வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு செய்வது எப்படி?

கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு செய்வது எப்படி?


 தேவையான பொருட்கள்: 

சிறு துண்டுகளாக நறுக்கிய கமலா ஆரஞ்சுத் தோல் - 100 கிராம் (அரை கப்), 

புளி - நெல்லிக்காய் அளவு, 

பச்சை மிளகாய் - 5 (கீறிக் கொள்ளவும்), 

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, 

அச்சு வெல்லம் - 1, 

மஞ்சள்தூள் - சிறிதளவு, 

கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன், 

வறுத்து அரைத்த எள்ளுப்பொடி - ஒரு டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

புளியை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை சேர்த்து சிவப்பாக வறுக்கவும். கமலா ஆரஞ்சுத் தோல், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பிறகு, வெல்லம், கறிவேப்பிலை, எள்ளுப்பொடியை சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். 

குறிப்பு:

கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு: 

எள்ளுப் பொடிக்கு பதிலாக கசகசாவை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை வித்தியாசமாக இருக்கும்
Previous Post
Next Post

0 Comments: