புதன், 11 செப்டம்பர், 2024

பாலக் சப்பாத்தி.......!

பாலக் சப்பாத்தி.......!

தேவையான பொருள்கள்:

பாலக்கீரை - 2 கைப்பிடி
கோதுமை மாவு - 2 கப்
ரவை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் அல்லது பட்டர்


செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கீரையை கழுவிக் வைக்கவும். கீரையை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவில் உப்பு, ரவை சேர்த்து நன்கு கலந்து, அரைத்த கீரையை ஊற்றி சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் தடவி அரைமணி நேரம் வைக்கவும்.பின் மாவினை நீளவாக்கில் சமமாக உருட்டி, ஒரே அளவாக வெட்டிக் கொள்ளவும்.வெட்டிய துண்டுகளை இருபுறமும் அழுத்தி வைக்கவும்.

இதனால் சப்பாத்தி ஒரே மாதிரியாக, வட்டமாக வடிவம் மாறாமல் வரும். தனியாக உருண்டை பிடித்துக் கொண்டிருக்க தேவையில்லை.

சப்பாத்தி மாவை ஒரே சீராக, மேலும் நன்கு உப்பி வருவதற்கு சற்று திக்காக திரட்டிக் கொள்ளவும்.

சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். இருபுறமும் பட்டர் தடவினால் சுவைக்கூடும்.சத்தான, கலர்ஃபுல்லான, சுவையான பாலக் சப்பாத்தி ரெடி. பார்ட்டிகளுக்கு செய்ய புதுவிதமாக இருக்கும்.
Previous Post
Next Post

0 Comments: