புதன், 28 ஆகஸ்ட், 2024

கேரட் முட்டைப் பொரியல்

கேரட் முட்டைப் பொரியல்

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்😍

*🍱தேவையான பொருட்கள்*

கேரட் - 2 மீடியம் சைஸ்

முட்டை -1

நறுக்கிய வெங்காயம் -1

பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது 2

மஞ்சள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - சிறிது

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்

கிள்ளிய வற்றல் -1

கறிவேப்பிலை - 2 இணுக்கு

தேங்காய்த் துருவல் -2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

நறுக்கிய மல்லி இலை - சிறிது.

*🍴செய்முறை: 👇*

கேரட் வெங்காயம,பச்சை மிளகாய்,மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.முட்டையை சிறிது பின்ச் உப்பு மிளகு சேர்த்து அடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய கேரட் சேர்க்கவும்.மஞ்சள்,சீரகத்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.உப்பு சுவைக்கு சேர்த்து,சிறிது தண்ணீர் தெளித்து மூட போட்டு வேக விடவும்.

கேரட் வெந்தவுடன் அடித்து வைத்த முட்டையை சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும்.முட்டை வெந்து வந்தவுடன் தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.பிரட்டவும்.மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

சுவையான கேரட் முட்டைப்பொரியல் தயார்.சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

*🔥டிப்:🔥*
முட்டை சேர்த்து சிம்மில் வைத்து மூடி, பின்பு திறந்து உதிரியாக வருமாறு பிரட்டவும்.👍🌹
Previous Post
Next Post

0 Comments: