புதன், 28 ஆகஸ்ட், 2024

கோதுமை இனிப்புப் புட்டு!!

கோதுமை இனிப்புப் புட்டு!!

*தேவை:*

கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு தேங்காய்த் துருவல் – தேவையான அளவு.

*செய்முறை:*

 கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்

புதினா பொடி புலாவ்

புதினா பொடி புலாவ்

*தேவை:

புதினா பொடி செய்ய: புதினா – ஒரு கட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு – 100 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. புலாவ் செய்ய: பாசுமதி அரிசி சாதம் – ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புதினாவை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலரவிடவும். வாணலியில் கறுப்பு உளுந்தைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு புதினா சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். ஆறியதும் உளுந்து கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். புதினா பொடி ரெடி. அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து இறக்கவும். இதை ஆறிய சாதத்துடன் சேர்த்து உப்பு, புதினா பொடி சேர்த்து சாதம் உடையாமல் நன்கு புரட்டிவிடவும்.

*குறிப்பு:*

பொடியில் உப்பு இருப்பதால் சாதத்துடன் உப்பைக் கவனமாகச் சேர்க்கவும். பொடியை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்

முருங்கைக்கீரை சூப்

முருங்கைக்கீரை சூப்

தேவையான பொருள்

சுத்தம் செய்த முருங்கைக்கீரை – ஒரு கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் பூண்டு – 5 பல்
தோலுரித்த சின்ன வெங்காயம் – 6 தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை, மஞ்சள்தூள் – சிறிதளவு தேங்காய்ப்பால் – ஒரு கப் மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

*செய்முறை:*

 வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். குக்கரில் கழுவிய முருங்கைக்கீரை, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரின் மூடியைத் திறந்து நன்கு மசித்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கிப் பரிமாறவும்

சுவையான ரவா கிச்சடி ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க

இட்லி, தோசை ”போர்” அடிக்குதா? சுவையான ரவா கிச்சடி ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க


சுவையான மற்றும் ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி எப்படி செய்வது 

 தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான உணவுகளாக உள்ளன. இருப்பினும், எப்போதும் இட்லி, தோசை என சாப்பிட்டு சில நேரங்களில் நமக்கே போர் அடிக்கும். இதற்கு தீர்வு தரும் சிறந்த காலை உணவு தேர்வாக ‘ரவா கிச்சடி’ உள்ளது.

ரவா கிச்சடியை நாம் பெருபாலும் நமது வீடுகளில் செய்வதை தவிர்க்கவே செய்வோம். ஏனென்றால் இதை தயார் செய்ய கூடுதலாக நாம் நேரம் செலவிட வேண்டும். கூடவே கொஞ்சம் பொறுமை வேண்டும். சில சமயங்களில் நாம் செய்யும் தயார் செய்த கிச்சடி சில நிமிடங்களிலேயே கல் போன்று ஆகி விடும். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், சுவையான மற்றும் ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி எப்படி செய்வது 

தேவையான பொருட்கள்

கடலை எண்ணெய் – சிறிய கப்
பச்சை மிளகாய்
உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்
முந்திரி பருப்பு
கருவேப்பிலை
இஞ்சி – 2 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2
சர்க்கரை – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரவை – 1 கப் பெரியது
2 கப் சுடு தண்ணீர்
கரம் மசாலா – 1 துளி அளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு கனமான கடாய் எடுத்து அதில் கப்பில் உள்ள பாதியளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றவும். அடுப்பை மிதமான தணலில் வைத்து, தாளிக்க தேவையான உளுந்தம் பருப்பு, முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றை நன்கு வதக்கி கொள்ளவும். முக்கியமாக கருகாமல் வதக்கவும்.

அதன் பிறகு ரவையை இவற்றோடு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். இந்த சமயத்தில் பச்சை பட்டாணி, உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் (நீங்கள் விரும்பினால்) ரவையை நன்கு வறுத்த பிறகு அதில் தண்ணீர் சேர்க்க எந்த கப்பில் நீங்கள் ரவை எடுத்தீர்களோ அதே கப்பில் 2 கப் சுடு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

அவற்றை ரவையோடு சேர்த்து நன்கு கிளறிய பிறகு, அதில் மீதமுள்ள எண்ணெயில் பாதியளவும், கரம் மசாலா துளியளவும் சேர்த்து கிளறவும். அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி, ஒரு மூடியால் முடி சரியாக 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

2 நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து அவற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். இறுதியாக கப்பில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து மீண்டும் கிளறவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த ரவா கிச்சடி தயாராக இருக்கும். இதில் எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் 1/3 அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

டோஸ்டு பொட்டேட்டோஸ்

டோஸ்டு பொட்டேட்டோஸ்

தேவையானவை:_ 

உருளைக்கிழங்கு – 3

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன்

வினிகர் – ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

வெங்காயத்தாள் – அலங்கரிக்க

உப்பு, எண்ணெய்– தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!
செய்முறை:

உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்து தோல் சீவி விரல் வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மாவு, தேவையான உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். பின்னர் இந்த உருளைக்கிழங்குத் துண்டுகளுடன் தயாரித்து வைத்துள்ள சோள மாவு - மைதா மாவு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை மீதமிருக்கும் சோள மாவில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், வினிகர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையைப் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். ஒரு டீஸ்பூன் சோள மாவை தனியாக எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து அதைக் கொதிக்கும் இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறவும். பின்னர் பொரித்து வைத்துள்ள உருளை துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

உலகின் பஞ்சத்தைப்போக்கும் உணவுப்பொருள்களில் உருளைக் கிழங்கு முக்கியத்துவம் பெறுகிறது.



🌷🌷

சூப்பரான டீ ரெடி நீங்களும் ட்ரை பண்ணுங்க

சூப்பரான டீ ரெடி நீங்களும் ட்ரை பண்ணுங்க

தேவையான பொருட்கள்

பால் – 2 கப்
ஏலக்காய் – 6
பட்டை – 1 துண்டு
லவங்கம் – 4
இஞ்சி – 1 துண்டு
டீ தூள் – 2 தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
சர்க்கரை – 2 தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து காய்ச்சவும்.

2. ஒரு இடிக்கும் கல் அல்லது மிக்சி ஜாரில் 6 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனுடன் 1 துண்டு பட்டை சேர்க்கவும்.

4. பின்னர் 4 லவங்கம் சேர்த்து நைசாக இடித்துக் கொள்ளவும்.

 5. கல்லில் 1 துண்டு இஞ்சி சேர்த்து இடிக்கவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

6. ஒரு பானில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  7. டீத்தூள் கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் இஞ்சியை சேர்த்து கலக்கவும்.

8. அதனை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் அல்லது பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும்.

9. பின்னர் 2 தேக்கரண்டி அல்லது உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

10. பால் பொங்கி வந்ததும் அதனை டீ டிகாஷன் உடன் சேர்த்து கொள்ளவும்.


 11. மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.


11. அதனை ஒரு வடிகட்டிக் கொண்டு வடிகட்டி சூடாக பரிமாறவும்.


12. சுவையான மசாலா தயார்.
#சமையல்

சுவை மிகுந்த வெங்காய போண்டா.

சுவை மிகுந்த வெங்காய போண்டா.

*தேவையான பொருட்கள்:*

கடலை மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

மைதா மாவு - 4 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

*செய்முறை:*

வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், மைதா மாவு உப்பு வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை நன்கு காயவைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவைத்து எடுக்கவும். சுவையான வெங்காய போண்டா தயார்.

காரமான மசாலா ஃபிஷ் ஃப்ரை,

காரமான மசாலா ஃபிஷ் ஃப்ரை, ஃபிஷ் ஃப்ரை ரெசிபி, தாவா ஃபிஷ் ஃப்ரை, தமிழில் இந்திய ரெசிபிகள், ஃபிஷ் ஃப்ரை, காரமான ஃபிஷ் ஃப்ரை, மசாலா ஃபிஷ் ஃப்ரை, மிருதுவான ஃபிஷ் ஃப்ரை


 மீன் வறுவலுக்கான பொருட்கள்:

 - கிங் / வஞ்சரம் மீன் துண்டுகள் (7 துண்டுகள்) - 500 கிராம்

 இதனுடன் marinate:
 சோள மாவு - 4 டீஸ்பூன்
 அரிசி மாவு - 1 டீஸ்பூன்
 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
 உப்பு (தேவைக்கேற்ப)
 எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

 வறுக்கவும்:
 - எண்ணெய்

 தயாரிப்பு:
 - மீன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவவும்.
 - மேலே குறிப்பிடப்பட்ட இறைச்சிக்கான அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து 30-45 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.

 செயல்முறை: (டீப் ஃப்ரை)
 - ஒரு வறுக்கப்படுகிறது பான் எடுத்து எண்ணெய் சூடாக்க
 - இப்போது மீன் துண்டுகளை அருகருகே வைத்து 3 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் வறுக்கவும்
 - இப்போது துண்டுகளை மறுபுறம் திருப்பி, மறுபுறத்தில் மீண்டும் செய்யவும்
 - சூடாக பரிமாறவும்

 செயல்முறை: (தவா ஃப்ரை)
 - ஒரு வறுக்கப்படுகிறது பான் எடுத்து எண்ணெய் சூடாக்க
 - இப்போது மீன் துண்டுகளை அருகருகே வைத்து 3 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் வறுக்கவும். வெப்பத்தை குறைக்கவும், மேலும் 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்
 - இப்போது துண்டுகளை மறுபுறம் திருப்பி, மறுபுறத்தில் மீண்டும் செய்யவும் (3 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்திலும், பின்னர் 3 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்திலும்)
 - அதை மீண்டும் திருப்பி, இருபுறமும் 2 நிமிடங்கள் அதிக வெப்பத்தில் வறுக்கவும்
 - சூடாக பரிமாறவும்
#சமையல்

செட்டிநாடு ஸ்பெஷல் மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு..

செட்டிநாடு ஸ்பெஷல் மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு..
செட்டிநாடு ஸ்பெஷல்: #மாங்காய்_கத்திரிக்காய்_பூண்டு_குழம்பு...


 #தேவையானபொருட்கள்...

 *1/2கப் மாங்காய் துண்டுகள்* 

 *4சிறிய சைஸ் கத்தரிக்காய்* 

 *1/2கப் துவரம் பருப்பு* 

 *1/4ஸ்பூன் மஞ்சள் தூள்* 

 *1/4ஸ்பூன் விளக்கெண்ணெய்* 

 *2ஸ்பூன் சாம்பார் தூள்* 

 *10பல் பூண்டு* 

 *1ஸ்பூன் எண்ணெய்* 

 *1/2ஸ்பூன் கடுகு* 

 *1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு* 

 *1/2டீஸ்பூன் பெருங்காயத்தள்* 

 *கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு* 

#செய்முறை...

முதலில் மாங்காய் அரை கப் அளவிற்கு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். நான்கு சிறிய சைஸ் கத்திரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் நீளவாக்கில் அரிந்து போடவும். 10 பல் பூண்டு உரித்து வைத்துக் கொள்ளவும். அரைக்கப் துவரம்பருப்பை தண்ணீர் சேர்த்து கால் ஸ்பூன் விளக்கெண்ணெய்,கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். 

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், கிள்ளிய வரமிளகாய் இரண்டு, கருவேப்பிலை சேர்த்து சிவக்க விட்டு அதில் 10 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். இவற்றுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும. பிறகு அரிந்த மாங்காய் துண்டுகள் மற்றும் கத்திரிக்காய் சேர்க்கவும்.சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கொத்தமல்லி தழை சேர்க்கவும்.புளித் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இதுபுளி இல்லாத பருப்பு குழம்பு. உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடவும் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

சுவையான ஸ்பெஷல் மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு தயார்.
 🌹சுவையான செட்டிநாடு ஸ்பெஷல்: மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு ரெடி🌹
#சமையல்