வியாழன், 11 ஏப்ரல், 2024

விசாகன் பெயரில் இரு திருத்தலங்கள்...

ஆலயதரிசனம்...

விசாகன் பெயரில் 
இரு திருத்தலங்கள்...

முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. 

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது. 

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளிமிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள். 

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார். விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன் மற்றொருவர் அக்னி. இவர்கள் சகல மங்களங்க ளையும் அளிப்பவர் களாக தமது இருதிருக்கரங்க ளில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள். 

அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர். விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. 

1. வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும். இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும்.

2. தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
Previous Post
Next Post

0 Comments: