முட்டை கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1ஃ4 கிலோ
முட்டை - 1 ( கெட்டியாக வேக வைத்தது )
மிளகாய்ப் பொடி - ¾ தேக்கரண்டி
பொடி உப்பு - 1ஃ4 தேக்கரண்டி
பால் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மைதா - ஒரு மேஜைக்கரண்டி
உலர்ந்த ரொட்டித்தூள் - 1ஃ2 கப்
நெய் அல்லது எண்ணெய் - 200 மிலி
செய்முறை:
வேக வைத்த முட்டையின் ஓட்டை உரித்து எட்டு துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை மெதுவாகும் வரை வேக வைத்துத் தோலுரித்துச் சூட்டுடன் பால், வெண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு மாவாகக் கட்டியின்றிப் பிசையவும்.
கையில் மைதா மாவு தொட்டுக் கொண்டு உருளைக் கிழங்கு கலவையைக் கமலாப் பழ அளவு உருண்டை எடுத்துக் கிண்ணம் போல் செய்து ஒரு முட்டைத் துண்டை உருண்டைக்குள் வைத்து மூடி வெடிப்பின்றி உள்ளங்கையால் தட்டவும்.
மைதா மாவில் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுத் தோசை மாவு போல் கரைக்கவும். வாணலியில் நெய்யை ஊற்றிப் புகை வந்ததும் இந்த ஹகட்லெட்'டை மைதாமாவில் தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி நெய்யில் இரண்டு பக்கமும்பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
கட்லெட் மீது ரொட்டித்தூள் படிந்து இருக்கும் படி அமுக்கவும். மாவாகப் பிசைந்த உருளைக்கிழங்கு தளர்த்தியாக இருந்தால் தேவையான அளவு மைதாமாவு அல்லது அரிசி மாவு சேர்க்கலாம்.
0 Comments: