திங்கள், 30 செப்டம்பர், 2024

செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்வது எப்படி....?

செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
வாழைக்காய் 1 (நீளமாக நறுக்கவும்) 
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு 

அரைக்க :

பச்சை மிளகாய் - 2
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் 
சிறிய வெங்காயம் - 5
பூண்டு பல் - 5 
தேங்காய் - சிறிது
மிளகு, சீரகம், சோம்பு - ஒரு டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 5 

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கேற்ப 
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து 

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். 

அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தெளித்து அரைக்கவும். 

பின்பு அதே வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். 

அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

அரைத்த மசாலா சேர்த்து நீர் தௌpத்து வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான செட்டிநாட்டு வாழைக்காய் மசாலா தயார்.

கோதுமை பாயாசம் செய்வது எப்படி....?

கோதுமை பாயாசம் செய்வது எப்படி....?

தேவையான பொருட்கள்:

உடைத்த கோதுமை – 1 கப்
பாதாம் பருப்பு, முந்திரி திராட்சை – தேவைக்கு ஏற்ப
வெல்லம் – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 கப்
பால் – 1/2 கப்
தண்ணீர் – 3 கப்
பாப்பி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

கோதுமை பாயாசம் செய்ய (godhumai payasam) ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி விடவும்.

பிறகு குக்கரில் வடிகட்டி வைத்துள்ள கோதுமை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருப்பு வேகவைப்பது போல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.

அதன் பிறகு அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து. அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.

வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

பின்பு அவற்றை மூடியை கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.

தித்திக்கும் சுவையான உடைத்த கோதுமை பாயாசம் ரெடி (godhumai payasam) பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி பின் பரிமாறலாம்.

பாயாசம் செய்யும் போது தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

உடைத்த கோதுமையை குக்கரில் வேகவைக்கும் முன் சிறிது நேரம் ஊற வைத்த பின்பு குக்கரில் வேகவைக்கவும்.

கத்திரிக்காய் துவையல் செய்வது எப்படி....?

கத்திரிக்காய் துவையல் செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் 4
உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 6
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிதளவு
புளி - சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - 8 டீஸ்பூன்


செய்முறை:

1. கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயத்தை நன்கு பொரித்துக் கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த வாணலியின் சூட்டிலேயே காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.

3. சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

4. இதை சாதத்திற்குப் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதம், மற்றும் தோசை இட்லி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்வது எப்படி ....?

உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்வது எப்படி ....?

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
சீரகம் - கால் டீஸ்பூன்
கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை,
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
கேரட் - 1
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 2

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்...

கீ ரைஸ் செய்வது எப்படி

கீ ரைஸ்......!

தேவையான பொருட்கள்:

2 டம்ளர் பச்சரிசி
1 வெங்காயம்
1/4 கப் ஆயில்
1 ஸ்பூன் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
2 கிரீன் சில்லி
1 தக்காளி
1/2 ஸ்பூன் பட்டை கிராம்புத்தூள்
4 டம்ளர் தண்ணீர்
தேவையானஅளவு மல்லி புதினா
உப்பு


செய்முறை: 

எண்ணெய் காய்ந்ததும் நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொஞ்சமாக மல்லி புதினா சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் கீறி சேர்க்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம்.

அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் வெங்காயம் தக்காளி வதங்கியதும் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

குக்கரை மூடி சாதம் வெந்தபின் பரிமாறலாம்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

பூண்டு புதினா பொடி செய்வது எப்படி ....?

பூண்டு புதினா பொடி செய்வது எப்படி ....?


தேவையான பொருட்கள்: புதினா - ஒரு கட்டு (சருகாகக் காய்ந்தது) தோல் உரித்த பூண்டு - 10 பல் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் நெய்யைச் சூடாக்கி பூண்டு சேர்த்து வறுத்து, புதினாவையும் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் வேர்க்கடலை, புதினா, பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாகப் பொடிக்கவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட, இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குக் தொட்டுக்கொள்ள சுவையான சைடிஷ் தயார்.

புரோட்டீன் நிறைந்த பச்சை பயறு, பெசரட் தோசை!

புரோட்டீன் நிறைந்த பச்சை பயறு, பெசரட் தோசை!
       

உடலுக்கு ஆரோக்கியம் ரக்கூடிய பச்சை பயிறு வைத்து ஆரோக்கியமான மொறுமொறு தோசை ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை இப்படி ருசியாக செய்து கொடுக்கும் போது நிச்சயமாகஅவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் இந்த ரெசிபியை உங்க வீட்டில் செய்வது நல்லது. கிரைண்டரில் கூட மாவு அரைக்க வேண்டாம். மிக்சி ஜாரில் போட்டாலே போதும். சுலபமா தோசையை சுட்டு எடுக்கலாம்.அந்த ஹெல்தி பிரேக்பாஸ்ட் ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோமா. பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழுதானிய உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுடைய ஆரோக்கியமும் வலுவாக அமையும். அந்த வகையில் தினமும் ஒரே வகையான தோசையை சுட்டு போரடித்து போன உங்களுக்குஅரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் வெறும் பச்சை பயறை கொண்டு செய்யப்படும் இந்த பச்சைபயறு தோசை மாவு ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.



 தேவையான பொருட்கள்:

¾ ஆழாக்கு முழு பச்சை பயிறு
½ கப் பார்லி
5 பச்சை மிளகாய்
1 மீடியம் துண்டு இஞ்சி
1 பல் பூண்டு


 செய்முறை:

 முழு பயிரையும் பார்லியையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் போட்டு மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
பிறகு அடுப்பில் தோசை கல்லை போட்டு அதில் இந்த மாவிலிருந்து ஒரு பெ ரிய கரண்டி மாவு எடுத்து மீடியம் சைஸ் ஆக தோசையை வார்க்கவும்.
அடுப்பை சின்ன தீயில் வைத்து சுடவும் கோல்டன் பிரவுன் ஆன பிறகு எடுத்துசாப்பிட சுவையாக இருக்கும்.


 குறிப்பு:

இதில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம் முருங்கை கீரையும் பொடி நறுக்கி போடலாம்.

கோ‌ழி‌க்க‌றி தொ‌க்கு.....!

கோ‌ழி‌க்க‌றி தொ‌க்கு.....!
 
 

தேவையானவை:

கோ‌ழி‌க்க‌றி - 1ஃ4 ‌‌கிலோ
பொடியாக நறு‌க்‌கிய வெ‌ங்காய‌ம் - 4
த‌க்கா‌ளி ‌விழுது - 3
இ‌ஞ்‌சி ‌விழுது - 2 தே‌க்கர‌ண்டி
பூ‌ண்டு- 1 தே‌க்கர‌ண்டி
ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது - 1 தே‌க்கர‌ண்டி
‌மிளகா‌ய், த‌னியா தூ‌ள் - 2 தே‌க்கர‌ண்டி
கர‌ம் மசாலா - 2 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - அரை தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது
எ‌ண்ணெ‌ய் - அரை க‌ப்
க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி - ‌‌சி‌றிது 


செ‌ய்முறை:

கோ‌ழி‌க்கறை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து து‌ண்டுகளாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுதை‌ச் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.
2 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து த‌க்கா‌ளி ‌விழுது, கர‌ம் மசாலா, ம‌‌‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌மிளகா‌ய், த‌னியா தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து 5 ‌நி‌மிட‌ம் வத‌க்கவு‌ம்.

வெ‌ங்காய‌ம் சே‌ர்‌த்து ந‌ன்கு வத‌‌ங்‌கியது‌ம், கோ‌ழி‌க்க‌றியை‌ப் போ‌ட்டு ந‌ன்கு வத‌க்கவு‌ம்.

‌பிறகு தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கோ‌ழி‌க்க‌றியை மூடி ந‌ன்கு வேக ‌விடவு‌ம்.

‌இற‌க்கு‌ம் போது கொ‌த்தும‌ல்‌லி, க‌‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌க்கவு‌ம்.

கொத்தமல்லி இலைகள் உடனே அழுகிடுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க.. பிரெஷ்ஷா இருக்கும்..!

கொத்தமல்லி இலைகள் உடனே அழுகிடுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க.. பிரெஷ்ஷா இருக்கும்..!


நாம் ஒருமுறை கொத்தமல்லியை வாங்கினால் அவற்றை சீக்கிரமாக பயன்படுத்த முயற்சிக்கவும். கொத்தமல்லி சட்னி அல்லது துவையல் போன்றவற்றை சமைத்தால் வீணாகாது. எக்காரணம் கொண்டும் காய்ந்த அல்லது கெட்டுப்போன கொத்தமல்லியை பயன்படுத்த வேண்டாம்.

1) கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்ப்பது, உணவின் சுவையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, சில சமயங்களில் உணவை அலங்கரிக்கவும் நாம் கொத்தமல்லி தழையை பயன்படுத்துவோம். கொத்தமல்லி இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எனவே, தினசரி உணவில் கொத்தமல்லியை பயன்படுத்துவது நல்லது. ஆனால், நான் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்னை, அவை சீக்கிரமாக கெட்டுவிடும். அதன் புத்துணர்ச்சியை தக்க வைக்க நாம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது கைகொடுப்பதில்லை.

2) நாம் ஒருமுறை கொத்தமல்லியை வாங்கினால் அவற்றை சீக்கிரமாக பயன்படுத்த முயற்சிக்கவும். கொத்தமல்லி சட்னி அல்லது துவையல் போன்றவற்றை சமைத்தால் வீணாகாது. எக்காரணம் கொண்டும் காய்ந்த அல்லது கெட்டுப்போன கொத்தமல்லியை பயன்படுத்த வேண்டாம். கொத்தமல்லி இலைகளை பல மாதங்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில குறிப்புகள் இங்கே.

3) நீங்கள் சந்தை அல்லது கடைகளில் இருந்து கொத்தமல்லி வாங்கும் போது, அதில் உள்ள வேர்கள் மற்றும் கெட்ட அல்லது அழுகிய இலைகளை அகற்றவும். இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இப்போது, கொத்தமல்லி இலைகளை அதில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது தண்ணீரிலிருந்து இலைகளை எடுத்து ஈரம் காயும் வரை அப்படியே வைக்கவும்.

4) ஒரு பெரிய டப்பாவில் 2 அல்லது 3 டிஷ்யூ பேப்பர் வைத்து, அதில் கொத்தமல்லி தலைகளை வைத்து அதற்கு மேல் மற்றொரு டிஷ்யூவை வைத்து டப்பாவை மூடவும். இப்போது, இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்தமல்லி தண்ணீர் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

5) கொத்தமல்லி 1 மாதம் வரை புத்துணர்ச்சியுடன் இருக்க : 

முதலில், கொத்தமல்லி வேரை வெட்டி பிரிக்கவும். இப்போது அதிலிருந்து கெட்ட அல்லது மஞ்சள் இலைகளை அகற்றவும். பின்னர், அதை இரண்டு டிஷ்யூக்களுக்கு இடையில் வைத்து காற்று புகாத டப்பா அல்லது பைகளில் அடைக்கவும். இப்போது அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். சேமித்து வைக்கும் போது அதைக் கழுவுவதில் தவறில்லை. அப்படியே சமையலுக்கு உபயோகிக்கலாம்.

6) கொத்தமல்லி இலை 2 முதல் 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கொத்தமல்லி இலைகளிலிருந்து வேர் மற்றும் தண்டுகளை வெட்டி எடுக்கவும். அதன் இலை பகுதியை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர், அவற்றை உலந்த துணியில் வைத்து உலர்த்தவும். பின்னர், அதை பொடியாக நறுக்கி, அதை ஒரு ஜிப் உணவுப் பையில் வைத்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பையில் காற்று இருக்க கூடாது.

7) கொத்தமல்லி வாங்கும் போது இதை நினைவில் கொள்ளவேண்டியவை :

கொத்தமல்லி வாங்கும் போது, ​​விலையில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் அளவு, நிறம் மற்றும் வாசனையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், உணவில் சுவை அல்லது வாசனை இருக்காது.எனவே எப்போதும் புதிய வாசனை மற்றும் வெளிர் பச்சை மற்றும் சிறிய இலைகள் கொண்ட கொத்தமல்லி இலைகளை வாங்கவும்.

வெண்டைக்காய் சாப்ஸ் செய்வது எப்படி....?

வெண்டைக்காய் சாப்ஸ் செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் அரை கிலோ

கடலை மாவு ஒரு கப்

அரிசி மாவு ஒரு கப்

மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவையான அளவு


செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவி நன்றாகத் துடைத்து குறுக்குவாட்டில் நறுக்கி நிழலில் காயவைத்து எடுக்கவும்.

இத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும்.

எண்ணெயைக் காயவைத்து சூடானதும் வெண்டைக்காய் கலவையை எடுத்து உதிர் உதிராகப் போட்டு, கொரகொரப்பாகப் பொரித்தெடுக்கவும்.

சனி, 28 செப்டம்பர், 2024

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை செய்வது எப்படி ....?

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை செய்வது எப்படி ....?


ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பாக தனித்தனி சமையல் ரெசிபிகள் இருக்கும். அந்த ரெசிபி அந்த நாட்டின் சிறப்பையும் தனி சுவையையும் பிரதிபலிக்கும் விதத்தில் அற்புதமாக தனித்துவமாகவும் இருக்கும். வகையில் தற்பொழுது சோழவள நாடு தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை செய்வதற்கான ரெசிபியை இதில் பார்க்கலாம்..

அதை செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்துக் கொள்ளலாம் ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் உளுந்து, ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலைப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒன்றாக சேர்த்து நான்கு முதல் ஐந்து முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் பருப்புகள் முழுவதும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நான்கு முதல் ஐந்து மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும்.

5 மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப 5 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நாம் ஊற வைத்திருக்கும் பருப்பில் பாதி அளவு பருப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதை மிக்ஸி ஜாரில் மீதி இருக்கும் பருப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது முறை ஊற வைத்த பருப்பு அரைக்கும் பொழுது அரை கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். நாம் இதில் ஒரு உளுந்து சேர்க்கும் பொழுது கருப்பு உளுந்து சேர்த்தால் சற்று சுவை கூடுதலாக இருக்கும்.

இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மாவு வடை சதம் இல்லாமல் அதை தோசை பதம் இல்லாமல் சற்று கெட்டியாகவும் இருக்க வேண்டும். இந்த மாவு கரைசலுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி கருவேப்பிலை இலைகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

அடுத்ததாக அதே மாபெரும் பல்லு பல்லாக கீறிய அரை முறி தேங்காய், கொடியாக நறுக்கிய சுரைக்காய் பாதிக்கப், பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம் 2 சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நல்லெண்ணெயுடன் வதக்கி சேர்த்துக் கொள்ளலாம். முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம் மட்டுமே.

இப்பொழுது அடை செய்வதற்கான மாவு தயாராக உள்ளது. இந்த மாவு வடை போன்ற கெட்டியாக இல்லாமல் தோசை மாவு போல தண்ணியாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுப்பட்ட பக்குவத்தின் சரியாக இருக்க வேண்டும்.

இப்பொழுது நடுப்பக்கம் சற்று குழிவாக இருக்கும் தோசை கல்லை அடை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு படுத்தி அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை இரண்டு குழி கரண்டி எடுத்து தோசை பதத்திற்கு வட்டமாக தட்டி தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் மாற்றி போட்டு வேக வைக்க வேண்டும்.

நாவை சுண்டி இழுக்கும் தேன் மிட்டாய் செய்முறை!

நாவை சுண்டி இழுக்கும் தேன் மிட்டாய் செய்முறை!


பெட்டிக் கடைகளில் 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்த தேன் மிட்டாயை இப்போது பார்ப்பதே அரிதாகி விட்டது.

பாரம்பரிய சுவைமிக்க நாவை சுண்டியிழுக்கும் நாட்டு திண்பண்டமான இந்த தேன் மிட்டாயை வீட்டிலேயே செய்து ருசிக்கலாம். இன்றைய தலைமுறையினரையும் மகிழ்விக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்

தோல் நீக்கிய உளுந்து – கால் கப்

சர்க்கரை – ஒன்றரை கப்

தண்ணீர் – முக்கால் கப்

எலுமிச்சைச்சாறு – 4 துளிகள்

ஃபுட் கலர் ஆரஞ்சு – சிறிதளவு

பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

அரிசி, உளுந்து இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊறவைத்து நன்கு அரைத்தெடுத்து ஃபுட் கலர் ஆரஞ்சு, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

 பிறகு சர்க்கரைப் பாகு தயாரிக்க ஒன்றரை கப் சர்க்கரையில் முக்கால் கப் நீர் சேர்த்து அரை கம்பி பதத்துக்குக் காய்ச்சி அடுப்பை அணைத்து விடவும். இதில் சில சொட்டுகள் மட்டும் எலுமிச்சைச்சாறு விட்டு வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில், அரைத்து தயாராக உள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி அதில் போட்டு நன்கு பொரித்து, உடனே அதை எடுத்து சர்க்கரை பாகில் முக்கி சிறிது நேரம் கழித்து எடுத்து வைத்தால் அருமையான தேன் மிட்டாய் தயார். விருப்பப்பட்டால் பாகில் ஊறிய மிட்டாய்களை எடுத்து தனியாக சர்க்கரையில் ஒரு புரட்டு புரட்டியும் கண்ணாடி டப்பாவில் எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டு மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை சாப்பிடலாம்.

வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி....?

வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - ஒன்று (சிறியது)
சீரகசம்பா அரிசி - 2 கப்
பட்டை, கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
பெரிய வெங்காயம், தக்காளி - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை இலை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - பாதி
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை :

சின்ன வெங்காயம் - 200 கிராம்,
முந்திரி - 10,
கசகசா - ஒன்றரை டீஸ்பூன்,
சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
புதினா - 2 டீஸ்பூன்

செய்முறை :

ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியா வைத்து கொள்ளவும்.

சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.

இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.

இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.

சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும்.

சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்.

பன்னீர் கிரேவி செய்வது எப்படி .....?

பன்னீர் கிரேவி செய்வது எப்படி .....?


புரோட்டின் சத்து நிறைந்த பன்னீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பன்னீர் வைத்து எப்பொழுதும் பிரியாணி, மசாலா, பன்னீர் 65 என செய்யாமல் சற்று வித்தியாசமாக பன்னீர் கிரேவி வைக்கும் பொழுது இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், சாதம், பரோட்டா என அனைத்திற்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும். அதுவும் அந்த கிரேவி தாபா ஸ்டைலில் காரசாரமாக இருக்கும் பொழுது சுவைக்கு பஞ்சமே இருக்காது. வாங்க தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.

இந்த பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கப் பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதை சதுர வடிவில் நறுக்கி அதன் மேல் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்துகொண்டு பத்து முதல் 15 நிமிடம் அப்படியே தனியாக ஊற வைக்க வேண்டும்.

15 நிமிடம் கழித்து ஒரு தோசை கல்லில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ஊற வைத்திருக்கும் பன்னீரை அதில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். அதிக நேரம் பொன்னிறமாக பன்னீரை வறுத்தெடுக்கும் பொழுது பன்னீர் சற்று கடினமாக மாற வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக அதை கையாளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை ஒதுக்கி கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் அரை கப் நன்கு அரைத்த தக்காளி விழுதுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது மூன்று முதல் நான்கு நல்ல பழுத்த தக்காளி பழங்களை அரைத்து அதன் விழுதுகளை கடாயில் சேர்த்து க் கொள்ளலாம்.

மசாலாவுடன் இணைந்து தக்காளி நன்கு கலந்து ஒரு கொதி வர வேண்டும். இந்த நேரத்தில் கால் கப் கெட்டியான தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தயிரும் மசாலாவுடன் இணைந்து கெட்டி பதத்திற்கு வந்தவுடன் வாசனைக்காக கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கொள்ளலாம்.

கஸ்தூரி மேத்தி இல்லாத பட்சத்தில் கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பொன்னிறமாக பொறித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி தயார். பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும் இந்த பன்னீர் கிரேவி நல்ல காரமாகவும் புளிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

இட்லிக்கு தொட்டுக்க கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி .....?

இட்லிக்கு தொட்டுக்க கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி .....?


கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று கும்பகோணம் கடப்பா. சாம்பார் மற்றும் குருமாவின் சுவைக்கு மத்தியில் இருக்கும் இந்த கும்பகோண கடப்பா பலரின் விருப்பமான உணவு வகைகளில் ஒன்று. இந்த கும்பகோணம் கடப்பாவை நம் வீட்டில் ஒரு முறையாவது செய்து பார்த்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்கலாம் வாங்க.. இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…

ஒரு கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு உருளைக்கிழங்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு மூன்றும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இரண்டு விஷல்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு விஷல்கள் வந்ததும் அழுத்தம் குறைந்த பின் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துவிட்டு பருப்பை மட்டும் நன்கு மசித்து கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி என்னை சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, அரை தேக்கரண்டி கடுகு, அரைத்தக்கரண்டி சீரகம், 2 பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தக்காளி பழம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு வதங்கி மசிந்தவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை பிசைந்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு கைப்பிடி அளவு தேங்காய், ஒரு கைப்பிடி அளவு பொரிகடலை, 5 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு சிறிய துண்டி இஞ்சி, அரை தேக்கரண்டி கசகசா, இரண்டு மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மசாலாவை கடாயில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடத்தில் நன்கு கொதித்ததும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு மல்லி இலைகளை சேர்த்து கிளற வேண்டும். மேலும் ஒரு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கும்பகோணம் கடப்பா தயார். சூடான இட்லி, , தோசை, சப்பாத்தி, இடியாப்பம் , ஆப்பம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

சேமியா இட்லி ரெசிபி.

சேமியா இட்லி ரெசிபி.
சேமியா இட்லி ரெசிபி.



தேவையானபொருட்கள்: 

சேமியா - 2 கப் 

ரவா - 1 கப் 

தயிர் - 3 கப் 

உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு 

"ஈனோ" ஃபுரூட் சால்ட் - 1 டீஸ்பூன் 

தாளிக்க: 

எண்ணை - 4 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 

மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 

இஞ்சி - ஒரு சிறு துண்டு 

முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்) 

செய்முறை: 

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் சேமியா மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை). வறுத்த சேமியா-ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் அதில் ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றவும். ஃபூருட் சால்ட் பொங்கி நுரைத்து வரும். மாவுடன் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும். மேற்கண்ட அளவிற்கு, சுமார் 15 இட்லி வரை கிடைக்கும்.

மாலை நேர டிபனுக்கு ஏற்ற `சேமியா வெஜ் கட்லெட்'. ரெசிபி.

மாலை நேர டிபனுக்கு ஏற்ற `சேமியா வெஜ் கட்லெட்'. ரெசிபி.


தேவையான பொருட்கள்:

வறுத்த சேமியா - ஒரு கப்

உருளைக் கிழங்கு - 2

காரட் - 1

பச்சைப் பட்டாணி - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - சிறுதுண்டு

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

மக்காச்சோள மாவு - 1/2 கப்

கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

பிரெட் தூள் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

ரீபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை:

சேமியாவை 3 கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.

சிறிது எண்ணையைக் காயவைத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும். அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறி மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

விரும்பிய வடிவில் கட்லெட்கள் தயாரித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்த மக்காச் சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.

காயும் எண்ணையில் பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாறவும்.

இனிப்பு பூரி செய்வது எப்படி ...?

இனிப்பு பூரி செய்வது எப்படி ...?


தேவைப்படும் பொருட்கள்:

கோதுமை மாவு,

துருவிய தேங்காய்,

சர்க்கரை,

நெய்,

முந்திரி,

எண்ணெய்,

உப்பு.

செய்முறை:

முதலில், கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி தட்டும் பதத்திற்கு மாவை தயாரிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நன்கு உலர வைத்த துருவிய தேங்காய், சர்க்கரை, நொறுக்கிய முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் ஈரப்பதமின்றி நன்கு உலர்ந்திருந்தால் பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார்.

சப்பாத்தி உருட்டியை பயன்படுத்தி பூரியை தயாரிக்கவும். தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பூரியினுள் வைத்து மடித்து விருப்பத்திற்கேற்ப ஓரங்களில் வடிவமைக்கவும்.

ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை பொன்னிறம் வரும் வரையில் நன்கு பொரித்தெடுக்கவும்.

இப்போது குழந்தைகளுக்கு பிரியமான இனிப்பு பூரி சுவைப்பதற்கு தயார்.

கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு செய்வது எப்படி?

கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு செய்வது எப்படி?


 தேவையான பொருட்கள்: 

சிறு துண்டுகளாக நறுக்கிய கமலா ஆரஞ்சுத் தோல் - 100 கிராம் (அரை கப்), 

புளி - நெல்லிக்காய் அளவு, 

பச்சை மிளகாய் - 5 (கீறிக் கொள்ளவும்), 

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, 

அச்சு வெல்லம் - 1, 

மஞ்சள்தூள் - சிறிதளவு, 

கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன், 

வறுத்து அரைத்த எள்ளுப்பொடி - ஒரு டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

புளியை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை சேர்த்து சிவப்பாக வறுக்கவும். கமலா ஆரஞ்சுத் தோல், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பிறகு, வெல்லம், கறிவேப்பிலை, எள்ளுப்பொடியை சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். 

குறிப்பு:

கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு: 

எள்ளுப் பொடிக்கு பதிலாக கசகசாவை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை வித்தியாசமாக இருக்கும்

வெரைட்டி வெஜ் ரிங்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

வெரைட்டி வெஜ் ரிங்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம், 

வெண்டைக்காய், 

குடமிளகாய் - தலா 2,

புடலங்காய் (சிறியது) - ஒன்று,

தயிர் - அரை கப்,

கடலை மாவு - ஒரு கப்,

சோள மாவு, மைதா மாவு - தலா கால் கப்,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு, 

தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி... தனித்தனியே பிரித்து எடுக்கவும். வெண்டைக்காயையும் வட்டமாக வெட்டவும். புடலங்காயைத் தோல் சீவி, உள்ளிருக்கும் விதை, பஞ்சு நீக்கி வட்டமாக நறுக்கவும். குடமிளகாயில் இருக்கும் விதைகளை நீக்கி, அதனையும் வட்ட வடிவில் நறுக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் உப்பு சேர்த்த தயிர், நறுக்கிய காய்களைச் சேர்த்து சிறிது நேரம்
ஊறவிடவும். இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, மைதா, மிளகாய்த்தூள், பூண்டு விழுது, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். தயிரில் ஊறிய காய்களை எடுத்து மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, வெந்ததும் எடுக்க... வெரைட்டி வெஜ் ரிங்ஸ் ரெடி!

வெரைட்டி வெஜ் ரிங்ஸ்: 

அரைத்த புதினா, கொத்தமல்லி விழுதை மாவுடன் கலந்தால் சுவையும், மணமும் கூடும்.

வியாழன், 26 செப்டம்பர், 2024

ஸ்வீட் கார்ன் கபாப் செய்வது எப்படி...?

ஸ்வீட் கார்ன் கபாப் செய்வது எப்படி...?
 
 

தேவையானவை:

ஸ்வீட் கார்ன் - 2
உருளை கிழங்கு (வேகவைத்து மசித்தது ) - 1 கப்
பன்னீர் (துருவியது) - 1ஃ2 கப்
வெங்காயம் (நறுக்கியது ) - 1ஃ2 கப்
இஞ்சி (பொடியாக நறுக்கியது)- சிறிது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி- தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1ஃ4 ஸ்பூன் 
தனியா தூள் - 1ஃ2 ஸ்பூன் 
சீராக தூள் - 1ஃ2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை:

ஸ்வீட் கார்னை வேகவைத்து மசித்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தின் மீது சிறிது உப்பு தூவி சிறிதுநேரம் அப்படியே வைக்கவும்.

ஸ்வீட் கார்ன் கலவையுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், 
மஞ்சள் தூள்,தனியா தூள், சீராக தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்கவும்.

உப்பு சேர்த்த வெங்காயத்தை நன்றாக பிழிந்து தண்ணீர் இல்லாமல் இந்த கலவையுடன் கலக்கவும்.

நன்றாக கலந்த பிறகு இந்த கலவையை கட்லட்டுகலாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

வாழைப்பூ கோலா உருண்டை செய்வது எப்படி ....?

வாழைப்பூ கோலா உருண்டை செய்வது எப்படி ....?


சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை என்பது அசைவ பிரியர்களின் பிடித்தமான அசைவ உணவுகளில் ஒன்று. அதை சுவையில் சைவ பிரியர்களுக்கு பிடித்த வகையில் வாழைப்பூ வைத்து அருமையான கோலா உருண்டை செய்யலாம் வாங்க.. இந்த வாழைப்பூ கோலா உருண்டை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

இந்த கோலா உருண்டை செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் ஒன்று, சின்ன வெங்காயம் 10, வெள்ளை பூண்டு ஐந்து, ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி கசகசா, ஒரு தேக்கரண்டி பொரிகடலை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

இவற்றை அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. அரை தேக்கரண்டி உப்பு, அரைத்து கரண்டி மிளகாய் தூள், நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாழைப்பூவை இதனுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று பரபரமன அரைத்துக் கொண்டால் போதுமானது. அரைத்த இந்த விழுதுகள் நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பொரிகடலை மாவாக சேர்த்து மாவை கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மல்லி இலைகளை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது கோலா உருண்டை தயாராக உள்ளது.

ஒரு அகலமான கடாயில் பொரித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் கோலா உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். முன்னும் பின்னும் இருபுறமும் பொன்னிறமாக பொறிந்ததும் தட்டிற்கு மாற்றிவிடலாம்.

மாலை நேரங்களில் டீ காபி குடிக்கும் பொழுது இந்த கோலா உருண்டை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.