புதன், 18 டிசம்பர், 2024

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருணைக்கிழங்கு...!!

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருணைக்கிழங்கு...!!



கருணை கிழங்கானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இவை பெண்களுக்கு மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

 

கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கருனைகிழங்கை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். குடல் புண், வயிற்று புண்களை ஆற்றும். கருணை கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் எரிச்சலை போக்குவதற்கு புளி அல்லது மோர் சேர்த்து

 

கருணை கிழங்கு நார்ச்சத்து உடையது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருணை கிழங்கு லேகியம் மூலநோய்க்கு மருந்தாகிறது.

 

கருணை கிழங்கை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தாயாரிக்கலாம். வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு பசை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்கும்.

 

கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துவர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை போக்கும். வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது. உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலம் கொடுக்கும்.

 

கருணைகிழங்கு மலசிக்கலை போக்கும் தன்மையுடையது. நாட்பட்ட காய்ச்சலுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருனைகிழங்கு விளங்குகிறது. ஜீரண மண்டல உறுப்புக்கள் சரியாக வேலை செய்ய வைக்க கருணை கிழங்கு உதவுகிறது.

முளை, கட்டிய தானிய உணவும்...! மருத்துவ, பயன்களும்...!

முளை, கட்டிய தானிய உணவும்...! மருத்துவ, பயன்களும்...!



ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. 

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். 

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். 

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது. 

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். 

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும். 

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும். 

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். 

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். 

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும். 

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு...!

வாழைத்தண்டு மருத்துவகுணம் அறிவோமா??

வாழைத்தண்டு மருத்துவகுணம் அறிவோமா??



முக்கனிகளுள் ஒன்றான வாழை யின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

குறிப்பாக வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.

அதிலும் இதன் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. 

அந்தவகையில் வாழைத்தண்டு சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வாழைத்தண்டை தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். 

கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும் உதவும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். 

வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.   

நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

சீமை அகத்தி.

சீமை அகத்தி.
சீமை அகத்தி.



மூலிகையின் பெயர் :- சீமை அகத்தி.

தாயகம் :- மெக்சிகோ.

தாவரவியல் பெயர் :- Senna Alata.

பேரினம் :- Senna [சென்னா]. 

குடும்பம் :- Fabaceae. [வாபேசியே]

துணைக்குடும்பம் :- Caesalpinioideae [சீஸல்பின்னியாய்டியே].

வேறுபெயர்கள்.

சீமை அகத்தி.
பேயகத்தி.
சீமைஅவுத்தி.
காலவகத்தி.
பொன்னகத்தி.
அஞ்சலி.
அலடா.
சிண்டுகை.
சிரிகை.
பைரவம்.
புளியச்சிகா செடி.
வண்டுக்கொல்லி.
புழுக்கொல்லி.

 மருத்துவப்பயன்.

          
சீமை அகத்தி இலைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நுண்ணுயிர் மற்றும் புழுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

          
தோல் நோய்களை குணமாக்கும் ''கிரையேகோனிக்'' என்னும் வேதிப்பொருள் இதன் இலைகளில் அதிக அளவில் உள்ளதால் உலர வைக்கப்பட்ட இதன் இலைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

          
இதன் இலைகள் சோப்பு செய்வதற்கும், முகப்பூச்சு தயாரிக்கவும் பயன்
படுத்தப்படுகின்றன.

          
சீமை அகத்தி இலை, விதை ஆகியவற்றை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கரப்பான், படை, சொறி, சிரங்கு மற்றும் சிலருக்கு வரும் கழிப்பறை பற்று ஆகியவற்றின் மீது தடவிவர குணமாகும்.

          
இதன் இலை சாற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் காய்த்து தைல பக்குவத்தில் இறக்கிக்கொள்ளவும். இதனை நகச்சுற்று, சேற்றுப்புண் , படர்தாமரை முதலியவற்றிற்கு பயன்படுத்த சிறந்த பலன்தரும்.

          
வண்டுக்கடியினால் ஏற்படும் வீக்கம் தடிப்பு முதலியவைகளை இது சிறப்பாக குணப்படுத்துவதால் இச்செடி ''வண்டுக்கொல்லி'' என்றும் அழைக்கப்படுகிறது. சீமை அகத்தி இலையை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு அரைத்து வண்டு கடித்து தடித்த இடங்களில் பூசிவர சிறந்த குணத்தைப் பெறலாம்.

          
இதன் மஞ்சள் நிற பூக்களை கஷாயமாக அருந்திவர சிறுநீர் கோளாறுகள் நீங்கி சிறுநீர் தடையின்றி வெளியேறும்.

          
இதன் பட்டையை ஊறவைத்த முறைப்படி கஷாயம் வைத்து சாப்பிட மேக வியாதிகள் நீங்கும்.

          
பற்று, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றிற்கு சித்த மருந்துகள் விற்கப்படும் கடைகளில் ''சீமையகத்தி களிம்பு'' விற்கப்படுகிறது. இதையும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

          
சரி, சீமையகத்தி களிம்பு எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பார்ப்போம். 

சீமையகத்தி களிம்பு.

தேவையானபொருட்கள் :-

சீமையகத்தி இலைச்சாறு - 1 லிட்டர்.
தேங்காய்யெண்ணை - 1 லிட்டர்.
எலுமிச்சம்பழச்சாறு -1 லிட்டர்.
கருஞ்சீரகம் - 20 கிராம்.
காட்டுசீரகம் - 20 கிராம்.
கசகசா - 20 கிராம்
கார்போக அரிசி - 20 கிராம்.
நீரடிமுத்து - 20 கிராம்.
தேன்மெழுகு - 300 கிராம். 

செய்முறை :- 

மேற்கண்ட பொருட்களை மூலிகை சுத்தி முறையில் சுத்தி செய்து எடுத்துக்கொள்ளவும் +. கருஞ்சீரகம், காட்டுசீரகம், கசகசா, கார்போகஅரிசி, நீரடிமுத்து ஆகியவைகளை தேவையான அளவு தேங்காய்ப்பால் விட்டு தனித்தனியாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.

 
          
பின் அரைத்தெடுத்த பொருட்களை ஓன்றாக கலந்து அதனுடன் சீமை அகத்தி இலை சாறு, தேங்காய்யெண்ணை, எலுமிச்சம்பழச் சாறு விட்டு சிறு தீயாக எரிக்கவும். [தீ அதிகமாக எரியவிட்டால் மருந்து கருகி வீணாகப்போகும்.] கலத்தின் அடியில் படியும் மருந்தின் வண்டல் பகுதி மெழுகுபதமாக வந்தவுடன் [கருகுவதற்கு முன் ] இறக்கிவிடவும்.

          
பின் வடிகட்டி தேன்மெழுகை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்கு ஆறும்வரை கலக்கிக்கொண்டே இருந்தால் களிம்பாக உறையும். இதுவே ''சீமையகத்தி களிம்பு ''. இதை பாட்டிலில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.