மண்ணீரல் வலுப்பட உதவும் உணவு
வைத்தியம் 1
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 லிட்டர்
செய்முறை:
முதலில் நாம் எடுத்துவைத்திருந்த 1 பீர்க்கங்காயை அதன் மேலே உள்ள பச்சை நிற தோலை நீக்கிவிட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள்.இந்த கொதிக்க வைத்த பீர்க்கங்காய் தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். அதன் சூடு ஆறியவுடன் பீர்க்கங்காய் நீரை குடியுங்கள். இதனை தொடர்ந்து குடித்துவந்தால் நல்ல தீர்வை அளிக்கும்.
வைத்தியம் - 2
வெண் பூசணி பார்லிக் கஞ்சி…
தேவையான பொருட்கள்:
வெண் பூசணிக்காய் தோல், விதையுடன் நறுக்கித் துண்டாக்கியது - 100 கிராம்
பார்லி - 3 தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.பின்னர் நீரில் பார்லியைப் போட்டு வேக வைக்கவும்.பார்லி நன்கு வெந்தவுடன் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெண்பூசணித் துண்டுகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.நன்கு வெந்தவுடன் இறக்கி வைத்து மிதமான சூட்டில் குடித்து வரவும்.
இரவு படுக்கப் போகும் முன்..
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
அனைத்து அசைவ உணவுகள் மற்றும் அனைத்து எண்ணையில் பொரித்த,வருத்த (சைவ) உணவுகள் கண்டிப்பாக சாப்பிடகூடாது.
மண்ணீரலின் ஆரோக்கியத்தை காக்க, தாகம் எடுக்கும் போதெல்லாம் தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும்.
கீரை, காய்கறிகள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பது நல்லது.நாவல்பழ. கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவை மண்ணீரலுக்கு உகந்தது.
காலை…… 5 முதல் 7 வரை…
பெருங்குடல் வேலை பார்க்கும் நேரம். காலை[மலம் கழிக்கவேண்டும்] கடன்களை இந்த நேரத்தில் முடிக்க வேண்டும். இதனால் மலம் கழிப்பதில் சிக்கல் இருக்கவே இருக்காது.
காலை………7 முதல் 9 வரை…
வயிறு உணவை எதிர்நோக்கி காத்திருக்கும் நேரம். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு வரவேவராது.
காலை…… 9 முதல் 11 வரை…
மண்ணீரல் நேரம். நாம் சரியான நேரத்தில் சாப்பிட்ட உணவை செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் தண்ணீரோ உணவோ சாப்பிடக்கூடாது.
ஆங்கில மருத்துவத்தில் நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகள்!
பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடும். மிதமான பாதிப்பு இருந்தால்………
மதுவைத் தவிர்த்து, உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தால் போதும்.
தீவிர பாதிப்பு இருந்தால் மண்ணீரலை அகற்றி விடுவார்கள்.
ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பங்கு வகித்தாலும், மண்ணீரல் இல்லாமலும் வாழ முடியும். இந்நிலையில்……
ஒர் அளவுக்கு தான் கல்லீரல், நிணநீர் கட்டிகள் இதன் பணியை செய்யும்.அதே சமயத்தில் மண்ணீரலை அகற்றியவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு கோளாறுகள் மற்றும் நோய்கள் உடலில் இருப்பவர்களுக்கு மண்ணீரலும் அகற்றப்பட்டால், மேலும் பாதிப்புகள் 100% அதிகமாகும்.
மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால், ஜீரண மண்டலமும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும்.மகத்துவம் நிறைந்த மண்ணீரல் மீது அதிக அக்கறை கொள்வோம்.அதற்கு ஏற்றபடி வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வோம்.
0 Comments: