மாவட்டம் : அரியலூர்
இடம் : ஏலாக்குறிச்சி
முகவரி : ஏலாக்குறிச்சி,லால்குடி,அரியலூர் -621715
தாலுகா : லால்குடி
வரலாறு : அடைக்கல மாதா ஏலாக்குறிச்சி,அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இது ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரு புனித வழிபாட்டு தலமாகும். இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவர் என அழைக்கப்படும்.
கான்ஸ்டாண்டினோபிள் ஜோசப் பெஸ்கி கி.பி 1710 முதல் 1742 ஆண்டு வரையிலான காலங்களில் கிருத்துவ மதத்தைப் பரப்பினார். இங்குள்ள அடைக்கல மாதா ஆலயம் இவரால் கட்டப்பட்டது. இவர், பாளையக்காரர் ஒருவரின் கொடிய நோயினை, அன்னை மாதா ஆசிர்வாதத்துடன் குணப்படுத்தினார். வீரமா முனிவரின் சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர், 60 ஏக்கர் நிலங்களை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
0 Comments: