தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு 4கப்
எள் 2 கப்
வேர்க்கடலை 2 கப்
தேங்காய் துருவியது 1 கப்
ஏலக்காய் பொடி 8 சிட்டிக்கை
வெல்லம் 2 கப்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
பூரணத்திற்கு கடாயில் எண்ணெய் இல்லாமல் சிறு தீயில் வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை இடித்து அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவலை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் அடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு மாவை சிறு உருண்டையாக உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை அதில் வைத்து தட்டையாக வட்டவடிவில் தட்டி, அதில் தயாராக வைத்துள்ள பூர்ணத்தை வைத்து மடித்து இட்லிக் குக்கரில் வைத்து மூடி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான பூரண கொழுக்கட்டை தயார்.
0 Comments: