அர்ச்சணை கட்டணம் கிடையாது.
தரிசணங்களுக்கு வரிசை கட்டணம் கிடையாது. VIP, சாதாரணமானர் எனும் பாகுபாடுகள் கிடையாது. ஒரேயொரு பிரார்த்தனை உண்டியல் தவிர வேறு எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. அர்ச்சகர்களின் கட்டாய அடாவடி வசூல் கிடையாது. குறிப்பாக ஊழல் உலவாரம் செய்ய அரசு அறநிலயத்துறை கிடையாது..
நியாயமான விலையில் அர்ச்சனை தட்டு கோவில் நிர்வாகத்தால் மட்டுமே கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பிரைவேட் வியாபாரிகள் நுழைய தடை. இப்படி ஒழுக்கமும், நியாயமும், தூய பராமரிப்பும் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான சூழலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விடயங்கள் . கார், பஸ் போன்றவை பார்க்கிங் செய்ய பெரிய இடவசதி மற்றும் நியாயமான கட்டணங்கள்.
நாட்டு்க் கோட்டை நகரத்தார்களால் முற்றிலும் தூய்மையாக, தூய பக்தியோடு பராமறிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் ஜொளிக்கும் உலகப்பிரசித்தி பெற்ற கற்பக விநாயகரை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசியுங்கள். முக்திபேரு அடையுங்கள்.
அருகிலேயே குன்றக்குடி முருகன். உலகப்பிரசித்தி பெற்ற சிற்பங்கள் நிறைந்த நேமம் சிவன் கோவில், மேற்கூரை வண்ண ஓவியங்கள் நிறைந்த வைரவன்பட்டி வைரவநாதர் கோவில், போன்றவற்றையும் தரிசிக்கலாம்.
இருப்பிடம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 10 கிமீ. திருப்பத்தூரில் இருந்து 12 கிமீ. மதுரையில் இருந்து 80 கிமீ.
0 Comments: