செவ்வாய், 3 செப்டம்பர், 2024

கடலைக்கறி

கடலைக்கறி....

தேவையான பொருள்கள்

கறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - 6 + 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி

செய்முறை

கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும்.

வதக்கி கொதிக்க வைத்தவற்றுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த கலவையில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்..

கலவை நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.

புட்டுடன் பரிமாற சுவையான கேரள கடலைக்கறி தயார்.
Previous Post
Next Post

0 Comments: