தேவையான பொருட்கள்
1. மைதா மாவு - கால் கிலோ
2. தேங்காய் துருவல் - கால் கப்
3. அரிசி மாவு - 100 கிராம்
4. வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
5. ரவை - கால் கப்
6. வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
7. மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
8. பெருங்காயப் பொடி - 3 சிட்டிகை
9. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
1. முதலில் மைதா மாவு, ரவை இரண்டையும் கலந்து மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி குக்கரில் 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. வேக வைத்து ஆறிய பின் சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. சலித்து வைத்துள்ள மாவுடன் தேங்காய் துருவல், அரிசி மாவு, எள், வெண்ணெய், மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, உப்பு அனைத்தையும் சூடான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
4. பின்பு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு குழலில் போட்டு பிழிந்து முறுக்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
0 Comments: