புதன், 25 செப்டம்பர், 2024

ஹனி கேக் செய்வது எப்படி...?

ஹனி கேக் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:

மைதா மாவு 1 கப்
முட்டை 4
பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
தேன் 4 ஸ்பூன்
சக்கரை 1\2 கப் + 1/4 கப்
எண்ணெய் 1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
மிஸ்எட் பிருட் ஜாம் 2 ஸ்பூன்
காய்ந்த தேங்காய் துருவல் 1/2 கப்
பதம் முந்திரி பருப்பு துருவல்


செய்முறை:

முட்டை வெள்ளை எடுத்து கொண்டு ஹண்ட் பீட்டர் யில் நன்கு அடித்து கொள்ளவும்
பின்பு பொடி செய்து வைத்த சக்கரை சிறிது சிறிதாக அதில் சேர்த்து நன்கு அடிக்கவும்
இந்த நிலையில் இருக்கும் போது ஆஃப் செய்யவும்
பின்பு முட்டை மஞ்சள் கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ,எண்ணெய், சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு அதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் , பேக்கிங் சோடா, சலித்து சேர்க்கவும்
பின்பு மேல மேல கலக்கவும்.. பின்பு அதில் அடித்து வைத்த முட்டை வெள்ளை சிறிது சிறிதாக சேர்க்கவும் ..
பின்பு வெண்ணெய் தடிவிய பேக்கிங் டின் யில் ஊற்றி ஓவென் யில் 150℃ 40 நிமிடம் பேக் செய்யவும்
பின்பு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 1/4 கப் சக்கரை சேர்த்து பகு கசவும் .. அடுப்பை அணைத்து விட்டு அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்
பின்பு 2 ஸ்பூன் ஜாம் அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை கலந்து இறக்கவும் .. பின்பு அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்
பின்பு கேக் வெந்த உடன் அரா வைக்கவும் .
பின்பு கேக் முழவதும் டூத் பிக் வைத்து துளை போடவும்
பின்பு அதில் சக்கரை தேன் பகு ஸ்பூனில் ஊற்றவும்
பின்பு அதில் ஜாம் தேன் கலவை ஸ்பூனில் ஊற்றவும்
பின்பு அதில் காய்ந்து தேங்காய் துருவல் துவவும்
நறுக்கிய பதம் முந்திரி பருப்பை நன்கு தூவவும்
கட் செய்து பரிமாறவும்
சுவையான ஹனி கேக் ரெடி.
Previous Post
Next Post

0 Comments: