மாவட்டம் : அரியலூர்
இடம் : அரியலூர்
முகவரி : அரியலூர்
தாலுகா : அரியலூர்
வரலாறு : கோதண்டராமசாமி கோயிலில் உள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். தசாவதாரங்களும் இக்கோயிலில் உள்ள தூண்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மச்ச, கூர்ம, கல்கி, கிருஷ்ண, வராக, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, வாமன என பத்து அவதாரங்களும் இக்கோயிலில் தசாவதார மண்டபத்தில் சிற்பமாக மிக நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு அவதாரத்தின் சிற்பங்களும் ஆறு அடி உயரத்திற்கு இருக்கின்றன. இந்த பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரமூர்த்தி, இந்த ஊர் மக்களின் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். இக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது நாச்சியார் திருக்கோலத்துக்குப் பின், அருள்மிகு கோதண்டராமசாமி, மோகினி அலங்காரத்துடன் எழுந்தருளி, திவ்யரூப தரிசனம் தருகிறார். இதைத் தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பின்போது கருவறையிலிருந்து புறப்படும் கோதண்டராமசாமி முன்பகுதி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, நம்மாழ்வார் பரமபதவாசல் எதிரே எழுந்தருளிய பின்னர், பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
0 Comments: