வெள்ளி, 13 செப்டம்பர், 2024

உங்க குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருக்கா ?

உங்க குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருக்கா ?

இன்று பெரியவர்களை விட உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால் டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. எனவே குழந்தைகளுக்கான சில எளிய வழிமுறையினை இங்கு காண்போம்.

பெரும்பாலும் குழந்தைகளின் உடல் பருமன் அதிகமாவதற்கு முக்கிய காரணம், அவர்களின் உடலில் இருக்கும் மரபணுக்களே ஆகும். ஏனெனில் மரபணுவில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் குண்டாவார்கள். இப்பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், குழந்தைகளை கவனிக்க முடியாமல் விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பல பாதிப்புகளுக்கு உண்டாகலாம். எனவே குழந்தைகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டே வர வேண்டும். 

குழந்தைகளுக்கு அதற்கேற்றவாறு உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகமான உணவுப் பொருட்களை கொடுத்தால், அதில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குழந்தைகளின் உடலில் சென்று உடல் பருமனை ஏற்படுத்திவிடும். எனவே குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

பெரும்பாலும் குழந்தைகள் செல்போனில் கேம் விளையாடுவதையே பழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்படும். எனவே அவர்களை ஓடுதல், நடத்தல், குதித்தல், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாடசொல்ல வேண்டும். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

குழந்தைகள் விரும்பி கேட்கிறார்கள் என அதிகமான அளவில் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பிரன்ச் ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன், மில்க் ஷேக் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

ஏனெனில் இவற்றிலுள்ள அதிக அளவு கொழுப்புக்கள், பிற்காலத்தில் விரைவாக இதய நோயை ஏற்படுத்தி விடும். எனவே குழந்தைகளுக்கு இந்த உணவுகளால் ஏற்படும் தீமைகளை கூறி புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகள் குண்டாவதற்கு முக்கிய காரணம் அதிக அளவு கொழுப்பு உள்ள பால். எனவே அதிக அளவில் கொழுப்புக்கள் உள்ள பாலைக் கொடுப்பதை விட, குறைந்த அளவில் கொழுப்புக்கள் இருக்கும் பாலை கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் குண்டாக இருப்பதால் நண்பர்களாலும், உறவினர்களாலும், மற்றவர்களாலும் கிண்டல் செய்யப்படுவார்கள். இதனால் குழந்தைகள் விரைவில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். எனவே அவர்கள் எடையை குறைக்க ஊக்குவிப்பதோடு, அவர்களுடன் அன்பாக, பாசத்துடன் நடக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காமல், ஏதேனும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து கொடுக்கலாம்.
Previous Post
Next Post

0 Comments: