால் அந்த தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். 

தங்களின் பிரார்த்தனை நிறைவேறிய பின் பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுகின்றனர்.

போக்குவரத்து : 

விருத்தாச்சலத்தில் இருந்து 24 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : காட்டுமன்னார்கோயில்
முகவரி : காட்டுமன்னார்கோயில், கடலூர்.
தாலுகா : காட்டுமன்னார்கோயில்

வரலாறு : காத்தாயி அம்மன் என்பவர் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக அமைக்கப்படுகிறார். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

தல வரலாறு : 

சோழர்கள் தங்கள் குலதெய்வமாக அம்பிகையை பல்வேறு பெயர்களில் வழிபாடு செய்து வந்தனர். இவர்களில், முதலாம் விக்கிரமசோழன் காத்தாயி அம்மனை வழிபட்டு வந்தான். ஒருமுறை இவன், மதுரையை ஆண்ட வமிசசேகர பாண்டியன் மீது படையெடுத்தான். 

பாண்டியனுக்கோ போர் செய்வதிலும், உயிர்கள் அழிவதிலும் உடன்பாடில்லை. சிவ பக்தனான அவன், சோழனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி சொக்கநாதரிடம் வேண்டினான். மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், குறவன் வேடத்தில் சென்று சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன், குறவனாக வந்திருப்பது சிவன் என அறிந்து, அவரது பாதத்தில் சரணடைந்தான். 

சிவன் அவனுக்கு காட்சி தந்து, 'மண்ணாசை கொண்டு செய்யப்படும் போரினால், உயிர் இழப்பு தான் ஏற்படும். அதை விடுத்து வேறொரு நன்மையும் உண்டாகாது' என உபதேசம் செய்து, 'மறுபிறப்பிலும் மன்னனாகப் பிறந்து நல்லாட்சி புரிவாய்' என ஆசிர்வதித்து மறைந்தார். இம்மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரமசோழனாக பிறந்தான். முற்பிறப்பில் தான் வழிபட்ட காத்தாயி அம்பாளை தொடர்ந்து வழிபட்டான். 

மன்னனின் பங்காளிகள், இவனது ஆட்சிக்கு தொந்தரவு செய்தனர். அவர்களை ஏதும் செய்ய விரும்பாத மன்னன், அம்பிகையிடம், 'தாயே! நான் முற்பிறப்பில் பாண்டியனுடன் போர் செய்ய சென்றபோது, சிவனே குறவனாக வந்து போரை தடுத்து என்னை ஆட்கொண்டார். இப்போது பங்காளிகளே எனக்கு தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்' என வேண்டினான். 

மன்னனின் வேண்டுதலை ஏற்ற அம்பாள், குறத்தி வேடத்தில் வந்து, பங்காளிகளிடம் பேசி, பிரச்சனையை தீர்த்து வைத்தாள். மகிழ்ந்த மன்னன், குறத்தி வடிவில் ஒரு அம்பிகையை வடித்து, காத்தாயி அம்பாள் அருகில் பிரதிஷ்டை செய்தான்.

தல பெருமை : 

மூலஸ்தானத்தில் காத்தாயி அம்பாள், இடுப்பில் முருகனைத் தூக்கி வைத்தபடி இருக்கிறாள். இவளை, 'குழந்தையம்மன்' என்றும் அழைக்கிறார்கள். இவளுக்கு வலப்புறம் பச்சை வாழியம்மனையும், அடுத்து குறத்தி வடிவில் பூங்குறத்தியம்மனையும் ஆகிய மூன்று அம்பிகையை தரிசிக்கலாம். 

கைலாய சிவன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்கு சிவன் உருவ வடிவில் காட்சி தருகிறார். இவர், தட்சிணாமூர்த்திக்குரிய தென்திசை நோக்கி இருப்பதால், கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகிறார்கள். 

பிரகாரத்தில் முத்துமுனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி ஆகிய காவல் தெய்வங்களாக அருள்பாளிக்கின்றனர்.

பிரார்த்தனை : 

சகோதர உறவு மேம்பட, மூன்று அம்பிகையருக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 

சுகப்பிரசவம் ஆவதற்கும், பிரசவத்திற்கு பின் தாயும் சேயும் நலமாக இருப்பதற்கும் காத்தாயி அம்பாளை வழிபடுகிறார்கள்.

இருப்பிடம் :

சிதம்பரத்திலிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று, அங்கிருந்து 2 கி.மீ. ஆட்டோவில் சென்றால் வடவாற்றங்கரையில் உள்ள கோவிலை அடையலாம்.

அருள்மிகு புற்றுமாரியம்மன் திருக்கோவில்

அருள்மிகு புற்றுமாரியம்மன் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிதம்பரம்
முகவரி : கீழத்தெரு மாரியம்மன் கோவில், சிதம்பரம். சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ. துரத்தில் உள்ள கிள்ளை அருகே கோவில் அமைந்துள்ளது.
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : அம்மை நோய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோவில், கடலூர் மாவட்டத்தில் 15 அடி உயரத்தில் அம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு : 

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்னும் ஊரைச் சேர்ந்த முனுசாமி பிள்ளை குடும்பத்தினர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டனர். அதனால் 10 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளம் மகாமாரியம்மன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு வந்தனர். 

அன்று இரவு அவருடைய மனைவி அமிர்தவள்ளி அம்மை நோயுடன் படுத்திருந்த போது அவர் கனவில் அம்மன் தோன்றி தில்லைவிடங்கன் சங்கிலி கொண்டவன் மதகு என்ற இடத்தில் சிறிய புற்று வடிவில் குடி கொண்டுள்ளேன். 

அங்கு வேம்பும், மஞ்சலும் உள்ளது அவற்றை எடுத்து உடம்பில் பூசி விட்டு வேம்பை அருகில் வைத்துக்கொள் என்று கூறி அம்மன் மறைந்துள்ளார். காலை விடிந்ததும் அவர்கள் அந்த கோவிலுக்கு சென்று பார்த்த போது அம்மன் கூறியது போல வேம்பு, மஞ்சள் இருந்தது. 

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மஞ்சளை உடம்பில் பூசிக்கொண்டு, வேம்பை எடுத்துக் கொண்டனர். அந்த இடத்தில் அம்மனுக்கு சிறியதாக கொட்டகை அமைத்து வழிபாடு நடத்தினர். 

அதுவே, காலப்போக்கில் புற்றுவளர்ந்து தற்போது 15 அடி உயரத்தில் அம்மன் உருவில் அருள்பாலிக்கிறார். பல்வேறு பகுதியில் இருந்து இன்று குலதெய்வ வழிபாட்டிற்கும், அம்மை நோய் குணமடைய இங்குள்ள கோவிலில் இருந்து மஞ்சள், வேம்பும் வழங்கப்படுகிறது.

தல பெருமை : 

சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன், ஶ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆகிய கடவுள்கள் இக்கோவிலில் அமைந்திருப்பது இத்திருத்தலத்தின் பெருமையாகும். 

மேலும், உள் பிரகாரத்தில் எட்டு கரங்களுடன் ரத்த காளி, நான்கு கரங்களுடன் பேச்சியம்மன், இரு கரங்களுடன் பெரியாச்சியும், மூன்றடியில் கிராம தேவதையாக பெரியாச்சியும் வடக்குப்பக்கம் பார்த்து அருள்புரிகின்றனர். 

விமானத்தில் ஒரு கலசம் மற்றும் நான்கு பக்கம் பூதகனங்கள். வெளி பிரகாரத்தில் வடக்குப் பக்கம் பார்த்து துர்க்கை அருள்பாலிக்கிறார். அதிசயத்தின் அடிப்படையில் அமைந்த இந்த கோவிலில் 15 அடி உயரத்தில் அம்மன் புற்று வடிவில் காட்சியளிக்கிறார்.

பிரார்த்தனை : 

கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், கண் நோய் மற்றும் அம்மை உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் நெய் தீபம், தானியங்கள் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபடுவார்கள்.

இருப்பிடம் :

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ. துரத்தில் உள்ள கிள்ளை அருகே கோவில் அமைந்துள்ளது.

வீராணம் ஏரி

வீராணம் ஏரி
மாவட்டம் : கடலூர்
இடம் : காட்டுமன்னார்கோயில்
முகவரி : வீராணம், காட்டுமன்னார்கோயில் , கடலூர்
தாலுகா : காட்டுமன்னார்கோயில்

வரலாறு : ராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது கி. பி. 1011 முதல் 1037 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும்[1]. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.

காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது.

வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் இலிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் நிறைவடைந்தது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.

சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை

சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை
மாவட்டம் : கடலூர்
இடம் : வடலூர்
முகவரி : பண்ருட்டி, வடலூர், கடலூர்
தாலுகா : பண்ருட்டி

வரலாறு : பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது திருவருட்பா என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சத்திய ஞான சபை ஒன்றினை 1872 சனவரி 25 இல் நிறுவினார். இந்த சத்ய ஞான சபை எல்லா சமயத்தவரும் வந்து வணங்ககூடிய ஒரு பொதுவான ஆலயம் ஆகும். ஆயினும் கொலை, புலை (மாமிசம்) தவிர்த்தவர் மட்டுமே சபைக்கு உள்ளே புக அனுமதி உண்டு. இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்துள்ளது. மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார். சத்ய ஞான சபை என்பது மனித உடம்பில் தலைப் பகுதியைக் குறிக்கும்.

பூவராகவஸ்வாமி கோவில்

பூவராகவஸ்வாமி கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : ஸ்ரீமுஷ்ணம்
முகவரி : ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், கடலூர்
தாலுகா : காட்டுமன்னார்கோயில்

வரலாறு : தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கடலூருக்கு அருகில் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில் வராஹா (சுவாமி), விஷ்ணுவின் பன்றி-சின்னம் மற்றும் அவரது மகள் லட்சுமி அம்புவஜவல்லி தாயாராக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்பா நாயக்கா்.10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்கள் காலத்தில்இந்த கோவிலுக்கு பங்களித்தனர். ஒரு கிரானைட் சுவர் ஆலயத்தைச் சுற்றிலும், உள்ளஎல்லா கோயில்களையும் கோவிலின் குளங்களையும் இணைக்கிறது. கோவிலின் நுழைவாயிலில் ஏழு-அடுக்குராஜகோபுரமும் உள்ளது. கோவிலில்தினசரி ஆறுசடங்குகள் மற்றும் மூன்று வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தமிழ் மாதமான வைகசி மாதத்தில் (ஏப்ரல்-மே) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானதுஇப்பகுதியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது – இரதத்தின் கொடியை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்; அவர்கள் கோவிலில் இருந்து காணிக்கைகளை எடுத்து, வந்து மசூதிகளில் அல்லாஹ்விடம் வழங்குகிறார்கள். இந்த கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் எண்டௌமென்ட் சபைகளால் நிர்வகிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை - மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிதம்பரம்
முகவரி : அண்ணாமலை நகர், சிதம்பரம்,கடலூர்
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு.சிதம்பரம். அண்ணாமலை நகரில் 950 ஏக்கர் ( 3.8கிமீ) பரப்பளவில் மாநில அரசு பல்கலைக்கழகம் பரவலாக அமைந்துள்ளது அறிவியல், பொறியியல், மேலாண்மை(எம்பிஏ), மனிதநேயம்,விவசாயம் மற்றும் கலைகளில் உயர்கல்வி படிப்புகளைவழங்குகிறது.1929ஆம் ஆண்டில் மாண்டேக்-சேம்ஸ்போர்ட் சீர்திருத்தத்திற்கு பிறகு தொழிலதிபர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் இப் பல்கலைக்கழகம்நிறுவப்பட்டது. இப்பல்கலைகழகம் இந்தியாவின் முதல்தனியார்பல்கலைக் கழகம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடுஅரசாங்கத்தால்ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் 500 க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்குகிறது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குநரகம் (டி.டி.ஈ.) வளாகத்தில் கலந்துகொள்ள முடியாதஆனால்,படிக்க விரும்பும்மக்களுக்கு தொலைதூரகல்வி வழங்குகிறது. இப்பல்கலைகழகம் இந்தியாவில் மிகப்பெரியசேர்க்கைபெறுமதிப்பிலானமற்றும்கணினிகள். பிற உள்கட்டமைப்பு வசதிகள் தனித்துவகற்பித்தல் பயிற்சி. ஆசிரியா்கள் மற்றும்நிர்வாகத்தினர். ஆய்வுமையங்கள்மற்றும் கணினிபயிற்சி. நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக நன்கு பொருத்தப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உயிர்தகவலியல். சட்டம், வணிக. நிர்வாகம் மற்றும்முகாமைத்துவம் (MBA) ஆகியவற்றில் தொலைதூர கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் வழங்குகிற இந்தியாவில் முதல்கல்வி நிறுவனமாகும். தொலைதூர கல்வி இயக்குநரகம்.பேஷன் வடிவமைப்பு, ஜவுளி வடிவமைப்பு,உள்துறை வடிவமைப்பு,ஹோட்டல்மேனேஜ்மென்ட்.மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி,சில்லறை மேலாண்மை, டிவிஷன், ஹெல்த்சயின்ஸ், காமன்வெல்த் இளைஞர்திட்டம், யோகா, இசை, தீமற்றும்பாதுகாப்பு, மருந்தகம் மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் திட்டங்களைவழங்குகிறது.

செவ்வாய், 21 நவம்பர், 2023

வள்ளலார் கோயில்

வள்ளலார் கோயில்
மாவட்டம் : கடலூர்
இடம் : வடலூர்
முகவரி : வடலூர், கடலூர்
தாலுகா : பண்ருட்டி

வரலாறு : வடலூர் என்றதும் வள்ளலார் ஞாபகத்திற்கு வருவார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய ராமலிங்க சுவாமிகள் சத்யஞான சபையை நிறுவிய இடம் இது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்லும் இடமாகவும் இருக்கிறது. நெய்வேலியிலிருந்து மிக அருகில் கங்கை கொண்டான் பேரூராட்சிக்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்நகரம் கடலூரிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது.

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருவண்டிபுரம்
முகவரி : திருவகிந்தபுரம், திருவண்டிபுரம், கடலூர்
தாலுகா : கடலூர்

வரலாறு : வைணவ தேசங்கள் 108இல் நடுநாட்டுத் திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கடலூர் நகரையொட்டிய ஓர் அமைதியான கிராமம். இலங்கை போர்க்களத்திற்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைக் கையில் ஏந்திச் சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு துளியே தேவநாதப் பெருமாளாக எழுந்தருளியதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் போற்றி வணங்கும் புனிதத்தலம்.

அருள்மிகு தில்லை காளி திருக்கோயில்

அருள்மிகு தில்லை காளி திருக்கோயில்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிதம்பரம்
முகவரி : சிதம்பரம், கடலூர்
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை" என்ற பெயரில் சரஸ்வதியும், தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிதம்பரம்
முகவரி : சிதம்பரம், கடலூர்
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.

பிச்சாவரம்

பிச்சாவரம்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிதம்பரம்
முகவரி : சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி.
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : நீரில் மிதந்தபடி சுரபுன்னைக் காடுகளைப் பார்ப்பது அழகு. நிலத்திற்குள் கடல் வந்து முத்தமிடும் கழிமுகம் இது. இங்கு 11000 ஏக்கர் பரப்பளவில் சுரபுன்னைக் காடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இங்கு பல வகையான மீன்களை உண்டு மகிழலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், அழகிய குடில்கள், உணவு விடுதி, படகுப் பயணம் என்று பிச்சாவரத்தை மிச்சமின்றி ரசித்து மகிழ பல வசதிகள் உள்ளன.

கடலூர் அரசு அருங்காட்சியகம்

கடலூர் அரசு அருங்காட்சியகம்
மாவட்டம் : கடலூர்
இடம் : ஆலப்புட்டி
முகவரி : ராஜம்பால் நகர், மஞ்சுப்புப்பம், ஆலப்புட்டி, கடலூர்.
தாலுகா : கடலூர்

வரலாறு : No Data

புனித டேவிட் கோட்டை

புனித டேவிட் கோட்டை
மாவட்டம் : கடலூர்
இடம் : தேவனாம்பட்டினம்
முகவரி : சுற்றுலா பங்களா சாலை, தேவனாம்பட்டினம், கடலூர்.
தாலுகா : கடலூர்

வரலாறு : புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும். பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் சென்னை நகரில் கட்டத் தொடங்கப்பட்டது. 

6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக்கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது. 

ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றம் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம்.

சில்வர் கடல்

சில்வர் கடல்
மாவட்டம் : கடலூர்
இடம் : தேவனாம்பட்டினம்
முகவரி : தேவனாம்பட்டினம், கடலூர்
தாலுகா : கடலூர்

வரலாறு : சில்வர் கடற்கரை கடலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடம் கோர மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரையாகும். சுமார் 57 கி.மீ. நீளத்தைக் கொண்டுள்ள இவ்விடம் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்று. அமைதியான இக்கடற்கரையில் தண்ணீர் விளையாட்டு, படகு சவாரி ஆகியவை பிரபலமானவை. 

பேக் வாட்டரினால் இவ்விடம் தனி தீவுபோலத் தோன்றி அழகாக இருக்கிறது. இங்கு மேற்குப் பகுதியில் ஆறு ஒன்று, பறவைகள் அதிகம் கொண்ட அடர்ந்த மாங்குரோவ் காட்டுப்பகுதியில் பாய்கிறது. 

இங்கு நூற்றாண்டுகள் கடந்த கலங்கரை விளக்கம், புனித டேவிட் கோட்டை, பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை உள்ளன. இங்கு கடல் நீரானது வெள்ளியைப் போல் பளபளப்பாக நம் கால்களைத் தழுவி செல்கிறது. அதனால் இவ்விடம் சில்வர் கடற்கரை என்றழைக்கப்படுகிறது.

திங்கள், 20 நவம்பர், 2023

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
மாவட்டம் : ஈரோடு
இடம் : சத்தியமங்கலம்
முகவரி : சத்தியமங்கலம், ஈரோடு.
தாலுகா : சத்தியமங்கலம்

வரலாறு : தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகமாக விளங்கும் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள தமிழ்நாட்டில் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகமாகும். 

அடர்ந்த வனத்தில் 545 சதுரமைல் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டு இயற்கை எழிலுடன் குளிர்ந்த சூழலை தன்னகத்தே கொண்டுள்ளது. 

இந்த காடுகளில் சந்தன மரம் அதிகமாக இருக்கிறது. இது சந்தன கடத்தல் வீரப்பன் இருக்கும் வரை 'வீரப்பன் காடு' என்று பெயர் பெற்றிருந்த சத்தியமங்கலம், அவர் கொல்லப்பட்ட பிறகு சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக திகழ்கிறது. 

இந்த வனப்பகுதி வெப்ப மண்டல பசுமையான, அரை பசுமையான,கலப்பு இலையுதிர்,முள் காடுகள் மற்றும் உலர்ந்த இலையுதிர் காடுகள் என்று 5 வகையான கொண்டுள்ளது. 

'வண்ணப் பூரணி' என்ற சுற்றுலாத் திட்டத்தினால் காட்டுக்குள்ளேயே சென்று விலங்குகளை பார்க்கையில் வனப்பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது. 

காட்டுக்குள் உலாவும் அணில், யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, செந்நாய், கரடி மற்றும் புலி போன்ற வனவிலங்குகளை நேரில் கண்டு ரசிக்கலாம். 

திகில் நிறைந்த இந்த பயணத்தில் ஆங்காங்கே கீச்சலிடும் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் காட்சி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. 

மேலும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் காட்சி முனைகள், கண்காணிப்பு கோபுரங்கள், குட்டைகள் ஆகியவை மனதை பரவசப்படுத்துகிறது.

சிறப்பம்சங்கள் : 

அங்குமிங்கும் உலாவும் வனவிலங்குகள்... 

கீச்சலிடும் பறவைகள்... 

வண்ணத்துப்பூச்சிகள்... 

காட்சி முனைகள்... 

வீரப்பன் வாழ்ந்த வனப்பகுதி... 

இயற்கை குடில்கள்...

எப்படி அடையலாம்?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து 34 கி.மீ. தொலைவில் இந்த வனவிலங்கு உய்விடம் மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

வரட்டுப்பள்ளம் அணை

வரட்டுப்பள்ளம் அணை
மாவட்டம் : ஈரோடு
இடம் : அந்தியூர்
முகவரி : அந்தியூர்,ஈரோடு
தாலுகா : அந்தியூர்

வரலாறு : வரட்டுப்பள்ளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம் மற்றும் மீன் வளர்ப்பிற்கும், வன விலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது[1]. வரட்டுப்பள்ளம் அணைக்கு கல்மடுவு, கும்பரவாணி பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.

வரட்டுப்பள்ளம் அணை 1980ம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. வரட்டுப்பள்ளம் அணையானது மேற்கு தொடர்ச்சி மலையான பர்கூர் மலையிலிருந்து பாய்ந்து வரும் மழைநீரைத் தேக்கி வைத்து அந்தியுரைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் 1.7 கி.மீ , அதிகபட்சமாக 17மீ உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்க முடியும்.இந்த அணையால் பயன்பெறும் பாசனப்பரப்பு 2924 ஏக்கர்.

இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலைப் பாதையில் தாமரைகரை , பர்கூர் , தட்டகரை , கர்கேகண்டி வழியாக எளிதாக மைசூரை .அடையலாம். ஆனால் சாலை சற்றே குறுகலானது.

தந்தை பெரியார் நினைவிடம்

தந்தை பெரியார் நினைவிடம்
மாவட்டம் : ஈரோடு
இடம் : மரப்பாலம்
முகவரி : மரப்பாலம், ஈரோடு
தாலுகா : ஈரோடு

வரலாறு : சமூகப் புரட்சிக்காரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் சிறு குழந்தையாய், துறுதுறு இளைஞனாய், கடமையுணர்வுமிக்க காங்கிரஸ் தொண்டராய் வாழ்ந்த இடம். இந்தப் பெரியாரின் இல்லம் இப்போது நினைவிடமாக உள்ளது. இங்கு பெரியாரது சிலை, வாழ்க்கை வரலாறு நிழற்படங்கள், முதலியன பார்வைக்கு உள்ளன.

அருள்மிகு ஸ்ரீ கொண்டத்து காளியம்மன் கோயில்

அருள்மிகு ஸ்ரீ கொண்டத்து காளியம்மன் கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பாரியூர்
முகவரி : பாரியூர், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு
தாலுகா : கோபிச்செட்டிப்பாளையம்

வரலாறு : பாரியூரில் இன்று பெரும் புகழ்பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில் எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப் புகழ்பெற்ற கோயிலாக இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி முக்கியஸ்தர்களால் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சூரராச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார். மந்திர சக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சை பசேல் என வயல் வெளிகள் சூழ, மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது.

அந்தியூர் குருநாத சுவாமி கோயில்

அந்தியூர் குருநாத சுவாமி கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : அந்தியூர்
முகவரி : புதுப்பாளையம், அந்தியூர், ஈரோடு
தாலுகா : அந்தியூர்

வரலாறு : பன்முகக் கடவுள்கள் குடிகொண்டுள்ள திருக்கோயில். காமாட்சி அம்மன் பெருமாள் குருநாதசுவாமி என்ற பெயரில் முருகனும் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர். அந்தியூருக்கு அடுத்துள்ள புதுப்பாளையத்தில் உள்ள முழுமையான கற்கோயில். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பாரியூர்
முகவரி : பாரியூர், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு
தாலுகா : கோபிச்செட்டிப்பாளையம்

வரலாறு : சுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இக்கோயில் தினமும் சூரிய உதயத்திற்கு பின்புதான் திறக்கப்படுகிறது. சிவன், எப்போதும் தன்னை வணங்குவதை விட, தனது அடியார்களை வணங்குவதையே விரும்புகிறார். இதன் அடிப்படையில் இங்கு வருபவர்கள் முதலில் சூரியனை வழிபட்டுவிட்டு, அதன்பின்பே சுவாமியை வழிபடும் வழக்கம் உள்ளது. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. சூரியனை வணங்கி சிவனை வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பவானி
முகவரி : பவானி, ஈரோடு
தாலுகா : பவானி

வரலாறு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 207 வது தேவாரத்தலம் ஆகும்.

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பவளமலை
முகவரி : பவளமலை, ஈரோடு
தாலுகா : ஈரோடு

வரலாறு : வாயுவும், ஆதிசேஷனும் தமக்குள் யார் சக்திமிக்கவர் என்று போட்டி போட்டனர். வாயு புயலாக மாறி வீசத்துவங்கினார். சக்தி வாய்ந்த மேருமலையையே தகர்க்கும் நோக்கத்துடன், தன்னுடைய முழுபலத்துடன் மலை மீது மோதினார். காற்றின் வேகம் தாளாமல், மலையின் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அந்த சிகரமே பவளமலை. ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபித்த முருகப்பெருமான் பழநியில் தங்கினார். அதன்பிறகு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக உலகத்தார் வழிபடத் துவங்கினார். அவ்வகையில், பவளமலையில் முருகன் கோயில் எழுப்பப்பட்டது. இவருக்கு, முத்துகுமார சுவாமி என்பது திருநாமம்.

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பண்ணாரி
முகவரி : NH 209, சத்தியமங்கலம், பண்ணாரி, ஈரோடு
தாலுகா : சத்தியமங்கலம்

வரலாறு : இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று. பக்தர்கள் காடுகளுக்கு போய் மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்கிறார்கள்) கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் பரப்பு கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள்.

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில்

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : திண்டல்
முகவரி : திண்டல், ஈரோடு
தாலுகா : ஈரோடு

வரலாறு : கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : ஓட்டப்பாறை
முகவரி : ஓட்டப்பாறை, சென்னிமலை, ஈரோடு
தாலுகா : சென்னிமலை

வரலாறு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக உள்ளது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : கொடுமுடி
முகவரி : திருப்பாண்டிக்கொடுமுடி, கொடுமுடி, ஈரோடு
தாலுகா : கொடுமுடி

வரலாறு : இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவாரத்தலம் ஆகும்.

பசுமை இலை கேளிக்கைப் பூங்கா(Green Leaf Theme Park)

பசுமை இலை கேளிக்கைப் பூங்கா(Green Leaf Theme Park)
மாவட்டம் : ஈரோடு
இடம் : ஈரோடு
முகவரி : மேட்டுக்கடை-பெருந்துரை ஆர்.எஸ். ரோடு, ஈரோடு
தாலுகா : ஈரோடு

வரலாறு : No Data

ஈரோடு அரசு அருங்காட்சியகம்

ஈரோடு அரசு அருங்காட்சியகம்
மாவட்டம் : ஈரோடு
இடம் : திருநகர் காலனி
முகவரி : VOC பார்க் அப்ரோச் சாலை, திருநகர் காலனி, ஈரோடு
தாலுகா : ஈரோடு

வரலாறு : ஈரோடு அரசு அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு நகரில் அமைந்துள்ள ஓர் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது ஈரோடு வ. உ. சி பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ளது. 

ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தின் வடக்கில் 200 மீட்டர் தொலைவிலும், ஈரோடு தொடர்வண்டி சந்திப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஈரோடு அரசு அருங்காட்சியகம் கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல், கைத்தறியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் புவி அமைப்பியல் ஆகிய ஒன்பது வகைகளில் அடங்கும் அரிய பொருட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. 

கொங்கு மண்டல சோழப் பேரரசைச் சார்ந்த கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் இதுவும் ஒன்றாகும். பர்கூர், தஞ்சாவூர் ஓவியங்கள், பனையோலை கையெழுத்துப் பிரதி, நாணயங்கள் மற்றும் மெய்க்கீர்த்திக் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொடுமணல், தொல்பொருளியல் மற்றும் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து பெறப்பட்ட முந்தைய வரலாற்று உருவங்களும் பழங்காலப் பழக்கவழக்கங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வரலாற்று கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் தவிர, பல தாவரவியல் மற்றும் விலங்கியல் மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
மாவட்டம் : ஈரோடு
இடம் : வெள்ளோடு
முகவரி : வெள்ளோடு, சென்னிமலை, ஈரோடு.
தாலுகா : சென்னிமலை

வரலாறு : வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், வெள்ளோடு எனும் ஊரில் 77. 85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும். 

இது ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய ஏரிக்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகள் வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. 

குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அன்னை இந்திரா காந்தி / பாம்பன் பாலம்

அன்னை இந்திரா காந்தி / பாம்பன் பாலம்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : தேவிபட்டினம், இராமநாதபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், இராமேசுவரம் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள திறந்து மூடும் வகையிலாக நீண்டிருக்கும் புகழ் பெற்ற பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும். 

இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாலமாகும். கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுதான் முதல் பாலமாகும். 2. 3 கிமீ நீளமுள்ள இந்த பாலம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்பாலமாக உள்ளது.

கொடிவேரி அணைக்கட்டு

கொடிவேரி அணைக்கட்டு
மாவட்டம் : ஈரோடு
இடம் : கோபிச்செட்டிப்பாளையம்
முகவரி : கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தாலுகா : கோபிச்செட்டிப்பாளையம்

வரலாறு : கொடிவேரி அணைக்கட்டு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது. இது பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும். 

1125ஆம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. கொடிவேரியில் பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலிருந்து 10 கி. மீ வடக்கே உள்ள கல்கடம்பூரில் இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. 

கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் சமூகத்தினர் வரவழைக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை
மாவட்டம் : ஈரோடு
இடம் : பவானிசாகர்
முகவரி : பவானிசாகர், ஈரோடு.
தாலுகா : பவானிசாகர்

வரலாறு : கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. 

நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956ல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621. 5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். 

இந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. 

ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும், டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்த கோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

புதன், 8 நவம்பர், 2023

தேவிபட்டினம் (நவபாஷாணம்)

தேவிபட்டினம் (நவபாஷாணம்)
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : தேவிபட்டினம்
முகவரி : தேவிபட்டினம், இராமநாதபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், இராமேசுவரம் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : தேவிபட்டினத்தில் அமைந்துள்ள நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு திருமண தடை, முன்னோர்களுக்கு தர்ப்பணம், ஏவல், தோஷ நிவர்த்தி உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவிபட்டினம் உள்ளது. தேவிபட்டினம் ஒரு சிறு துறைமுகமாக விளங்கியது. 1954ஆம் வருடம் இத்துறைமுகம் செயல்படுவது நின்றது. உலகநாயகி அம்மன் கோவில் இங்கு இருப்பதால் இது தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சக்தி பீடமாகும்.

அருள்மிகு மங்களநாதர் திருக்கோவில்

அருள்மிகு மங்களநாதர் திருக்கோவில்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : உத்தரகோசமங்கை
முகவரி : உத்தரகோசமங்கை, ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : உத்தரகோசமங்கை

வரலாறு : ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் ஒன்று உள்ளது என்றால் அது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோவில் மட்டுமே.

தல வரலாறு :

மண்டோதரி (இராவணனின் மனைவி) என்ற பெண் முன்னொரு காலத்தில் உலகில் தலைசிறந்த சிவனின் பக்தரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈசனை தியானித்தாள். சிவபெருமான் முனிவர்களை அழைத்து தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை கொடுத்து விட்டு தான் மண்டோதரிக்கு காட்சி தர செல்வதாகவும், தான் வரும் வரை இதை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கூறி விட்டு சென்றார். சிவபெருமான் மண்டோதரி முன்பு காட்சி அளித்து வரத்தினை அருளினார். பின் இராவணன் இருக்கும் இடத்திற்கு சென்று அந்த இடத்தில் ஒரு குழந்தைபோல் அவதாரம் எடுத்தார். ஆனால் இராவணனும் ஒரு சிவபக்தன் அதனால் தன் எதிரில் தவழ்ந்து வரும் குழந்தை ஈசன் என்பதை உணர்ந்து குழந்தையை தூக்கினான். ஈசன் இராவணனை சோதிக்க நினைத்து தன்னையும் தன்னை சுமப்பவனையும் சேர்த்து எரிக்க ஆரம்பித்தார். அந்த தீ மூவுலகையும் தகிக்க வைத்தது. அந்த வேளையில் சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கு ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது அன்று முதல் 'அக்னி தீர்த்தம்' என பெயர் பெற்றது. சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கு ஆபத்து வந்த போது அதை பாதுகாப்பதற்காக மாணிக்கவாசகர் ஒருவர் மட்டும் தைரியமாக இருந்து அந்த நூலை சிவபெருமான் வரும் வரை காப்பாற்றினார். பிறகு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார். வேத ஆகம நூலை காப்பாற்றியதற்காக சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

தலச்சிறப்பு :

ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாளம்பூ சார்த்தலாம் என்பது இந்த தலத்தின் முக்கியமான சிறப்பம்சமாகும். பிரம்மா, இத்தலத்தில் சாப விமோச்சனம் பெற்றார். இங்கு இருக்கும் இலந்தை மரத்தடியில் சுயம்புவாக இறைவன் தோன்றினார். அந்த மரம் இன்னும் இங்கு உள்ளது. இங்கு இருக்கும் நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது. இந்த நடராஜருக்கு வருடம் முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும். ஆருத்ரா தரிசனத்தன்று ஒரு நாள் மட்டும் மக்கள் தரிசனத்திற்காக சந்தனக்காப்பு கலைக்கப்படும். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக கூடுவர். ஈசன் வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு அருளிய புண்ணிய திருத்தலம். இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியதால் உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பெயரும் உண்டு.

பிரார்த்தனை :

அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். காலையில் சுவாமியையும், அம்பாளையும் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன், தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.

அரியமான் கடற்கரை

அரியமான் கடற்கரை
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : சாத்தக்கோன்வலசை
முகவரி : சாத்தக்கோன்வலசை, இராமநாதபுரம்.
தாலுகா : சாத்தக்கோன்வலசை

வரலாறு : அழகிய அரியமான் கடற்கரை, இராமநாதபுரம் அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் அமைந்துள்ளது.

நீலக்கடல் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக்கூடிய அழகிய கடற்கரையாக உள்ளது.

இந்த கடற்கரை சுத்தமான கடல் தண்ணீர் மற்றும் அழகான வெள்ளை மணலாலும் நம்மை வரவேற்கிறது.

அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் கரையோரங்களில் சவுக்கு மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரையில், இங்குள்ள மர நிழல்களில் அமர்ந்து கடலின் அழகை மெய்மறந்து ரசிக்கலாம்.

இங்குள்ள பூங்காவில் கொஞ்சி விளையாட நீச்சல் குளம், செயற்கை இடி மின்னல், நீர்ச்சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

மனதை மயக்கும் இந்த கடற்கரையில் சுடச்சுட பொறிக்கப்படும் மீன்களின் வாசம் நம்மைச் சுண்டி இழுக்கும்.

இந்த கடலின் ஆழமும், அலைகளும் குறைவாக இருப்பதால் குழந்தைகளுடன் குதூகலித்து விளையாட சிறப்பான கடற்கரை.

சிறப்புகள் :

குளுமையான தென்றல்...

மின்னும் நீலக்கடல்...

உற்சாகமூட்டும் நீச்சல் குளம்...

மிரட்டலான செயற்கை இடி மின்னல்...

குதூகலிக்கும் நீர்ச்சறுக்கு விளையாட்டு...

சுண்டி இழுக்கும் மீன் வறுவல்...

வெண்மையான மணல்...

மகிழ்ச்சியான குளியல்...

வளர்ந்து நிற்கும் சவுக்கு மரங்கள்...

போக்குவரத்து :

இராமநாதபுரத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், இராமேஸ்வரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் இந்த அழகிய கடற்கரை அமைந்துள்ளது.

தனுஷ்கோடி கடற்கரை

தனுஷ்கோடி கடற்கரை
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : தனுஷ்கோடி
முகவரி : தனுஷ்கோடி, இராமேஸ்வரம், இராமநாதபுரம். பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவை ஒன்றிணைகின்றன. இப்பகுதி அரிச்சல் முனை என்று அழைக்கப்படுகிறது. 

சுற்றுலா பயணிகள் பெருமளவில் தனுஷ்கோடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இந்த கடற்கரையின் பிரதான அம்சங்களாவன: ராம சேது view point, ஆதாம் பாலம் (இந்து புராணங்களின்படி இறைவன் ராமருக்கு குரங்குகளின் படைகளால் (வானரங்களின் படை) கட்டப்பட்டதாக கூறப்படும் பாலம்.

இராமேஸ்வரம்

இராமேஸ்வரம்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : இராமேஸ்வரம், இராமநாதபுரம்.
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. மதுரையிலிருந்து 172 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J.அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.

இது வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.

12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, பழமைக்கு சொந்தமானதுமான புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான ராமநாதசுவாமி ஆலயம் இங்கு உள்ளது. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமை இந்த கோவிலுக்கு உண்டு.

தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் தீவு. கோவில்களின் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக ராமேஸ்வரம் கருதப்படுகின்றது. பாவங்களை போக்கும் தளமாகவும் விளங்குகிறது.

இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி சீதையை மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக நம்பப்படுகின்றது.

மக்கள் இங்கு வந்து புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.

எப்படி செல்வது?

சென்னை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கிறது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக பயணம் செய்யலாம்.

இராமேஸ்வரம் கடல்

இராமேஸ்வரம் கடல்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : பாம்பன் தீவு, இராமேஸ்வரம், இராமநாதபுரம்
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : இராமேஸ்வரம் கடற்கரை இந்தியாவின் தென்கிழக்கு முனையான இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இந்துகள் புனித யாத்திரை செல்லும் முக்கிய இடங்களில் ஒன்று. 

இராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் ஆழமில்லாமல் இருப்பதால் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் ஏதுவாக உள்ளது. இவ்விடத்தில் கடற்கரையைச் சுற்றிலும் மதச்சடங்குகள் நடைபெறுகின்றன. இந்த கடற்கரையை ஒட்டியுள்ள ராமநாதர் கோவிலின் உள்ளே 21 தீர்த்தங்கள் இவ்விடத்தின் சிறப்பம்சமாகும். 

இராமநாதர் கோவில், பாம்பன் பாலம், கோதண்ட ராமர் கோயில், வில்லூண்டி தீர்த்தம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இவ்விடம் நீந்துவதற்கும், சூரியக் குளியல் எடுப்பதற்கும் மிகச்சிறந்த இடமாகும்.

APJ அப்துல் கலாம் மணி மண்டபம்

A.P.J அப்துல் கலாம் மணி மண்டபம்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : இராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரோடு, ராமேஸ்வரம்
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னாளில், விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஷில்லாங்கில் ூலை மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட அன்னாரது திடீர் மறைவுக்குப்பிறகு 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அன்னாரது நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . மணி மண்டபத்தின் உள்ளே அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும சில ் ஏவுகணைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் வளைகுடா - கடல்வாழ் உயிரினப் பூங்கா

மன்னார் வளைகுடா - கடல்வாழ் உயிரினப் பூங்கா
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : மன்னார் வளைகுடா
முகவரி : மன்னார் வளைகுடா, இராமநாதபுரம்
தாலுகா : இராமநாதபுரம்

வரலாறு : இந்தியாவிலேயே மிகப் பெரிய கடற்கரையைக் கொண்ட தேசிய கடல் வாழ் உயிரினங்களின் பூங்கா இங்குதான் உள்ளது. 3600 வகையான கடல் வாழ் தாவரங்களும் உயிரினங்களும் கொண்ட இந்தப் பூங்காவை இந்திய குழுவும் அமைப்பும் இணைந்து தனிப்பட்ட கவனத்திற்குரிய சிறப்புப் பகுதியாக அடையாளப்படுத்தி பயன்பாட்டு நிர்வாகச் சிறப்புத் தகுதியையும் வழங்கி உள்ளன.

குருசடை தீவு

குருசடை தீவு
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : மன்னார் வளைகுடா
முகவரி : மன்னார் வளைகுடா, இராமநாதபுரம்
தாலுகா : இராமநாதபுரம்

வரலாறு : பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள அழகிய சிறு தீவு இது. இராமநாதபுரம் மண்டபத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தீவைச் சுற்றி பவளப்பாறைகளும் டால்பின் போன்ற அரியவகை மீன்களும், கடல் பசுக்களும் உள்ளன. கடல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்களுக்கு மிகப்பிடித்த தீவு இது. மீன்வளத்துறையின் அனுமதி பெற்றுத்தான் இங்கு செல்ல முடியும்.