புதன், 28 ஆகஸ்ட், 2024

புதினா பொடி புலாவ்

புதினா பொடி புலாவ்

*தேவை:

புதினா பொடி செய்ய: புதினா – ஒரு கட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு – 100 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. புலாவ் செய்ய: பாசுமதி அரிசி சாதம் – ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புதினாவை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலரவிடவும். வாணலியில் கறுப்பு உளுந்தைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு புதினா சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். ஆறியதும் உளுந்து கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். புதினா பொடி ரெடி. அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து இறக்கவும். இதை ஆறிய சாதத்துடன் சேர்த்து உப்பு, புதினா பொடி சேர்த்து சாதம் உடையாமல் நன்கு புரட்டிவிடவும்.

*குறிப்பு:*

பொடியில் உப்பு இருப்பதால் சாதத்துடன் உப்பைக் கவனமாகச் சேர்க்கவும். பொடியை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்
Previous Post
Next Post

0 Comments: