புதன், 28 ஆகஸ்ட், 2024

செட்டிநாடு ஸ்பெஷல் மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு..

செட்டிநாடு ஸ்பெஷல்: #மாங்காய்_கத்திரிக்காய்_பூண்டு_குழம்பு...


 #தேவையானபொருட்கள்...

 *1/2கப் மாங்காய் துண்டுகள்* 

 *4சிறிய சைஸ் கத்தரிக்காய்* 

 *1/2கப் துவரம் பருப்பு* 

 *1/4ஸ்பூன் மஞ்சள் தூள்* 

 *1/4ஸ்பூன் விளக்கெண்ணெய்* 

 *2ஸ்பூன் சாம்பார் தூள்* 

 *10பல் பூண்டு* 

 *1ஸ்பூன் எண்ணெய்* 

 *1/2ஸ்பூன் கடுகு* 

 *1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு* 

 *1/2டீஸ்பூன் பெருங்காயத்தள்* 

 *கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு* 

#செய்முறை...

முதலில் மாங்காய் அரை கப் அளவிற்கு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். நான்கு சிறிய சைஸ் கத்திரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் நீளவாக்கில் அரிந்து போடவும். 10 பல் பூண்டு உரித்து வைத்துக் கொள்ளவும். அரைக்கப் துவரம்பருப்பை தண்ணீர் சேர்த்து கால் ஸ்பூன் விளக்கெண்ணெய்,கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். 

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், கிள்ளிய வரமிளகாய் இரண்டு, கருவேப்பிலை சேர்த்து சிவக்க விட்டு அதில் 10 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். இவற்றுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும. பிறகு அரிந்த மாங்காய் துண்டுகள் மற்றும் கத்திரிக்காய் சேர்க்கவும்.சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கொத்தமல்லி தழை சேர்க்கவும்.புளித் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இதுபுளி இல்லாத பருப்பு குழம்பு. உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடவும் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

சுவையான ஸ்பெஷல் மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு தயார்.
 🌹சுவையான செட்டிநாடு ஸ்பெஷல்: மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு ரெடி🌹
#சமையல்
Previous Post
Next Post

0 Comments: