ஞாயிறு, 5 நவம்பர், 2023

அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்

அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்
மாவட்டம் : அரியலூர்
இடம் : அரியலூர்
முகவரி : அரியலூர், அரியலூர்
தாலுகா : அரியலூர்

வரலாறு : வளையல் வியாபாரி ஒருவர் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய சென்றிருக்கிறார். ஒருநாள் தெருதெருவாக சுற்றிவந்து அவர் வளையல் விற்று வந்தபோது அவர் எதிரே ஒரு சின்ன பெண் நின்றுகொண்டு. வளையல்காரரே எனக்கு வளையல் வேண்டும் தருவீர்களா? என்று தன் பிஞ்சு கரங்களை நீட்டி கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பெண் சுட்டித்தனம் எதுவும் செய்யறாளோ என்று அவர் யோச்சிருக்கிறார். என்ன பார்க்கறீங்க? வளையலுக்கு காசு தருவேனா, மாட்டேனான்னுதானே, அந்தத் தெருவுல இருக்கிற பெரிய வீடு எங்க அண்ணனுதுதான் அவர்கிட்டே ஒப்பில்லாதவளுக்கு வளையல் போட்டு விட்டதா சொல்லி காசு வாங்கிக்கொள்ளுங்கள். என்று குழந்தை சொல்லிருக்கிறாள். வளையல்காரரும் அவளுடைய கைநிறைய வளையல்களைப் போட்டுவிட்டுருக்கிறார். குழந்தை சந்தோஷமாக கலகல வென்று சிரித்துக்கொண்டே ஓடிப்போய்விட்டாள். சிறுமி சொன்ன வீட்டில் காசை வாங்கிக்கொள்வதற்காக போன வளையல்காரர் திகைத்துவிட்டாராம். ஏன்னென்றால் அது அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரோட அரண்மனை! ராஜாவீட்டுப் பெண்ணா தன்கிட்டே வளையல் வாங்கிருப்பாள் என்று தயங்கினாலும் கேட்டுத்தான் பார்ப்போம் என்று நுழைந்து கேட்டுவிட்டார் வியாபாரி.

அரண்மனையில் அப்படி ஒரு பெண்குழந்தை இல்லை என்று சொன்னதுடன், ஏமாற்றுவதாக என்னி வளையல்காரரை திட்டி அடித்திருக்கிறார்கள். ஒப்பில்லாதவள்னு பெயர்கூட சொன்னாளேன்னு நம்பினேன் இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று அழுதார் வளையல்காரர். சட்டென்று ஒருவிஷயம் புரிந்திருக்கிறது ராஜாவுக்கு தன்னோட தங்கை என்று சொல்லி அவரிடம் வளையல் வாங்கிக் கொண்டது தங்களோட குலதெய்வமான ஒப்பில்லாதவள் தான் என்று உடனே ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டு ஏராளமான பொன்னும் பொருளும் வளையல்காரருக்கு கொடுத்து அனுப்பினார். குழந்தையாக வந்து அம்மன் எந்த இடத்தில் அமர்ந்து வளையல் போட்டுக்கொண்டாலோ அங்கு ஒரு கோயில்கட்டி அம்மனை எழுந்தருளும்படி வேண்டியிருக்கிறார் ராஜா. அம்மனும் அருள்வாக்கில் சரி என்று சொல்லிவிட்டாள்.
Previous Post
Next Post

0 Comments: